தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 15 ஜூன், 2017

பெண்களே உங்களிடம் ஆண்கள் எதிர்பார்க்கும் 6 விடயங்கள் இது தான்: இதை புரிந்து கொண்டால் உறவில் முறிவே ஏற்படாது..!

பெண்கள் என்றுமே சற்று தன்னம்பிக்கை அதிகம் உடையவர்கள் ஆண்களைக் காட்டிலும். தான் செய்யும் காரியங்கள் என்றுமே சரி என நம்புவர்கள்.
பெண்கள் செய்யும் செயலானது அவர்களை மட்டும் சார்ந்திருந்தால் செய்வது சரிதான். ஆனால் காதல் என்பது உங்களை மட்டும் சார்ந்து அல்ல. உயிரும் உள்ளமும் உள்ள இன்னொரு ஜீவனையும் சார்ந்தது. ஆண்கள் உங்களை புரிந்துக் கொள்ள வேண்டும் உங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என நினைக்கும் நீங்கள் உங்கள் காதலரைப் புரிந்து செயல்பட்டுள்ளீரா?
உங்கள் காதலரைக் காதலிக்கும் நீங்கள் அவர் காதலிக்கும் வி‌ஷயங்களையும் காதலிக்கிறீர்களா?
காதலில் சில சமயங்கள் பெண்கள் எடுத்துக் கொள்ளும் சிரத்தையானது ஆண்களுக்கு சில கஷ்டங்களைக் கொடுக்கின்றது.
பெண்கள் ஆண்களிடம் எதிர்ப்பார்க்கும் விஷயங்கள் ஆயிரம் இருக்கலாம். ஆனால் ஆண்கள் பெண்களிடம் எதிர்ப்பார்ப்பது இந்த ஆறு விஷயங்கள்தான்.
நீங்கள் இந்த 6 விஷயங்களைச் செய்தாலேஅவர்கள் உங்கள் வசம் இருப்பார்.
ஆண்கள் எதுவுமே யோசிக்காமல் இருப்பதை ரசியுங்கள்!
படைப்பிலே ஆணும் பெண்ணும் பல வித்தியாசங்களைக் கொண்டவர்கள். பெண்கள் எப்பொழுதுமே யோசித்துக் கொண்டே இருப்பார்கள், செய்வது ஒரு வேலையாக இருந்தாலும் யோசிப்பதோ ஆயிரம் காரியங்களைப் பற்றி. ஆனால் ஆண்களால் சில நேரங்களுக்கு எதைப்பற்றியும் யோசிக்காமல் இருக்க முடியும் என ஆய்வு சொல்கிறது. ஆண்கள் யோசிக்காமல் இருக்கும் நேரத்தைக் கண்டாலே சில பெண்கள் எரிச்சலாகி சண்டை போட ஆரம்பித்துவிடுவார்கள். உங்கள் காதலர் இந்நிலையில் இருக்கும் போது நீங்கள் அவரின் மௌனத்தைக் காதலியுங்கள். உங்கள் காதல் அழகாக இருக்கும்.
ஆண்கள் செய்த தப்பை அடிக்கடி சொல்லிக்காட்டாதீர்கள்
உங்கள் காதலர் ஏதேகினும் தவறு செய்து விட்டால் அதை மன்னிக்கவும், தப்பு செய்துவிட்டால் அதைப் பற்றி திறந்த மனதுடன் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். அவர் செய்த தப்பை உங்களால் ஜீரணிக்க முடிந்தால் அதன் பிறகு அந்த தப்பை பற்றி பேசாதீர்கள். நடந்த தப்பை பற்றி பல முறை சுட்டிக் காட்டுவது அவருக்கு வேதனையைத்தான் அளிக்கும். நீங்கள் தப்பு செய்யும் நேரத்தில் உங்களை உங்கள் காதலர் புரிந்துக் கொள்ள வேண்டும் என நினைக்கும் நீங்கள் அதே புரிதலுடன் அவருடன் நடந்துக் கொள்ள வேண்டும்.
பலர் முன்னிலையில் அவரை தாழ்த்திப் பேசாதீர்கள்
நீங்கள் எவ்வளவு பெரிய விஷயத்தைச் சாதித்திருந்தாலும், உண்மையின் உருவாக காட்சியளித்தாலும் எந்தக் காரணத்தைக் கொண்டும் உங்கள் காதலரை பிறர் முன்னிலையில் தாழ்த்திப் பேசவோ, செயல்படவோ நினைக்காதீர்கள். தன்னுடைய காதலி, தான் தவறு செய்யும் நேரத்தில் அதைச் சுட்டிக் காட்டவும், துவண்டு விழும் நேரத்தில் அரவணைக்கவும்தான் ஆண்கள் விரும்புவார்கள். அவர் செய்யும் தவறை நீங்கள் அவரிடம் தனியாக அழைத்துச் சுட்டிக் காட்ட வேண்டுமே தவிற அனைவரின் முன்னிலையிலும் இல்லை. நீங்கள் அவ்வாறு செய்யவிட்டால் உங்களை நீங்களே அவமானப்படுத்துவதற்குச் சமம்.
மிதமிஞ்சிய உடையலங்காரம் தேவையில்லை
நீங்கள் உங்கள் காதலரைப் பார்க்கச் செல்லும் போது அழகாக இருக்க நினைப்பது உண்மைதான். அதற்காக அளவுக்கு மிஞ்சிய ஒப்பனையும் உங்கள் உடல்வாகிற்கு பொறுந்தாத உடையலங்காரமும் உங்கள் காதலரை முகம் சுழிக்க வைக்கும். நீங்கள் இயற்கையான அழகோடு இருப்பதைத்தான் உங்கள் காதலர் விரும்புவார்.
நச்சரிக்காதீர்கள்
உங்கள் காதலர் உங்களை மட்டும்தான் முக்கியமாக நினைக்க வேண்டும் எனவும் உங்களுடன் மட்டும்தான் நேரத்தை செலவு செய்ய வேண்டும் என அவரை நச்சரிக்காதீர்கள். அவருக்கென்ற நேரத்தை அவரருக்காக மட்டுமே செலவிடுவததை விரும்புங்கள். நீங்கள் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினாலும் அவருக்கென்ற தனி உலகம் உண்டு. அந்த உலகத்தை விரும்புங்கள்,
அவர் நண்பர்களுடன் செலவிடும் நேரத்தை கேள்வி கேட்காதீர்கள்
நீங்கள் உங்கள் காதலுருக்கு அறிமுகம் ஆவதற்கு முன்னமே அவரின் நண்பர்களுடன்தான் அவர் அதிகம் நேரத்தை செலவிட்டிருப்பார். உங்களைக் காதலிக்க ஆரம்பித்தப் பிறகு அவரின் நேரம் இருபிரிவினருக்கும் பிரிக்கப்பட்டுள்ளது. உங்களிடம் செலவு செய்யும் நேரம் போல்தான் அவர் நண்பருடனும் செலவிட நினைப்பார். அவர் உங்களின் காதலையும் அக்கறையையும் புரிந்துக் கொண்டு செயல்படுவது போல நண்பர்கள் மேல் அவர் கொண்டிருக்கும் நட்பின் அவசியத்தையும் நீங்கள் புரிந்துக் கொண்டு செயல் பட வேண்டும்.
- See more at: http://www.manithan.com/news/20170615127712#sthash.5oSgHxTS.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக