சிரி சிரி சிரி… கலகலவென சிரி, சிரிக்க தெரிந்தவர்களுக்கு தான் மனிதன் என்று பெயர்.
ஏனெனில் உயிரினங்களில் மனிதனுக்கு மட்டும் தான் சிரிக்க தெரியும், மற்ற உயிரினங்களுக்கு சிரிக்க தெரியாது.
அவ்வாறு மனிதனாய் பிறந்து சிரிக்காவிட்டால், அவனுக்கு மிருகம் என்று பெயர்.
வாழ்நாளில் மற்ற நாட்களை விட இன்றாவது எல்லோரும் சிரித்து முகத்தோடு இருங்கள்.
சிரிப்பின் வாயிலாக உலகில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பது இந்த தினத்தின் நோக்கம்.
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்ற பழமொழி உண்டு.
சிலர் யார் என்ன பேசினாலும் புன்னகைத்து கொண்டே இருப்பார்கள், அவர்கள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதே நமக்குப் புரியாது.
சிலர் ஒன்றுமில்லாத விடயத்திற்கு கூட சிரிப்பார்கள், சிலருக்கு நமுட்டுச் சிரிப்பு மட்டுமே தெரியும்.
எப்படியானால் என்ன சிரிக்கத் தெரிந்தால் போதும் கவலைகளை மறந்து வாழமுடியும். சிரித்து வாழவெண்டும் பலர் சிரிக்க வாழக்கூடாது.
நகைகளில் மேலானது புன்னகை என்பதை புரிந்து கொண்டு சிடு சிடு என்று இருக்காமல் எப்போதும் புன்னகையோடு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இனிமையை ஏற்படுத்தும் சிரிப்பு
மன இறுக்கத்தை குறைக்க, நட்பை வளர்க்க, ஒருவருக்கொருவர் நெருக்கமாக பழக, இடைவெளியை குறைக்க, மனத்தெளிவு மற்றும் மனமகிழ்ச்சியை உண்டாக்க . . . என்று பல்வேறு வகைகளில் துணை நிற்பது சிரிப்பு.
“துன்பம் வரும் வேளையிலே சிரிங்க” என்றார் வள்ளுவர். “சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே” என்றார் கவியரசு கண்ணதாசன்.
“சிரிப்பு பாதி, அழுகை பாதி சேர்ந்ததல்லவா மனித ஜாதி” என்றார் பொதுவுடைமை கவிஞர்.
சிரிக்கும் போது மனதில் ஒருவித மகிழ்ச்சியான கலகலப்பான உணர்ச்சி ஏற்படுகிறது. இதனால் உடலில் ஆரோக்கியமான வேதிப்பொருட்கள்(HEALTHY ENZYMES) உற்பத்தியாவதால் நோயைத் தீர்க்கும் மருந்தாகிறது.
சிரித்து மகிழ்வதால் நோய்கள் வராமல் தடுக்கப்படுவதுடன் வந்த நோய்களும் விரைவில் குணமாவதாக ஆராய்ச்சி மூலம் தெரியவருகிறது.
சிரிப்பை மறந்த உலகம்
ஆனால் இன்றைய இயந்திரமான உலகில் சிரிக்க கூட நேரமில்லாமல் மனிதன் அலைகிறான்.
ஒரு நட்புக்காக கூட பிறரை பார்த்து சிரிக்காமல், தானும் சிரிக்காமல், ஏதோ ஒரு வெறுமையான வாழ்க்கையை நோக்கி பயணிக்கிறான், அதனை மறந்து இன்றைய நாளாவது ஒவ்வொருவரும் மனம் விட்டு சிரியுங்கள்.
|
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், 13 ஜனவரி, 2015
கவலைகளை மறக்க...சந்தோஷமாய் புன்னகையுங்கள் !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக