வீட்டில் இருந்து கொண்டே கயிறு பயிற்சியின் மூலம் உடலின் தேவையற்ற கொழுப்பை குறைக்கலாம்.
இதற்கு உதவும் எளிய முறை தான் கயிறு பயிற்சியாகும். இதற்கு உடற்பயிற்சி பேண்ட் மட்டும் இருந்தால் போதுமானது.
பயிற்சி முறை:-
பயிற்சி செய்ய விரிப்பில் முதலில் மல்லாந்து படுக்கவும். உடற்பயிற்சி பேண்ட்டை இடது காலின் பாதத்தில் மாட்டி ஒரு பக்கத்தை இடது கையால் பிடித்து கொள்ளவும்.
பிறகு மற்றொரு முனையை வலது கையால் வயிற்றின் அருகில் பிடித்து கொள்ளவும். வலது காலை முட்டி வரை மடக்கி வைக்கவும்.
இப்போது வயிற்று பக்கம் உள்ள வலது கையை அசைக்காமல் உடற்பயிற்சி பேண்ட்டை பிடித்துள்ள இடது காலை மெதுவாக இடுப்புக்கு நேராக நீட்டவும்.
சில விநாடிகள் இந்த நிலையில் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இதே போல் இடது பக்கம் 20 முறை செய்யவும். பின்னர் கால்களை மாற்றி வலது காலுக்கும் செய்ய வேண்டும்.
கால்களை நீட்டும் போது நேராக வருவதற்கு உடற்பயிற்சி பேண்ட்டை சரிசெய்து கொள்ளலாம்.
ஆரம்பத்தில் 20 முறையும் அதன் பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முறையும், அதற்கு மேலும் செய்யலாம். இந்த பயிற்சி தொப்பை குறைவதற்கும், கால்களுக்கு வலிமையும் தரக்கூடியதாகும்.
இதே போல் உடற்பயிற்சி பேண்டை பல முறைகளில் பயன்படுத்தும் போது உடலின் மற்ற உறுப்புகளுக்கும் வலிமை கிடைக்கிறது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக