அடர்ந்த வனப்பகுதியில் பல்லாண்டுகளாக இருக்கும் கார்களின் கல்லறை! (வீடியோ இணைப்பு)
பெல்ஜியத்தில் உள்ள வனப்பகுதி ஒன்றில் சுமார் 70 ஆண்டுகாலமாக 500 பழமையான கார்கள் ஒரே இடத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டிருப்பதன் காரணம் நீங்காத மர்மமாகவே விளங்குகிறது.
பெல்ஜியம் நாட்டின் சாட்டிலான் என்ற இடத்தில் இருக்கும் வனாந்திரத்தில்தான் இந்த கார்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன
ஒரு பக்கம் மலைமுகடாலும், மறுபுறம் அடர்ந்த காடுகளாலும் மறைக்கப்பட்டிருக்கும் அந்த ரகசிய இடத்தை அவ்வளவு எளிதில் யாராலும் கண்டிபிடிக்க இயலாது.
ஆனால் அங்கு அத்தனை கார்கள் எப்படி வந்தது என்பதை பற்றி எந்த தெளிவான தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, இந்த கார்களின் அணிவகுப்பை பற்றி பல்வேறு கற்பனைக் கதைகள் உலவுகின்றன.
அந்த கதைகளில் ஒன்றாக, 2ம் உலகப்போர் முடிவுக்கு வந்த தருணத்தில், அங்கு பணியில் இருந்த அமெரிக்க போர் வீரர்கள் தாங்கள் பயன்படுத்திய கார்களை இந்த வனத்தில் ரகசியமாக நிறுத்திவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
மீண்டும் அந்த கார்களை பெறுவதற்கான வாய்ப்பு இருந்தால், எடுத்துச் செல்லலாம் என்று எண்ணி இந்த கார்களை அமெரிக்க போர் வீரர்கள், அங்கு ரகசியமாக விட்டுச் சென்றதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், நாடு திரும்பும் மகிழ்ச்சியில் இந்த கார்களை எடுத்துச் செல்வது கடினம் என்று எண்ணி இங்கே விட்டுச் சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் ஒருசாரார் அந்த கார்கள் 2ம் உலகப் போர் நடந்த காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்டவை அல்ல என்றும், அதற்கு பிறகான காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
ஆனாலும், இந்த கார்களுக்கு இதுவரை யாரும் சொந்தம் கொண்டாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கல்லறை தோட்டம் என்றழைக்கப்படும் அந்த கார்களின் அணிவகுப்பு எவ்வாறு அந்த அடர்ந்த வனப்பகுதியில் ரகசியமாக நிறுத்தப்பட்டது என்பதற்கு இன்றும் விளக்கம் கிடைக்காததால் அது பற்றிய கதைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக