தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, June 8, 2017

பகவான் ஜெகந்நாதர் ஆலயம் ஒரு அதிசயம்!


உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் அமைந்திருக்கிறது பகவான் ஜெகந்நாதர் ஆலயம். இந்த கோவிலில் வருடந்தோறும் ஓர் அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது.

ஆம். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் தொடங்குவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பாக, அந்த கோவிலின் உள் பகுதியில் மழை பெய்யத் தொடங்கிவிடுகிறது. ஏழு நாட்களும் மழை நிற்பதே இல்லையாம்.

ஆனால் வெளியில் பருவ மழை பெய்யத் தொடங்கியதும் கோவிலின் உள்ளே மழை நின்று விடுகிறது. இதற்கான காரணம் அந்த ஊர் மக்களுக்கே தெரியவில்லை. அந்த கோவிலின் உள்ளே மழை பெய்யத் தொடங்கிய ஏழு நாட்களில் பருவ மழை தொடங்கிவிடும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இதற்கான காரணத்தைக் கண்டறிய உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆராய்ச்சியாளர்கள் வருகிறார்கள். ஆனால், இதுவரையிலும் அதற்கான விடை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அது ஒரு புரியாத புதிராகவே இன்று வரை இருந்து வருகிறது.

No comments:

Post a Comment