தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 29 ஜூன், 2017

சிம்ம ராசியின் தீய குணங்கள்....

ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதியங்கள் மற்றும் எதிர்மறை குணங்கள் உள்ளது. அந்த குணங்கள் தான் ஒருவரை நல்லவர் அல்லது கெட்டவர் என்பதை தீர்மானிக்கிறது.
அதன்படி, சிம்ம ராசி உள்ளவர்களுகு இருக்கும் குணாதிசயங்கள் மற்றும் தீய குணங்கள் எப்படி இருக்கும் என்பதை பார்த்து விடலாம்.
சிம்ம ராசியின் குணாதிசங்கள்?
சிம்ம ராசி தைரியம் மற்றும் கம்பீரத்தை குறிக்கிறது. எனவே சிம்ம ராசி உள்ளவர்கள் அன்பானவர்களாக, காதலில் சிறந்தவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் மிக நெருக்கமானவர்களாக இருப்பார்கள்.
சிம்ம ராசிக்காரர்கள், பொதுவாக நம்பகமானவர்கள் மற்றும் அன்பானவர்கள். தனது ராசி உள்ளவர்களுக்கு எப்போதுமே உண்மையாக இருப்பார்கள்.
சிம்ம ராசியின் எதிர்மறை குணங்கள்?
  • சிம்ம ராசிக்காரர்கள் தங்களை வலுவான மனநிலை உடையவர்கள் என நினைத்துக் கொள்வார்கள். தங்களது கருத்துக்களையும், முடிவுகளையும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள். இதனால் அவர்கள் எப்போதும் தான் சரியாக இருப்பதாக நம்புவார்கள்.
  • சிம்ம ராசிக்காரர்கள் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பிக் கொள்வார்கள். அவர்களுக்கு தலைமை குணம் இயற்கையாகவே இருக்கும். தலைமை பொருப்பில் இருப்பவர்கள், மற்றவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வார்கள்.
  • சிம்ம ராசிக்காரர்கள் பிறரால் அதிகமாக காயப்படுத்தப் படுவார்கள். அவர்கள் அன்பிற்கும், பாசத்திற்கும் அதிகமாக ஏங்குவார்கள். ஆனால் இதை மற்றவர்களிடம் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும், எதிலும் உயர்ந்ததையே எதிர் பார்ப்பார்கள்.
  • சிம்ம ராசிக்காரர்கள் தங்களது இலக்குகளை விரைவாக அடைவதில் சிறந்தவராக இருப்பினும் அவர்கள் சில தவறுகளையும் செய்வார்கள். அவர்களுக்கு ஆர்வம் மற்றும் பதட்டம் இருக்கும்.
http://news.lankasri.com/astrology/03/127811?ref=magazine

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக