தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 12 ஜனவரி, 2015

பேஸ்புக்கிற்கு அமெரிக்காவில் இத்தனை மவுஸா?

உலகெங்கிலும் உள்ள இணையப் பாவனையாளர்களை வெகுவாகக் கவர்ந்த சமூகவலைத்தளமாக பேஸ்புக் காணப்படுகின்றது.
இத்தளத்தினைப் பயன்படுத்துவதன் ஊடாக நன்மைகளும், தீமைகளும் ஒருங்கே காணப்படுகின்றன.
எனினும் இதன் பாவனையானது உச்சக்கட்டத்தில் இருப்பதை மறுக்க முடியாது.
அண்மையில் அமெரிக்காவில் இடம்பெற்ற ஆய்வு ஒன்றில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் பேஸ்புக்கின் உச்சக்கட்ட பாவனை மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது வயது வேறுபாடு இன்றி 58 சதவீதமான அமெரிக்கர்கள் பேஸ்புக்கினை பயன்படுத்தி வருவதாகவும், இணையத்தளத்தினை பயன்படுத்தும் இளம் பருவத்தினரில் 81 சதவீதமானவர்கள் பேஸ்புக்கினை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்க இளைஞர்களில் 23 சதவீதமானவர்கள் LinkedIn தளத்தினையும், 22 சதவீதமானவர்கள் Pinterest தளத்தினையும், 21 சதவீதமானவர்கள் Instagram தளத்தினையும், 19 சதவீதமானவர்கள் Twitter தளத்தினையும் பயன்படுத்துவதாக அந்த ஆய்வில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக