தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 3 ஜூலை, 2015

உலகின் முதல் பல்கலைக்கழகத்தை கொண்ட பாட்னா


பீகார் மாநிலத்தின் தலைநகரமான பாட்னா, அந்த மாவட்டத்தின் தலைநகராகவும் உள்ளது. இது பீகாரின் நிர்வாக மையமாகவும் கல்வித்துறையின் மையமாகவும் விளங்குகிறது.
பாட்னா நகரம் இந்தியாவின் புண்ணிய நதியான கங்கை நதியின் தென்கரையில் அமைந்துள்ளது மேலும் சிறப்பு. இங்கு ரயில் போக்குவரத்தும் பேருந்து போக்குவரத்தும் எல்லா பகுதிகளுக்கும் நன்கு போடப்பட்டுள்ளது.
நெல் உற்பத்திதான் இங்கு பிரதானமானது. மூன்றில் ஒரு பங்கு இங்கு விளைநிலங்களே மக்காச்சோளம், பருப்புகள், கோதுமை மற்ற முக்கிய விளைபொருட்கள். எண்ணெய் வித்துக்கள், கறிகாய்கள், வாட்டர் மெலன் ஆகியவை இங்கு விளையும் முக்கிய பணப்பயிர்கள்.
சுற்றுலா செல்பவர்கள் பாட்னாவில் பார்க்க வேண்டிய இடங்கள்:
அகம் கான்:
அகம் கான் என்றால் ’புரிந்துகொள்ள முடியாத நல்லது’ என்று அர்த்தம். இது ஒரு கிணறு 105 அடி ஆழமுடையது. இது மௌரியப் பேரரசர் அசோகர் காலத்தில் கட்டப்பட்டதுதான் இதன் சிறப்பு. இந்த கிணற்றின் மேற்பகுதியில் செங்கற்களால் வட்டமாக வீடு போல அமைத்திருக்கின்றனர். உள்ளே மரக்கட்டைகளால் ஆன எட்டு வளையங்கள் கிணற்றின் மேற்பரப்பில் பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ளது.
இந்த கிணற்றுக்கு அருகிலே சித்தாலா தேவி கோவில் உள்ளது. இது ’ஏழு தாய்களின் கடவுள்’ என்று அழைக்கப்படுகிறது. இது அம்மை நோய்களை குணப்படுத்துவதில் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது.
நாலந்தா பல்கலைக்கழகம்:
உலக வரலாற்றிலே மிகப் பழைமையான, முதன்மைச் சிறப்பு உடைய பல்கலைக்கழகமாக நாலந்தா பதிவாகியிருக்கிறது. இது பாட்னாவிலிருந்து தென்கிழக்கே 55 கி.மீ. தூரத்தில் உள்ளது. இதன் மிகப்பெரிய நூலகத்தை முகலாயர்கள் மூன்று மாதங்களாக தீவைத்து அழித்தனர் என்று தகவல் தெரிவிக்கிறது. இதில் உள்ள பல கட்டடங்கள் மௌரியப் பேரரசர் அசோகரால் கட்டப்பட்டுள்ளது. கி.பி. 427 லிருந்து 1197 ம் ஆண்டுவரை புத்தமதத்தினருக்கான போதனை மடாலயமாக இருந்துள்ளது.
இங்கு வேலையிலிருந்து நீக்கப்பட்டும் தங்கள் நாட்டுக்கு திரும்பியும் சென்ற புத்த மடாதிபதிகள் இங்கிருந்த அரிய பொருள்களை எடுத்தும் அழித்தும் சென்றுள்ளனர். 2006 ல் சிங்கப்பூர், இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் நாலந்தாவை மீண்டும் புதுப்பித்து உலகின் பழைமையான அதன் சிறப்பு பராமரிக்க திட்டமிட்டிருப்பதாக அறிவித்தன.
காந்தி சேது கங்கை பாலம்:
பாட்னாவில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்ட ’மகாத்மா காந்தி சேது கங்கை பாலம்’தான் இந்தியாவிலே மிகப்பெரிய ஆற்றுப்பாலம். அதுமட்டுமல்ல, உலகின் மிகப் பெரிய பாலங்களிலும் ஒன்று.. பாட்னாவுடைய தென்பகுதியை ஹஜிபுர் உடைய வடபகுதியுடன் இணைக்கிறது.
5,575 மீட்டர் நீளமும் 48 இரட்டை பில்லர்களும் கொண்டது. ஒரு சாலை அகலம் 7.5 மீ. என இரு வழிச்சாலையும் அதற்கும் அப்பால் இருபுறமும் பாதசாரிகள் செல்லும் நடை பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இது 1982ம் அண்டு மே மாதத்தில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் திறக்கப்பட்டது.
பாட்னா மியூசியம்:
புத்தருடைய சாம்பலை அவர் வாழ்ந்த இடத்தில் இருந்த புனிதமான கலசத்தில் வைத்து, இந்த மியூசியத்தில்தான் பாதுகாக்கப்பட்டு வருகிறது. புத்தரைப் பற்றிய ஏராளமான ஆதாரக் குறிப்புகளும் சிற்பங்களும் ஓவியங்களூம் உள்ளன.
பாட்னா மியூசியம் 1917 ல் உருவாக்கப்பட்டது. இது ஏற்படுத்துவதுக்கான முக்கிய நோக்கம் அந்த நிலப்பரப்பில் பழங்காலந்தொட்டு வாழ்ந்துவந்த மக்களின் வரலாறு, கலை, கலாச்சாரம், நாகரிகங்களை அறிவியல் பூர்வமாக தெரிந்துகொள்ளவே
அதுக்கேற்ப, அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பெருமளவிலான பழங்கால பொருட்கள் அங்கே வைக்கப்பட்டுள்ளது. காந்தார மற்றும் மதுரா கலைநயத்தை பிரதிபலிக்கும் சிற்பங்கள் உள்ளன. இங்கு உள்ள பெரும்பாலான சிற்பங்கள் குஷானர்கள் காலத்தியது. காந்தார கலைநயத்தை, கிரேக்க-புத்த கலைநயமாகவும் பெயர் சொல்லப்படுகிறது.
மஹாவீர் மந்திர்:
இந்து மதத்தில் ஆஞ்சநேயருக்கு பெரும்பாலும் கோவில்கள் இருப்பதில்லை. இது அஞ்சநேயருடைய கோவில். பீகார் மக்களும் இந்தியாவின் பிற மாநில மக்களும் இங்கு அதிகமாக குவிவதால் வட மாநிலத்திலே இரண்டாவது மக்கள் கூடும் கோவிலாக உள்ளது.
தியாகிகள் நினைவுச்சின்னம் (சஹீத் சஸ்மாரக்):
1942 ல் நாடு முழுதும் வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டங்கள் நடந்தன. பாட்னாவில் ஏழு மாணவர்கள் தேசியக்கொடியை எந்தியபடி கோஷங்கள் எழுப்பிக்கொண்டு வந்த குற்றத்துக்காக வெள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அந்த இடத்தில் இப்போது தலைமைச் செயலகம் உள்ளது. அதுக்கு வெளியே இந்த நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திரம் கிடைத்த அன்றே பீகார் அரசால் அடிக்கல் நாட்டப்பட்டு, பிறகு சிலைகள் இத்தாலியில் உருவாக்கப்பட்டு, இங்கு நிறுவப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக