பல்வலி நீங்கள் பராமரிக்காமல் விடுவதால் மட்டும் வராது. சின்ன பற்களின் வலி கூட உங்களுடைய உள்ளுறுப்புக்களின் பாதிப்பின் வெளிபாடாக இருக்கலாம்.
ஒவ்வொரு பல்லும் ஒவ்வொரு உறுப்போடு தொடர்பு கொண்டுள்ளது என்ற இரகசியம் உங்களுக்கு தெரியுமா? காரணமேயில்லாமல் பல்வலி வந்தால் அலட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
உடனடியாக என்ன பாதிப்பு என்று கண்டறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு உதவுவதறாக பற்களும் அது தொடர்பான உறுப்புகளையும் இப்போது பார்கலாம்.
முன்பற்கள் : முன்பற்கள் உங்களூடைய சிறு நீரகம், காது பற்றும் ப்ளேடர்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. டான்ஸில், பைலோ நெஃப்ரைடிஸ்,ப்ரோஸ்டேட் பாதிப்புகள் இருந்தால் இந்த பற்களில் வலி காணப்படும்.
சிங்கப் பற்கள் : இவை கல்லீரல், பித்தப்பையுடன் தொடர்பு கொண்டுள்ளது. மஞ்சள் காமாலை, கோலே சிஸ்டிஸ் போன்றவை இருந்தால் இவற்றில் வலி உண்டாகும்
முதல் கடைவாய் பற்கள் : முதன்மையான கடைவாய்ப் பற்கள் நுரையீரலுடன் தொடர்பு கொண்டுள்ளது. அலர்ஜி, நிமோனியா, கோலிடிஸ் போன்ற நோய்கள் வந்தால் சிங்கப் பற்களில் வலி ஏற்படும்.
பின் கடைவாய் பற்கள் : பின்பகுதியில் இருக்கும் கடைவாய் பற்கள் வயிறு, இரைப்பை, கணையத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. ரத்த சோகை, அல்சர், கணைய நோய்கள் இருந்தால் பின் கடைவாய் பற்களில் வலி உண்டாகும்.
ஞானப் பல் : ஞானப் பல் இதயம், சிறுகுடல் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளது. இதய நோய்கள், இதய வால்வுகள் வரும் பிரச்சனை போன்றவற்றின் அறிகுறிகளாய் ஞானப்பல்லில் வலி உண்டாகும்.
பாதிப்படைந்த பற்கள் : ஆனால் பாதிப்படைந்த அல்லது சிதைவ்டைந்த பற்கள் எப்போதுமே மோசமான பற்களின் நிலையை மட்டுமே குறிக்கிறது. ஆகவே உங்கள் பற்களை சுத்தமாக பராமரித்தால் பக்கத்திலிருப்பவர்கள் மட்டுமல்ல உங்கள் உள்ளுறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்.
- See more at: http://www.manithan.com/news/20170607127553?ref=builderslide#sthash.32MCyURv.dpuf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக