படித்ததில் ..............
கணவன் இறந்தபின் பெண்கள் எப்படியோ தான் பெற்ற மக்களை அனுசரித்து வாழ்ந்து விடுகின்றனர்.
ஆனால் மனைவி போனபின் கணவன் படும் துயர் இருக்கிறதே
...

கொடுமை
தானாக காப்பிகூட போடத் தெரியாத கணவன் தண்ணீரைக்கூட தானே எடுத்து குடிக்காத கணவன்*
மனைவியின் மறைவுக்குப் பின் ஏனென்று கேட்க நாதி இல்லாமல் போகிறான்.
ஒரு ஆணுக்கு நன்றாகவே சமைக்க தெரிந்தாலும்கூட மருமகளோ மகளோ சமையல் அறையில் ஆளும்போது அங்கே இந்த ஆணால் *தன்னிச்சையாக* நுழைய முடியாது.
வேண்டுவனவற்றை தானே சமைத்துக் கொள்ளவோ எடுத்துக் கொள்ளவோ கூசுகிறார்கள்.
என்ன கொடுத்தார்களோ எப்போது கொடுத்தார்களோ கொடுத்ததை கொடுத்த போது சாப்பிட்டுக் கொள்ளணும்.
ரெண்டாவது காபி கூட கேட்க முடியாது.
தலைவலியில் ஆரம்பித்து எப்பேர்ப்பட்ட சுகக்கேடு வந்தாலும் ஆதரவாகப் பேசக் கூட ஆள் இருக்காது.
இதெல்லாம் என் உறவுக்குள்ளே, நட்பு வட்டத்திற்குள்ளே கண்ட உண்மை.
துளிகூட அதிகப்படியாக இங்கே பதிவு செய்ய வில்லை.
என் கணவர் காலை எட்டரை மணி வாக்கில் சும்மா கிச்சனில் வந்து ஏதேனும் பேச ஆரம்பித்தால் *காபி வேணும்* னு அர்த்தம்.
காபி குடித்தால் காலை உணவு அளவு அவருக்கு குறைவதால் கொடுக்க யோசிப்பார்கள்.
இப்போதெல்லாம் காலையில் என் கணவர் கேட்காமலேயே ரெண்டாவது காபி கொடுத்து விடுவேன்.
எனக்குப்பின் அவருக்கு யார் கொடுப்பாங்க?
இந்த நினைவு வந்தால் மனசு ரொம்ப பாரமாகிடுது.
மனைவி இல்லாத கணவன் உயிரற்ற உடல் போல!!
சகோதரிகளே
யாருக்கு விதி எப்போ? எங்கே? ன்னு யாருக்குமே தெரியாது!
உங்கள் கணவர் உங்களுக்குப் பின் வாயில்லாப் பூச்சிதான்!
முடிந்தவரை கணவனிடம் அனுசரணையாக இருங்கள்!!
ஒரு முறை தான் வாழப் போறீங்க வாழ்க்கையை அனுபவிப்பதை விட்டு விட்டு, வார்த்தைகளை அள்ளி வீசி ஆதிக்கம் காட்டாதீர்கள்
அடுத்தவரை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள் வசதி மட்டுமே வாழ்க்கை அல்ல சாகும் வரை அன்னியோன்யமாக விட்டுக் கொடுத்து வாழ்வதே வாழ்க்கை!!
கணவனை கடவுளாக பார்க்க வேண்டாம், அட்லீஸ்ட் ஒரு சராசரி மனுசனாவாவது பாருங்க...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக