மத்யாசனம் செய்வது எப்படி?
முதலில் தரையில் மல்லாக்க படுத்துக் கொண்டு கால் மற்றும் கைகளை நேராக வைத்து, மெதுவாய் மூச்சு விட வேண்டும்.
பின் மெதுவாக இரண்டு முழங்கைகளை ஊன்றி உடலை மட்டும் தூக்க வேண்டும். ஆனால் இடுப்புப் பகுதி தரையிலேயே இருக்க வேண்டும்.
அதன் பின் மார்பினை மேலே உயர்த்தி, தலையை தரையில் முட்டுவது போல வைத்து, மெதுவாக மூச்சை இழுத்து விட வேண்டும்.
கழுத்திற்கு அதிகம் சிரமம் கொடுக்காதவாறு மெதுவாக மார்பை தரையில் பதித்து இயல்பு நிலையில் படுத்துக் கொள்ள வேண்டும்.
பலன்கள்
- கழுத்து, தோள்பட்டை வலியை குணப்படுத்தும்.
- சுவாசத்தை சீர்படுத்தும்.
- மார்புக் கூடு விரிவடையும்.
- தைராய்டு சுரப்பிகள் நன்றாக இயங்கும்.
குறிப்பு
அதிக மற்றும் குறைவான ரத்த அழுத்தப் பிரச்சனை உள்ளவர்கள், முதுகு மற்றும் இடுப்புப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.
http://news.lankasri.com/fitness/03/126451?ref=right_featured
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக