பரிசாக கொடுக்கக் கூடாத பொருட்கள் எவை?
- துண்டுகள் மற்றும் கைக்குட்டையை வாஸ்து சாஸ்திரப்படி, அன்பளிப்பாக கொடுக்கவோ அல்லது வாங்கவோ கூடாது. ஏனெனில் அது அவர்களுக்கு தீமையை உண்டாக்குமாம்.
- கடிகாரங்களை அன்பளிப்பாக கொடுக்கக் கூடாது. ஏனெனில் அது வாழ்நாட்களின் எண்ணிக்கையை எதிர்மறையாக, குறைப்பதாக அமையுமாம்.
- கத்தி போன்ற எந்த ஒரு கூர்மையான ஆயுதங்களையும் பரிசாக கொடுக்கக் கூடாதாம். ஏனெனில் அதை கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் ஆகிய இருவருக்குமே கெட்டதை உண்டாக்குமாம்.
- இயற்கையாக பூமியிலிருந்து கிடைக்கும் அழகிய சிலைகள், பூந்தொட்டி போன்ற பொருட்களை பரிசாக கொடுக்கலாம். இதனால் வாழ்நாட்கள் மற்றும் அவர்கள் வீட்டில் செல்வத்தை அதிகரிக்குமாம்.
- காலணிகள் பரிசாகக் கொடுக்கக் கூடாது. ஏனெனில் அதை வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியின்மையை உண்டாக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
- நீங்கள் செய்யும் வேலை தொடர்பான பொருட்களை பரிசாக கொடுக்க கூடாது. ஏனெனில் அது உங்கள் வேலையின் திறனை குறைத்து விடுமாம்.
- தண்ணீர், மீன் தொட்டிகள் மற்றும் வெள்ளி தொடர்பான பொருட்களை பரிசாக கொடுக்கக் கூடாது. ஏனெனில் அது நமது அதிர்ஷ்டத்தை மற்றவர்களுக்கு கொடுப்பது போன்றதாகுமாம்.
http://news.lankasri.com/lifestyle/03/126834?ref=lankasritop
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக