சிறுநீரை பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களுக்கு சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். சிறுநீர் என்ன பேட்டரியா? இது என்ன அறிவில்லாத செயல் என பலர் நினைப்பது உண்டு. நுண்ணுயிர் எரிபொருள் செல்களைப் பயன்படுத்தி மின்சாரத்தை மின்சக்திக்கு மாற்றும் புதிய முறையை பிரிஸ்டல் ரோபோடிக்ஸ் உயிரி பொறியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். குறைவான அளவு சிறுநீரில் ஸ்மார்ட்போன்கள் ஆறு மணி நேரம் சார்ஜ் ஆகும். ஆனால் இந்த முறை மூலமாக ஸ்மார்ட்போனுக்கு மூன்று மணி நேரத்தில் சார்ஜ் செய்ய முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரிஸ்டல் பயோ ஆற்றல் மையத்தின் இயக்குனர், பேராசிரியர் அயோனிஸ் இரோபுலஸ் கூறுகையில், "இந்த திட்டம் மூலம் கழிவுப்பொருள்களில் இருந்து அதிகபட்ச மின்சாரம் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்காக நுண்ணுயிர் எரிபொருள் செல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. நாம் இயற்கையாக உற்பத்தி செய்யும் கழிவுகளை நுண்ணுயிரிகள் நேரடியாக மின்சாரமாக மாற்றுகிறது. அவை துணைப்பொருளாக எலக்ட்ரான்களை தயாரிக்கின்றன. எலக்ட்ரான்கள் உற்பத்தி ஆவதன் மூலம் மின்சாரம் உருவாகிறது. இந்த நுண்ணுயிரிகள் 30 முதல் 40 மில்லிவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இது ஸ்மார்ட்ஃபோன், சிறிய விளக்குகளை சார்ஜ் செய்ய போதுமானதாகும்" என்றார். http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1498468495&archive=&start_from=&ucat=1& |
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
புதன், 28 ஜூன், 2017
சிறுநீர் மூலம் செல்போனுக்கு சார்ஜ்! (படம் இணைப்பு )
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக