தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 19 ஜூன், 2017

தந்தையர் தினத்தை உருவாக்கிய தாய்!

mohana June 18, 2017 Canada (Canada mirror)
உலகம் முழுவதிலும் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகின்றது. ஆனால் இதனை ஆரம்பித்து வைத்தவர் யார் என எத்தனை பேருக்கு தெரியும். இவர் மனைவியை இழந்த ஒருவரால் வளர்க்கப்பட்ட அமெரிக்க பெண் ஒருவர்.
சொனோரா சிமாட் டொட் என்பவர் Sebastian County, ஆர்கன்சாசில் 1882-ல் பிறந்தார். இவரது 16-வது வயதில் தாயார் இறந்து விட்டார்.
டொட்டின் தந்தை வில்லியம் சிமாட் இவரையும் இவரது ஐந்து சகோதரர்களையும் தாயார் இறந்த பின்னர் வளர்த்தார்.
1909-ல் தேவாலயம் ஒன்றில் அன்னையர் தின பிரசங்கத்தை கவனித்து கொண்டிருக்கையில் இவருக்கு கவலை ஒன்று தோன்றியது.
தன்னையும் தனது ஐந்து சகோதரர்களையும் தனியாக நின்று வளர்த்த உள் நாட்டு போர் வீரரான தனது தந்தையை கௌரவப்படுத்த ஒரு நாள் ஏன் இல்லை என்பதே இவரை துன்புறுத்திய கவலையாகும்.
தனது தந்தையின் பிறந்த நாளான யூன் மாதம் 5 அன்று முதலாவது தந்தையர் தினத்தை கொண்டாட தீர்மானித்தார்.ஆனால் திட்டமிடலில் சிரமங்கள் ஏற்பட்டதால் கொண்டாட்டம் யூன் 19 ஞாயிற்றுகிழமைக்கு தள்ளப்பட்டது.
டொட்டின் ஆலோசனை நாடு பூராகவும் உத்வேகத்தை ஏற்படுத்தியது. இரண்டு தேசிய தந்தையர் தின கமிட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன. 1921-ல் Virginia-விலும் நியு யோர்க் சிட்டியில் 1936-லும் ஆரம்பிக்கப்பட்டன.
அதிபர் Lyndon Johnson 1966 யூன் மாதத்தின் 3-வது ஞாயிற்றுகிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்படும் என பிரகடனப்படுத்தினார். அதிபர் றிச்சட் நிக்சன் இந்நாளை நிரந்தர தேசிய அனுசரிப்பு நாளாக 1972ல் சட்ட பூர்வமாக நிலை நாட்டினார் என கூறப்படுகின்றது.
டொட் உருவாக்கிய நாளிலிருந்து தந்தையர் தினம் இன்று 107-வது ஆண்டாக கொண்டாடப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக