காதல் என்பது சுகமான அனுபவம், ஆனால் சில நேரங்களில் வலியையும் தரும்.
ஆனால் உங்கள் உறவில் உண்மையான காதல் உள்ளதா என்ற சந்தேகம் பலருக்கும் எழுவதுண்டு.
இதை கண்டறிய பல அறிகுறிகள் உள்ளது. இதில் அனைத்தும் பொருந்தினால் நீங்கள் விரும்புவர் உங்கள் காதலுக்கு உண்மையாக உள்ளார் என கூறலாம்.
சுமையை பகிர்ந்து கொள்வது
உங்கள் துணையின் சுமையை நீங்கள் சுமக்க வேண்டும் என துப்பாக்கி முனையில் உங்களை அவர்கள் நிர்பந்தம் செய்வதில்லை.
ஆனால் தன் ஆழ்மனதை அறியாமலேயே இது நடந்தால், அதுதான் காதலுக்கான அறிகுறியாகும்.
அவர்களின் கஷ்டங்களை கேட்டறிந்து அவர்களுக்கு உதவி கரம் நீட்டுவது, தேவைப்பட்டால் அவர்களின் கண்ணீருக்கு தோள் கொடுப்பது.
இதன் மூலம் அவர்களுக்காக எப்போதும் நீங்கள் இருப்பீர்கள் என்ற எண்ணம் அவர்களுக்குள் ஏற்படும்.
கலந்து ஆலோசிப்பது
ஒரு உறவில் நீ, நான் என்று பேசிக் கொள்ளாமல் ஈகோ பார்க்காமல் நாம் என்ற எண்ணம் வந்துவிட்டலேயே அது சிறந்த காதல் தான்.
மேலும் ஒவ்வொரு விடயத்தையும் உங்கள் துணை உங்களுடன் கலந்து ஆலோசிப்பது, உங்கள் கருத்துகளுக்கும் அவர்கள் மரியாதை கொடுப்பார்கள் என்றால் அது உங்கள் மீதுள்ள உண்மையான காதலினால் தான்.
காயப்படுத்தாமல் இருப்பது
உங்கள் துணை அவர்களது உறவினர் அல்லது நண்பர்களின் முன்போ உங்களை அலட்சியம் செய்யாமலும் காயப்படுத்தாமலும் இருக்க வேண்டும்.
மேலும் உங்களை தரக்குறைவாகவும் பேசாமல் இருந்தால் அவர்கள் மனதில் நீங்கள் இடம் பிடித்துவீட்டர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
தியாகம்
காதலில் விழுந்தால் தியாகம் செய்வது அவசியம் ஆகும். ஆனால் இதற்காக வருத்தமும் படமாட்டீர்கள்.
கவலை கொள்ளாதீர்கள், உங்கள் நேரம் நன்றாக இருந்தால், உங்கள் காதல் இரு வழி பாதையாக மாறும்.
நீங்கள் மட்டுமே தியாகம் செய்ய வேண்டி வராது.
ஹேப்பியா இருங்க
உங்களின் நாள் சரியில்லாமல் போனாலும் கூட, உங்கள் துணையை கண்டு சிரிக்கும் போது, உங்கள் கவலை அனைத்தும் பறந்தோடி போகும்.
அவர்களுடன் இருக்கும் போது உங்களுக்கு சந்தோஷம் கரை புரண்டு ஓடும்.
சத்தியத்தை மீறக்கூடாது
உங்கள் துணை உங்களிடம் செய்து கொடுத்த சத்தியத்தை மீறாமல் தீவிரமாய் கடைப்பிடித்து வருகிறாரா? அப்போது அவர் உங்களை அதிகம் நேசிக்கிறார் என்றே அர்த்தம்.
|
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
புதன், 7 ஜனவரி, 2015
உங்கள் காதலில் சந்தேகமா? தெளிவடைய இதப் படிங்க!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக