தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 11 ஜூலை, 2015

பிரித்தானிய மக்கள் மனித நேயம் உடையவர்களா? வியக்க வைக்கும் முடிவுகள் (வீடியோ இணைப்பு) !

பிரித்தானியாவில் மனித நேயத்தை ஊக்குவிப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட குறும்படத்தின் முடிவுகள் வியப்பை தந்துள்ளன.
பிரித்தானியாவில் மக்களிடம் மனித நேயம் மற்றும் சமுதாய ஒற்றுமை ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன் ஒருபகுதியாக துன்பத்தில் இருப்பவர்களுக்கு மக்கள் உதவுகின்றனரா என்பதை அறியும் விதத்தில் குறும்படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.
லண்டனில் எடுக்கப்பட்டுள்ள இந்த குறும்படத்தில் வயதான பெண்மணி ஒருவர் எடை அதிகமான பையை தூக்க முடியாமல் தூக்கி செல்வது போன்றும், பூங்காவில் பெண்மணி ஒருவர் தனது காய்கறி பைபை தவறுதலாக கீழ போடுவது போன்றும், ரயிலில் பயணி ஒருவர் தான் செல்ல வேண்டிய இடம் வந்தால் தன்னை எழுப்பும் படிஎழுதி வைத்தவாறு தூங்குவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதற்கு பொதுமக்கள் எவ்வாறு நடந்துகொள்கின்றனர் என்பதை பதிவு செய்துள்ளனர். அதன் முடிவில் பெரும்பாலான மக்கள் மற்றவர்களுக்கு உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக