நீண்ட நாட்களாக இருக்கும் கறைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருளை (Pottasium permanganate) (KMNO4), வெதுவெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்,(துவர்ப்புத் தன்மை கொண்டது).
அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்.
கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த கறைகள் பெயர்ந்து வெளியேறும்.
இயற்கை பொருட்களாலும் நீக்கலாம்
கல் உப்பை பொடியாக்கி அதனை தினமும் பற்களில் தேய்த்து வர கிருமிகள் தாக்குதல் இருக்காது, மேலும் பற்களும் வெண்மையாகும்.
இரவு தூங்க செல்வதற்கு முன் ஆரஞ்சு பழ தோலை பற்களில் தேய்துவிட்டு பின்பு காலையில் எழுந்த பின்னர் கழுவும் போது பற்களில் படிந்துள்ள பாக்டீரியா நீங்கி பற்கள் வெளிச்சிடும்.
அதே போன்று எலுமிச்சம் பழத்தை பற்களில் தேய்த்துவருவதன் மூலம் கறைகள் நீங்கும்.
கறையை ஏற்படுத்தும் உணவுப்பொருட்கள்
அசிடிக் அமிலம் அதிகம் கலந்துள்ள உணவுபொருட்களை உண்பதால் பற்களில் கறை ஏற்பட வாய்ப்புள்ளது.
சோடாக்களில் சிட்ரிக் ஆசிட் அதிகமுள்ளதால் அது பற்களின் எனாமலை(Enamel) கரைத்து விடுகின்றன.
மேலும் சோடாக்களில் சக்கரை அதிக அளவில் இருப்பதால் அவை பற்களை சொத்தையாக்குவதோடு மட்டுமல்லாமல், பற்களிலும் கறை படிந்துவிடுகின்றன.
அதே போன்று காபியில் உள்ள நிறம் பற்களில் தங்கி, அதன் வெண்மை நிறத்தை பாதிக்கிறது, எனவே காபி குடித்த பின்னர் வாயை நன்றாக கொப்பளிப்பது நல்லது.
தக்காளி சாஸ், பழச்சாறுகளான திராட்சை பெர்ரி பழங்களில், ரெட் ஒயின், சோயா பீன்ஸ், பீட்ரூட் போன்றவற்றில் அசிட்டிக் அமிலம் அதிகம் உள்ளதால் இவை பற்களில் கறையை ஏற்படுத்தி விடுகின்றனர்.
என்ன தான் பற்களின் வெண்மையை அதிகரிக்க தினமும் 2 முறை பற்களை துலக்கி வந்தாலும், உண்ணும் சில உணவுகள் நம் பற்களின் வெண்மையை கெடுத்துவிடும்.
அதிலும் நிறமுள்ள உணவுப் பொருட்கள் தான் இதில் முதலிடம் பிடிக்கின்றன, ஏனெனில் அதில் அசிட்டிக் அமிலம் அதிகமாக உள்ளது.
http://news.lankasri.com/health/03/126521?ref=lankasritop
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக