தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 1 ஜூலை, 2015

வலியை உணர்வதில் ஆண், பெண் எலிகளில் வேறுபாடு: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

மனிதர்களில் ஏற்படும் பல்வேறு வகையான நோய்களுக்கான நிவாரணிகளை கண்டுபிடித்த பின்னர் அவற்றினை எலிகளிலேயே விஞ்ஞானிகள் பரீட்சத்து பார்ப்பது வழக்கமாகும்.
இவ்வாறிருக்கையில் தற்போது வலியை உணர்வதில் ஆண் எலிகளுக்கும் பெண் எலிகளுக்கும் வேறுபாடு இருப்பதாக அமெரிக்காவின் McGill பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது பற்றி கருத்து தெரிவித்த விஞ்ஞானிகள் இவ் வேறுபாட்டிற்கான காரணங்கள் தெரியவில்லை எனவும், எதிர்காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள மருத்துவ ஆய்வுகளில் இவ் இயல்பு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
காயங்களின் தன்மைக்கு ஏற்ப வலியை தொடர்பான சமிக்ஞைகளை நரம்புகளில் ஏற்படுத்துவதற்கு Microglia எனும் நோய் எதிர்ப்பு கலமே காரணமாக இருக்கின்றது.
இக் கலத்தில் காணப்படும் வேறுபாடுகளே வலியை உணர்வதிலும் வேறுபட்டை ஏற்படுத்தலாம என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக