தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 2 டிசம்பர், 2014

நயினையம் பதி மேவும் நாயகியே


நயினையம் பதி மேவும் நாயகியே 
நாகத்தின் நிழல் வாழும் பூசணியே
பாகத்தில் சிவனான பார்வதியே 
பாவ வினை போக்கி அருள்வாயம்மா ,,
பாவ வினை போக்கி அருள்வாயம்மா ,,,,,,(நயி)

ஆதியில் சுயம்பான காரணியே
அலை கடலில் அசைந்தாடும் பூரணியே
ஏழ்கடல் அலை ஆளும் தாயவளே
எம்மனக் குறை தீர்த்து அருள்வாயம்மா ,,
எம்மனக் குறை தீர்த்து அருள்வாயம்மா ,,,,,(நயி)

உருவிலே பாம்பான உமையவளே
உருகிடும் அடியார் நெஞ்சில் உறைபவளே
கருவிலே உருவாகும் குழந்தைகட்டும்
கருணையை பொழிபவள் நீயல்லவோ ,,
கருணையை பொழிந்தருள் புரிவாயம்மா ,,,,,,(நயி)

நாகமும் தொழுது நின்ற நயினையிலே
நாக ஈஸ்வரி தாயாக அமர்ந்தவளே ,,திரு
தேரேறி திருவீதி ஓடி வந்து
தெய்வமே எம்மையெல்லாம் காப்பாயம்மா ,,
தெய்வமே எம்மையெல்லாம் காப்பாயம்மா ,,,,,,(நயி)

நயினையம் பதி மேவும் நாயகியே
நாகத்தின் நிழல் வாழும் பூசணியே
பாகத்தில் சிவனான பார்வதியே
பாவ வினை போக்கி அருள்வாயம்மா ,,
பாவ வினை போக்கி அருள்வாயம்மா ,,,,,,(நயி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக