இளம் வயது பருவத்தை கடந்து சென்றாலே, நம் உடலில் ஒவ்வொரு பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பாக இருக்கும். ஆனால் அதை நாம் அலட்சியப்படுத்தவே கூடாது. அதிலும் 40 வயதை கடந்த பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பு, அடிக்கடி தலைவலி மற்றும் தைராய்டு போன்ற பிரச்சனைகள் அதிகமாக ஏற்படும். 40 வயதை கடந்த பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்? பெண்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு, அவர்களின் உடம்பில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் முதன்மை காரணமாக அமைகிறது. 40 வயதை கடக்கும் பெண்கள் வெள்ளெழுத்து, கண் அழுத்த நோய் போன்ற கண் தொடர்பான பாதிப்புக்கு ஆளாக நேரிடும். தினமும் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பதால், ஒவ்வாமை, தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் 40 வயதினை கடந்த பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்சனையானது சோர்வு, மறதி, சீரற்ற மாதவிடாய் சுழற்சி, தூக்கமின்மை, கண்களில் எரிச்சல் உள்ளிட்ட பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் 40 வயதை கடந்த பெண்கள், அடிக்கடி ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்ளுதல், கண் பரிசோதனைகள் போன்றவை செய்வதுடன், உணவு விடயத்தில் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வர வேண்டும். தடுக்கும் வழிகள் என்ன? மாவுச்சத்து நிறைந்த உணவுகளை தவிர்த்து, புரதச்சத்து கொண்ட உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவுகள், பயறு வகைகள், முழுதானியங்களை அதிகமாக உட்கொண்டு வர வேண்டும். இதனால் உடல் எடையை சீராக பராமரிக்கலாம். |
20 Jun 2017 http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1497960784&archive=&start_from=&ucat=1& |
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், 20 ஜூன், 2017
40 வயதை கடந்த பெண்களின் கவனத்திற்கு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக