தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 15 ஜூன், 2017

இந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க இரகசியம்( சீக்ரெட்) இதுதான்

லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இந்த நான்கு புகைப்படத்தில் ஒன்றை தேர்வு செய்வதை வைத்து, ஒருவரின் குணாதிசயங்களை ஒன்பது வகையாக பிரித்துள்ளனர்.
புகைப்படம் - 1
நிலா வலது பக்கம் பார்த்திருக்கும், கடல் அமைதியாக சீற்றமின்றி இருக்கும். இந்த படத்தை தேர்வு செய்யும் நபர்கள் மிகவும் சிறப்பானவர்கள்.
சீக்ரெட்
இவர்களின் கனவுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் மிக உயர்வாக இருக்கும். அந்த கனவுக்காக எதையாவது செய்துக் கொண்டே இருப்பார்கள். தங்கள் கனவை எட்டிப்பிடிக்கும் வரை ஓயமாட்டார்கள்.
தங்கள் எதிர்காலம் பற்றி முன்னதாக நிறைய அறிந்து வைத்திருப்பார்கள். காதல் மற்றும் நட்பில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொள்ள மாட்டார்கள். தனது தொழிலில் சிறப்பாக செயல்படுவார்கள்.
புகைப்படம் - 2
நிலா வலது பக்கம் நோக்கி, கடல் சீற்றமாக இருக்கும் இந்த படத்தை தேர்வு செய்யும் நபர்களின் குணாதிசயங்கள் மிகவும் வலிமையாக இருக்கும்.
சீக்ரெட்
இவர்கள் நேர்மை தவறாத, கனிவான மனதைக் கொண்டவர்கள். அதனால் நேர்மையாக உள்ள நபர்களிடம் மட்டும் அதிகம் பழகுவார்கள். தங்களுக்கு கிடைப்பதை மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள்.
ஒரே நட்பின் உறவில் நீண்ட நாட்கள் நிலைத்திருப்பார்கள். எப்போதும் இவர்களின் வாழ்க்கை ஒரே சுழற்சி பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும். பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது.
புகைப்படம் - 3
நிலா இடது பக்கம் நோக்கி, கடல் குறைந்த அலைகளுடன் அமைதியாக இருக்கும் இந்த படத்தை தேர்வு செய்யும் நபர்கள், கூர்மையான அறிவு உடைவராக இருப்பார்கள்.
சீக்ரெட்
சில சமயங்களில் இவர்களுக்கு மற்றவர் மீது பொறாமை ஏற்படும். பின் அதன் தவறை உணர்ந்து, அதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். இவர்களிடம் அதிக திறமை இருக்கும், ஆனால் விவாதம் செய்வார்கள்.
இவர்கள் அனைவரிடமும் எளிதில் பழகும் குணம் உள்ளதால், இவர்களை சுற்றி எப்போதும் ஒரு பெரிய நட்பு உறவுகள் இருக்கும். இவர்களுக்கு யாரும் துணை இல்லையென்றாலும், ஒரே ஆளாக நின்று வேலையை முடிக்கும் நற்குணத்தை கொண்டவர்கள்.
புகைப்படம் - 4
நிலா மற்றும் கடல் அலைகள் உள்ள இந்த நான்காவது புகைப்படத்தை தேர்வு செய்யும் நபர்கள், மிகவும் ஆச்சரியப்படும் வகையில் இருப்பார்கள்.
சீக்ரெட்
இவர்கள், மற்றவர்கள் செய்ய அச்சப்படும் செயல்களை துணிச்சலாக செயல்பட நினைப்பார்கள். தங்களுக்கு பிடித்த நபர்களுடன் மனம் விட்டு பேச விரும்புவார்கள்.
இவர்கள் தாங்கள் செயல்படும் அனைத்து விடயங்களிலும் ஆர்வமாக இருப்பார்கள். நண்பர்களுடன் வெளியே செல்ல அதிகம் விரும்புவார்கள். அதேபோல துணையுடன் அதிக நேரம் செலவழிப்பதிலும் தவற மாட்டார்கள்.
http://news.lankasri.com/lifestyle/03/127033?ref=right_featured

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக