யாருமற்றிருந்த நான் இந்த தொடர் எழுதத் தொடங்கிய பிறகு உலகெங்கும் நண்பர்கள் நிறைந்திருக்க, எனை உபயோகித்து வீசிய மனிதர்கள் முன்பு இறுமாப்போடு நெஞ்சம் பொங்க நிமிர்ந்து நிற்கிறேன். இதை எழுதும்போது என் நெஞ்சம் தளும்பி கண்கள் நிறைந்து வழிகின்றன. நிஜம்தான், என்னை மீண்டும் உயிர்பித்தவர்கள் நீங்கள்.
1993 ம் வருடம் வெளிவந்த "வள்ளி " படத்துக்காக ஸ்வர்ணலதா பாடிய பாடல் " என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் ...". இந்த பாடலுக்கும் எனக்குமான உறவு பூர்வஜென்ம பந்தம் போன்றது. என் பதின்மத்தின் தொடக்கத்தில் அறிமுகமான இந்த பாடல் என் வாழ்வின் எல்லா நேரங்களிலும் கூடவே துணை இருந்திருக்கிறது. என்னிடமிருந்து இந்தபாடலை மட்டும் பிரிக்க முடிந்ததில்லை. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது எப்படியும் கேட்டுவிடுவேன்.
முதன் முதலாக இந்த இப்பாடலை எப்போது கேட்டேன் என்று யோசிக்கவே தேவையில்லை. வள்ளி படப்பாடல்கள் வந்த நேரம் அவ்வளவு ஞாபகம். நான் ஒன்பதாவது முடித்து பத்தாவது படிக்க போன ஒரு முழு ஆண்டு விடுமுறை நாளில் ஊரே வெறிச்சோடி கிடந்த நேரம். நகரத்தின் மேல் காதல் உண்டான நேரம்.
வெயில் காலம் தெருவெல்லாம் தார் எல்லாம் உருகி வெறும் காலோடு நடந்தால் காலில் பிசுக் பிசுக் என்று ஒட்டி வலி உயிரை வாங்கும். இருக்கும் ஒரு செருப்பையும் அப்படி ரோட்டிலும் காட்டிலும் போய் பிய்த்துகொள்ள இஷ்டமில்லை. ஆகையால் எந்நேரமும் வீட்டோடு அடைத்து இருக்க வேன்டிய நிலை. பாட்டி ஊர்களுக்கும் போய் வந்தாகிவிட்டது, சிறுவனாக இருந்த காலம் போல ஊரில் எல்லோருடனும் ஓட்ட முடியவில்லை. உதடுக்கு மேல் பூனை ரோமம் போல மீசை முளைத்த காலம் ஆதலால் காண்பவை எல்லாம் ஏதோ வித்தியாசமாகவும், காம வண்ணம் பூசியே தெரிவது போல ஒரு பிரமை. யாரோடும் ஓட்ட முடியாமல் எந்நேரமும் ஏதோ கனவோடு வாழ்வது போல ஒரு எண்ணம். என் வயதை ஒத்த நண்பர்கள் எல்லோரும் அந்த வயதுக்கு மீறி, பெண்களை பற்றியெல்லாம் பேசி பகிர்ந்து அந்த தாகத்தை ஆற்றிகொள்வார்கள். ஆனால் நான் எந்நேரமும் புத்தகமும் பாடல்களுமாக இருந்ததால் அவ்வளவு எளிதாக இந்த உணர்வுகளை விரசமாக வெளிபடுத்த இயலவில்லை ,
என் மனதின் உணர்வுகளை பொறுத்தவரை நான் ஏதோ ஒரு புதிய உணர்வுக்கு ஆளாகி இருக்கிறேன் என்று மட்டும் புரிகிறது , அது என்னவென்று புரியாமலில்லை. ராஜேஷ்குமார், பட்டுகோட்டை பிரபாகர் நாவல்கள் தொடங்கி கல்கியின் பொன்னியின்செல்வன், கடல் புறா, கி ராஜ நாராயணன், ஜெயகாந்தன், ரமணி சந்திரன், விமலா, உட்பட நிறைய புத்தகங்களை படித்திருந்ததால் வயதுக்கு மீறிய புத்தியை கொண்டிருந்தேன். எனக்கு ஏற்பட்ட மன மாற்றத்தை எண்ணி தவித்து அதை அனுபவித்தாகவேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். ஆனால் அதனை இரட்டை அர்த்த ஜோக்குகளாகப் பேசி கேவலமாக தணித்துக்கொள்ள நான் தயாரில்லை. இது போன்ற விசயங்களில் என் மனதை நான் எப்போதும் யாரும் அறியாத தீவாகவே வைத்திருந்தேன், ஆகையால் நான் தனித்து இருந்தேன், தவித்து இருந்தேன், தகித்து இருந்தேன் ,
அந்த நாளில்தான் ஏ ஆர் ரஹ்மானின் புதிய முகம் பாடல்கள் வந்த நேரம். நேற்று இல்லாத மாற்றம் பாட்டின் ஆரம்பமே ஏதோ என் மனதை தூக்கி சென்றிருந்தது. என் வாழ்க்கையில் இசை அறிமுகம் இளையராஜவாக இருந்தாலும் ரோஜாவுக்கு அப்புறம் ரஹ்மானின் புயலில் சிக்குண்டவனாகவே நானும் இருந்தேன். என்னதான் ராஜாவின் இசை கோர்வைகள் அபரிமிதமாக இருந்தாலும் என் பதினான்கு வயதுக்கு அதை புரிந்து கொள்ள இயலவில்லை. ஆகையால் 'கண்ணுக்கு மை அழகு' என்ற கவிதையான வரிகளும், நேற்று இல்லாத மாற்றம் பாடலின் ப்ரிலூடு ஆரம்ப இசை ஆக்கிரமிப்பும் என்னை ஆட்கொண்டிருந்தன,
பத்தாவது ஆரம்பித்த காலாண்டு தேர்வு விடுமுறை நாள் அது. கூடவே ஜென்டில்மேன் படத்தில் இசை எங்களை எலாம் பைத்தியமாக ஆக்கிவிட்டிருந்தது.அருகில் இருக்கும் சலூனுக்கு சென்று தினத்தந்தி பத்திரிக்கை பார்ப்பதே சினிமா செய்திகளுக்காகதான். ஆகஸ்ட் 30 அன்று இப்படம் ரிலீஸ் என்றவுடன் என் தந்தையிடம் விருப்பம் சொன்னேன். என் தந்தை கொடுத்த ஐம்பது ரூபாயுடன் படத்துக்கு போய் வரட்டுமா.. ? என்று கேட்டவுடன் "அம்மாவுக்கு தெரியாம போயிட்டு வா.." என்று கூறினார். ஸ்பெசல் கிளாஸ் இன்றிலிருந்து ஆரம்பம் என்ற பொய்யோடு கோவை டவுனுக்கு செல்ல ஆரம்பமானேன், முதன் முறையாக தனியாக ஒரு ஒரு படத்திற்க்கு போக போகிறேன். மனதெல்லாம் சிறகடிக்கும் ஆசையோடு மதியம் பன்னிரண்டு மணிக்கு எங்கள் ஊரில் இருந்து டவுனுக்கு செல்லும் ராஜஸ்ரீ பஸ்ஸில் ஏறி அமர்ந்தது இன்னமும் அப்படி ஒரு நியாபகம். கேஜி தியேட்டர் ராகம் திரையரங்கில் படம் திரையிடப்பட்டிருந்தது. படம் முடிந்ததும் டவுன்ஹால் சென்றேன்.
படம் முடிந்த கையோடு நேராக வீட்டுக்கு போகாமல் டவுன்ஹாலில் என்ன வேலை ? என்றுதானே நினைக்கிறீர்கள், அங்குதானே என் ஆஸ்தான ரெக்கார்டிங் கடை "டென்சில் மியூசிக்கல்ஸ் " இருந்தது , அங்குதான் எல்லா கேசெட்டும் வாங்குவேன், திட்டினாலும் துரை அண்ணன் தான் எனக்கு நிறைய பாடல்கள் அறிமுகம் செய்தவர். நான் போன அன்று கடையின் முன் கண்ணாடியில் வெள்ளை பேக்ரவுண்டில் ஒரு பெண் ஓடிவருவதுபோல ஒரு ஓவியம். பக்கத்தில் ரஜினியின் படம். வள்ளி என்று டைட்டில். எப்போதும் நாவல்களில்தான் இது போல ஓவியம் இருக்கும். ஏதோ நாவலுக்கு அரஸ் போன்ற பிரபல ஓவியர்தான் அதை வரைந்திருக்க வேணும் என அந்த கால நாவல் ரசிகர்கள் கண்டிப்பாக சொல்லிவிடுவார்கள்.
போஸ்டரை பார்த்துக்கொண்டே கடையின் உள்ளே நுழைந்த நான், "என்னன்ணா ரஜினியோட புது படமா? உழைப்பாளி தானே நடிக்கறாரு.. " என, என்னமோ நான்தான் பெரிய இவன் மாதிரி கேட்டேன். "டேய் .. இது ரஜினி ப்ரொட்யூஸ் பண்ற படம் டா ... அதுல அவரு கெஸ்ட் ரோல் ல நடிக்கராறு " என்று கூறினார் . மெதுவாக கேட்டேன், அண்ணா கெஸ்ட் ரோல் ணா என்னன்னா .. பல்லை கடித்து கொண்டே சொன்னார் ... "இபோ உனக்கு என்னடா பிரச்சினை ?" ... என்றார் ... அண்ணா சொல்லுங்க அண்ணா ... என்று கெஞ்ச அவர் "டேய்!! உன் ஆளு இந்த படத்துல ஒரு பாட்டு பாடிருக்காரு... கேளேன்" என்றார்,. கெஸ்ட் ரோல் என்னவென்று சொல்லத் தெரியாததால் பேச்சை மாற்றிவிட்டார்.
தட தட வென ஆரம்பிக்கும் கடமும், மிருந்தங்கமும் சேர்ந்து நம்மை ஏதோ ஒரு கைலாச மலைக்கே கொண்டு செல்லும், நம் முன்னே சிவனே தாண்டவம் ஆடுவது போல ஒரு எண்ணம் . ஏற்கனவே பரதம் கற்றிருந்த என் நெஞ்சமெல்லாம் ஏதோ பரவசம் பரவ நான் ஆச்சர்யமாய் அந்த இசை தாண்டவத்தை ரசித்து கொண்டிருந்தேன். இரண்டு நிமிடங்கள் முடிந்தவுடன் கிடாரின் கலகலவென கேட்கும் ஐந்து நொடிகள் நம்மை சரசரவென கைலாச மலையிலிருந் கீழே இறக்குகின்றன. அப்போது க்ளாசிக்கல் கிடார் வாசிக்கும் டங் ..டங் ..டங் ..டங் .. என்ற பிட்டில் நெஞ்சம் உருகி நான் விண்ணில் மிதக்க ஆரம்பித்தேன். என்ன ஒரு இனிய ஒலி அது. சதா அண்ணா எத்தனை அழகாக வாசித்திருந்தார். அந்த கிடார் பிட்டில் என்னமோ நம் நெஞ்சை மயிலிறகால் தடவுவது போல ஒரு எண்ணம். யாரோ வந்து நம் நெஞ்சத்தின் ஜன்னல் கதவை தட்டுவது போல் ஒரு உணர்வு .
கோரஸ் தேவதைகளின் ஹம்மிங்கைத் தொடர்ந்து "என்னுள்ளே என்னுள்ளே" என்று பாடல் ஆரம்பிக்கிறது. கோரஸ் பெண்களின் குரலையும் மீறி, மனதை வசியம் செய்யும் குரல் ஒரு அடர்த்தியான ஒலிக்கிறது. அந்த குரலின் வருடலில் நான் மரித்து போனேன். எதுவோ ஓர் மோகம் என்றபோது மீண்டும் உயிர்த்தேழுந்தேன். இனிமையில், வித்தியாசத்தில், இந்த உலகின் எந்த மூலையில் இருப்பவனும் அந்த மாய குரலுக்கு மயங்கியே தீருவான். மயங்காதவன் கண்டிப்பாக மனிதனே இல்லை என்றும் கூறலாம். அப்பேற்பட்ட அந்த மயக்கும் மகுடி குரலுக்கு சொந்தக்காரி ஸ்வர்ணலதா.
அப்போதெல்லாம் எப்போதும் பேன்ட் பேக்கட்டில் ஒரு கேசெட் வைத்திருப்பது வழக்கம். நம் கல்லேக்சன்தான் பஸ்ஸில் கூட கேட்கவேண்டும் என்றொரு சுயநலம். பஸ் ஏறிய கையேடு நம் கையில் இருக்கும் கேசெட்டை ட்ரைவருக்கு கொடுத்து, அப்பாடல்களை அவர் ஒலிக்க விடும் போது நம் நெஞ்சம் அடையும் இறுமாப்பு இருக்கிறதே, அப்பப்பா. அன்று " என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் ..." பாடலை ரெக்கார்டு செய்தவிட்டு, பஸ்ஸில் அந்த கேசெட்டை கொடுத்து ஒலிக்கசெய்தேன்.
பாடலின் முதல் இன்டர்லூடில் அதாவது இடை இசையில் அலை அலையாய் எழுந்து அடங்கும் ஸ்ட்ரிங் செக்சன், அப்பப்பா. வயலின்களின் ஆர்ப்பரிப்பும், அவை அடங்கி முடிவதற்கு முன்னே மறுபடியும் அடுத்த வயலின்கள் ஆரம்பிக்கும் விதம் கேட்டால் நிஜத்தில் இசை கற்றவன் அதிசயித்து போவான். இசை அறியாதவன் அசந்தே போவான். நான் என்னையும் அறியாமல் வாய் பிளந்து நின்றேன், முதன் முறையாக இளையராஜாவின் பாடலை இவ்வளவு நல்ல ஒலி தரத்தில் கேட்கிறேன். எங்கள் வீட்டு சின்ன டேப் ரெக்கார்டரில் கேட்பதற்கும், ரெக்கார்டிங் கடையின் தரமான பெரிய ஸ்பீக்கர்களில் இப்பாடலை கேட்பதற்கும் பல வித்தியாசங்கள் இருக்கிறது. குறிப்பாக ப்ரீலூடுகளில் வரும் அந்த இசை கோர்வை.. இளையராஜா அமைத்த சிம்பொனி எங்கே எங்கே .. எப்போது வரும் என்று கேட்பவர்களுக்கெல்லாம் இதோ ... இதுதான் சிம்பொனி .

மீண்டும் அன்று இரவு என் வாக்மேனில் அந்த பாடலை போட்டுக் கேட்டபோது வேறுவிதமாக உணர்ந்தேன், வாக்மேனில் வேறு சில நுண்ணிய ஒலிகளும் பின்னணியில் ஒலிக்கும் வேறு சில வயலின் கோர்வையையும் உணர்ந்த போது பிரமித்து போனேன். இரவின் மெல்லிய குளிர் கலந்த சிலுசிலுப்போடு, இப்பாடலை கேட்டுக்கொண்டு என் வீட்டை அடுத்த காட்டின் ஒற்றையடி பாதையில் இரவு நடந்த போது வேறு விதமாக உணர்ந்தேன். என் நாடி நரம்புகள் எல்லாம் பின்னி கொண்டது போல ஒரு உணர்வு. தாளமுடியாமல் மீண்டும் திரும்பி வந்து பாயில் படுத்து இதே பாடலை கேட்டபோது என் நெஞ்சமெல்லாம் அந்த பதின்ம வயதின் ஆரம்பத்தை உணர்ந்தேன். இப்பாடலின் எந்த ஒரு ஒளி வடிவத்தையும் காணாமலேயே என் மனதை இழந்தேன், அன்று தான். அந்த இரவுதான் முதன்முதலாக என் வாலிபத்தில் அடியெடுத்து வைத்தேன். என் இளமையின் ஆரம்பம் இப்பாடலுடன் பிணைந்து இருப்பதால், இப்பாடலை என்னால் என்றும் மறக்கவே முடிந்ததே இல்லை ...
ராஜாவின் பாடலகளில் ஜென்சி பாடிய இதயம் போகுதே, உமா ரமணன் பாடிய ஆனந்த ராகம் கேட்கும் காலம், ஜானகி , கிருஷ்ணசந்தர் பாடிய ஏதோ மோகம், ஆகியவை சிம்போனிகளில் பரீட்ச்சார்த்த முயற்சியாக இருந்தன. ஆனால் ராஜாவின் மேம்படுத்தப்பட்ட இசை உற்சவத்தில், நெடுநாள் பயணத்தின் மூலம் தனக்கு கிடைத்த இசை அறிவை இப்பாடலில் சிம்பொனியின் பழுத்த வடிவமாகவே இளையராஜா தந்தார். சிம்பொனி என்னவென்றே தெரியாமல் இப்பாடலில் நாம் சிம்போனியை கேட்க ஆரம்பித்தோம். இது வெளிநாடாய் இருந்திருந்தால் இநது போன்ற ஒரு திரைப்படதிற்கு இப்படி ஒரு பாடலை தரமாட்டார்கள். தன் படைப்புகள் பாமரனுக்கும் தெரியவேண்டுமென நினைத்தாரோ என்னவோ இப்பாடலில் சிம்பொனியின் பரிட்ச்சார்த்த முயற்சியைத் தந்தார் இளையராஜா. அதுவரை ரஹ்மானின் பைத்தியமாக ஆரம்பித்த என் இசை பயணம் இளையராஜாவின் பாதைக்கு மாற வைத்தது இப்பாடல். இந்த ஒரே பாடலின் மூலம் தன் இசைப்படைப்பின் மேதமையை இவ்வுலகிற்கு புரிய செய்தார் ராஜா ..
இளையராஜாவின் ஒவ்வொரு வாத்தியகாரர்களும் அற்புதத்திறமை வாய்ந்தவர்கள், தன் பணியை செவ்வனே செய்து முடிப்பதில் உலகத்தரம் வாய்ந்தவர்கள், கிடார் வாசிக்கும் அண்ணன்களும் , புல்லாங்குழல் வாசிக்கும் பாடகர் அருண்மொழி அண்ணனும், வாத்திய வித்வானகளாக பணிபுரிந்த மூவருமே மிக திறமை வாய்ந்தவர்கள். இந்த வாத்திய தளபதிகள் உடனே இசைஞானி இளையராஜா மதுரை சங்கீத திருநாள் கான்செர்ட்டில் நின்றபோது மனசெல்லாம் நிறைந்து போனது . ஆனந்தராகம் பாடலை இவர்கள் இசைத்த அந்த கணம் நான் புரிந்துகொண்ட ஒரு விடயம் " ராஜாவின் உட இருக்கும் இவர்கள் சாதரணப்பட்டவர்கள் அல்ல... மிக பெரும் சாதனை பட்டியலில் இருக்கவேண்டியவர்கள் .. " அவர்களின் துல்லியமான பெர்பெக்சன் இப்பாடலில் மிக அழகாக இருக்கும் .. குறிப்பாக இண்டர்லுடுகள் .. முதல் இடை இசையும், இரண்டாம் இடை இசையும் அசத்தி எடுத்திருப்பார்கள் ..
வயலின்களோடு ஊடல் கொண்டது போலான புல்லாங்குழலின் முத்தாய்ப்பு அட்டகாசம், அந்த நேரம் கண்கள் மூடி கேட்டால் மனதின் மேலே ஏதோ ஒரு புழு ஊறுவது போல ஒரு உணர்வு , ஏதோ குளிர்காலத்திலும் முதுகில் ஓடும் வியர்வை துளி ஏற்படுத்தும் ஒரு ஓட்டத்தினூடான அந்த சிலிர்ப்பு தோணும் பாருங்களேன் .. அதைதான் புல்லாங்குழலின் ஒவ்வொரு பிட்டிலும் உணர்வீர்கள் , அந்த வயலின்களின் ஆர்ப்பரிப்பு முடிந்தவுடன் ஆரம்பிக்கும் கோர்ஸ் பெண்களின் ஹம்மிங் ஏனோ நெஞ்சை கசக்கும், அப்பேற்பட்ட இசை கோர்வையை எழுதிய இளையராஜாவின் திறமையை என்னவெண்று கூற,.. கோரஸ் பெண்களின் ஹம்மிங்கில் ஏனோ கடல் அலையோடு மிதந்து வந்து கரை சேர்ந்த நுரையாய் நெஞ்சம் மாறி தாலாட்டுகிற அந்த நேரம் இருக்கிறதே .. அப்பப்பா ...
சரணம் ஆரம்பிக்கிறது ..
கண்ணிரெண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்
கண்ணிரெண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும் .. ஆனாலும் அனல் பாயும் என்று பாடும்போது "ஆ ..னா .. லும் என்று பாடும்போதும் பா... யும் ... என்று பாடும்போது விழும் அந்த டைமேன்சங்கள் ஸ்வர்ணலதாவுக்கே உரித்தானவை .. அவை ஸ்வர்ணலதா பாடும்போது தானாகவே வந்து விழுகிறதா, , அது அவர் குரலின் அபூர்வத்தால் வந்து விழுகிறதா . அல்லது ஸ்வர்ணலதா அப்படி பாடுகிறாரா என்றே யாருக்கும் புரியாத ஒரு புதிர் .. இன்று வரை நான் சந்தித்த பெரிய பாடகர்களும், இசை அமைப்பாளர்களும், இசை ஆர்வலர்கலுமே ஸ்வர்ணல்தாவை பற்றி பேசும்போது இதை எண்ணி எண்ணி வியந்து போவதாக கூறுகின்றனர் ...
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன.. வண்ண....... ம் ம் எனும் இடத்தில் "ண" வுக்கும் "ம்.." க்கும் இடையில் ஸ்வர்ணலதா தரும் அந்த பொடி சங்கதி உலகத்தரமான ஒன்று .. அப்படி யார் பாட நினைத்தாலும் அவ்வளவு எளிதாக விழாது . என்ன எழுதுவதென்றே தெரியாமல் எதேதோ எழுதுவது போல இருக்கிறது எனக்கு ... இரவு நேரத்தில் அலுவலகத்தின் தனிமையில் அமர்ந்து கொண்டே, யாரும் இலாத மூன்றாம் மாடியில் நல்ல சவுண்டு தரம் உள்ள ஸ்பீக்கரில் இப்பாடலை கேட்பது போல் சுகானுபவம் போல ஒரு சொர்க்கம் இல்லை என்றே கூறுவேன் . முடிந்தால் அப்படி கேட்டு பார்த்து விட்டு இல்லை என்று சொல்பவர்கள் உண்டோ ?
இரண்டாம் ப்ரிலூடில் ஆரம்பிக்கும் வயலின்களின் கோர்வையோடு ஆர்ப்பரிக்கும் வயலின்களும், கோரஸ் பேரன்களின் ஹம்மிங்கும் அப்பப்பா.. கேட்டு அனுபவிக்க நமக்ல்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும், இப்பாடலுக்கு கீதா அக்கா, லலிதா அக்கா, கமலா அம்மா, கௌசல்யா அக்கா, சுலோச்சனா அக்கா , இசை அமைப்பாளர் பரணியின் மனைவியும் பாடகியுமான ரேஷ்மி ,18994 - 96 காலகட்டத்தில் "காத்திருந்தேன் தனியே.." உட்பட பல அருமையான பாடல்களை பாடிய பாடலை பாடிய லேகா ஆகியோரும்தான் கோரஸ் பாடினார்களாம் .. எல்லோருக்கும் நன்றிகள்.. வாலியின் வரிகளை பற்றி சொல்லாமல் விட்டால் எனக்கு மோட்சம் கிடைக்காது ..
கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊண் கலந்து ஊணும் ஒன்று பட தியானம்
ஆழ் நிலையில் அரங்கேற
காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கனத்தை போலே இன்பம் ஏது சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமே தான்
இதைவிட கூடலின் அழகை, அந்த தாபத்தை ஒரு பெண்ணால் எப்படி சொல்லி விட முடியும், இந்த கவிஞர்கள் மேல் இருக்கும் ஒரே ஆச்சர்யம் எப்படி இவர்கள் பெண்ணாய் இருந்து யோசிக்கிறார்கள் என்பதே .. கூடலின் அதீத இன்பத்தை அனுபவிக்கும் ஒரே பெண் வேண்டுகிறாள்.. "காலம் என்ற தேரே .. ஆடிடாமல் நில்லு.. இக்கனத்தை போலே இன்பம் ஏது சொல்லு ..!! " அந்த இன்பத்தை விட எண்ணாத அந்த இன்பமான மோன நிலை முடிந்து போய்விடுமோ!! என்று நாசூக்காக ஒரு பெண் சொல்லும் வரிகள எப்படி இருக்க முடியும் ... மீண்டும் சொல்கிறேன் .. இப்பாடலுக்கு சிம்போனி தந்த இளையராஜா செய்த மிக பெரிய ஒரு நற்காரியம் இப்பாடலை ஸ்வர்ணலதாவுக்கு தந்தது தான். அவர் பாடி தனக்கான பாக்கியம் பெற்றதோடு இல்லாமல் தந்த குருவுக்கு அழியா புகழை தந்து விட்டு இவ்வுலகை விட்டு மறைந்து போய்விட்டார் அந்த இளம் பெண் ..

ஸ்வர்ணலதாவின் குரலோடு இருக்கும் வசீகரம் வேறு யார்க்கும் இல்லாதது. கடவுளின் பரிசாக அந்த குரல் இருந்தாலும் அதை அனுபவித்து பாடும் ஸ்வர்ணலதா ஒரு தேவதை. கேரளா பாலக்காட்டை பிறப்பிடமாக கொண்ட ஸ்வர்ணலதாவின் குடும்பம் பொருள் தேடி வாழ்க்கைக்காக கர்நாடக மாநிலத்தில் பத்ராவதியில் வாழ்ந்து கொண்டிருந்தனர்.
மூன்று அண்ணன், இரண்டு அக்கா, இரண்டு தம்பி, ஒரு தங்கை கொண்ட பெரிய குடும்பம், ஸ்வர்ணலதாவின் தந்தை ஹார்மோனிய கலைஞராக இருந்தார். தாயும் ஒரு பாடகி. சிறு வயதிலேயே வானொலியில் கேட்கும் பாடல்களை உடனே திருப்பி அப்படியே அச்சு அசலாக இந்த குழந்தை பாடுவதை கண்ட பாட்டு சொல்லி தர எத்தனித்தனர். தமக்கையின் பயிற்சியோடு பாடல்கள் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். எட்டு வயதிலேயே பாடிகொண்டே ஆர்மோனியம் கீபோர்டு வாசிப்பதில் வல்லவரனார் ஸ்வர்ணலதா. பத்ராவதியில் நடிகர் ராஜ்குமார் குடும்பத்திற்கான கச்சேரிகளிலும், மேடை நாடகல்ங்களிலும் ஸ்வர்ணலதா பாட ஆரம்பித்தார். பத்து வயது சிறுமியாக அப்போதே மேடையில் அவர் மைக் பிடித்து பாடிய விதம் கண்டு தான் அசந்துபோனதாகச் சொல்வார் அதே கச்சேரிகளுக்கு கிடார் வாசிக்க சென்ற பிரபல கிடார் கலைஞர் சந்திரசேகர் அண்ணா.
சினிமாவில் பாட வைக்கும்படி எல்லோரும் கூறியதை கேட்டு ஸ்வர்ணலதாவின் அண்ணன்கள் அவரை எம் எஸ் வி இடம் அழைத்து வந்தனர். சில வருடங்களுக்கு பின்பு எம் எஸ் வி இடம் ஒரு பாடல் பதிவிற்காக கிடார் வாசித்து கொண்டிருந்த சந்திரசேகர் அண்ணனை பாடகர் அறைக்கு அழைத்தாரம். அங்கு ஒரு குட்டி பெண் நின்று கொண்டிருந்ததாம், இந்த குட்டி பெண் பாடுவதை கேளேன் என்று ஒரு ஆலாபனை செய்ய சொன்னாராம் எம்.எஸ் வி. அவள் பாட அசந்து போன இவர், நீ பத்ரவதியில் மேடையில் பாடிய பெண்தானே என்று கேட்க ஆமாம் சார் என்று அப்பெண் மெதுவாக கூறினாளாம். அன்றுதான் ஸ்வர்ணலதாவின் இசை வாழ்கை ஆரமபமானது. எம் எஸ் வி யால் அறிமுகபடுத்தபட்ட ஸ்வர்ணலதா அடுத்த சில வருடங்கள் வாய்ப்புகள் குறைந்து இருந்தாலும் இளையராஜாவின் மோதிரக்கையால் குட்டப்பட்டு "மாலையில் யாரோ .." பாடி இசை வானில் சிறகடித்து பறந்தார்.
ஆரம்பம் முதலே ஆஸ்துமாவில் அவஸ்தை பட்டுவந்த ஸ்வர்ணலதா யாரோடும் அதை பகிர்ந்து கொண்டது இல்லை. எஸ் பி பி போல ஸ்டுடியோவிற்குள் நுழைந்தால் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்திற்குள் தன் பங்கை முடித்துக்கொண்டு போய்விடும் திறமை கொண்டிருந்ததால் அவர் யாரோடும் பேசவோ, அளவலாவவோ நேரம் இருந்ததில்லை. எப்போதும் பாதுகாவலர்களாய் இருக்கும் அவரின் மூன்று அண்ணன்கள் ஸ்வர்ணலதவை யாருடனும் பேச அனுமதித்ததும் இல்லை. ஸ்வர்ணலதாவும் உள்ளூர ஏதோ குறை இருபது போல யாரோடும் ஒட்டாமல் இருப்பாராம். யாரை பார்த்தாலும் ஒற்றை சிரிப்புடன் நிறுத்தி கொள்வாராம். அதனாலேயே அவருக்கு நண்பர்களும், அவர் மனதை அறிய யாரும் இல்லை.
1994 முதல் 2004 வரை அவர் பாடிய பல இந்தி பாடல்கள் பயங்கர ஹிட். குறிப்பாக ரங்கீலா படத்தில் வரும் "ஹாய் ராமா யே கியாகுவா " பாடல் அவரின் வித்தியாசமான பாடும் முறையை இந்தி உலகிற்கு காட்டியபோது ஸ்வர்ணலதாவிர்க்கு வாய்ப்புகள் குவிந்தன. ஆனாலும் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பாடிப் பார்த்து தனக்கு பிடிக்கவில்லை என்றால் உடனே "எனக்கு இந்த பாட்டு பாட வரவில்லை .." என்று கூறிவிட்டு போய்விடுவாராம், சில நேரங்களில் இசை அமைப்பாளர்களாலேயே அவரை புரிந்து கொள்ள முடிந்ததில்லை. ஆனாலும் அவர் எல்லோருக்கும் செல்லப் பிள்ளையே. தன் பாடல்களை தேர்ந்தெடுத்து பாடுவதில் ஸ்வர்ணலதா சிரத்தை எடுத்து கொண்டதன் காரணமாகத்தான் அவரின் பெரும்பாலான பாடல்கள் மிக பெரிய ஹிட் ஆகின. சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும், புது இசை அமைபாளர்களாக இருந்தாலும் , உடன் பாடுபவர்களோ யாராக இருந்தாலும் அதை ஒரு பொழுதும் கண்டு கொள்ளாத ஸ்வர்ணலதா அந்த பாடலில் தன பங்கு எவ்வளவு நன்றாக இருக்கவேண்டும் எனபதற்காக வித விதமாக பாடி காட்டி இசை அமைப்பாளரிடம் மிக சிரத்தையாக பாடுவாராம். ஆகையால் தான் எம் எஸ் வி, இளையராஜா, வித்யாசாகர், கார்த்திக்ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, நௌசாத அலி, அணு மாலிக் உட்பட அத்தனை இசை அமைப்பலர்களிடமும் பாடினார் .. இந்தியாவின் பதினான்கு மொழிகளில் இருபது வருடங்களில் ஏழாயிரம் பாடல்களை பாடினார்.
முதல் முதல் இவர் பாடிய ரங்கீலா பாடலை கேட்ட இந்தி திரை உலகினர் இப்பாடலை பாடிய பெண் மிக பெரும் அழகியாக இருப்பார், காதலித்திருப்பார், அது போல இருப்ப்வர்களுக்குதான் இவ்வளவு அழகுனர்ச்சியோடு பாட வரும் என்றெல்லாம் பேசினார்களாம். குறிப்பாக அனுமாலிக் ஸ்வர்ணலதாவை பாடவைத்தே தீருவது என்று அழைப்பு விடுத்தார். ஆனால் நேரில் பார்க்கும்போது படு எளிமையாக, தாழ்மையோடு, நன்றி உணர்ச்சியோடு, பணிவோடு இருந்த இந்த பெருந்திறமைகாரியை கண்டு அசந்து போனாராம். அப்பேற்பட்ட திறமையயுள்ளவர் ஏன் தனித்தே இருந்தார் என்பதே ஒரு பெரிய கேள்விக்குறி ... ஆனால் ரசிகர்களுடன் அளவளாவும்போது மிக ஆசையாக பேசுவாராம்.
2006 வரை தொய்வில்லாமல் பாடி கொண்டிருந்த ஸ்வர்ணலதா திடிரென்று பாடுவதை நிறுத்தினார். அவர் என்ன ஆனார், எங்கே போனார் என்ற பல கேள்விகளுக்கு பதிலே இல்லாமல் இருந்தது, அவரின் குடும்பத்தினர் "அவர் பாடுவதற்கு சில காலம் ஆகும்".. என அவரின் வாய்ப்புகளை தவிர்த்து வந்தனர். 2010 ம் வருடம் செப்டம்பர் 12 ஞாயிற்றுகிழமை ஒரு முகூர்த்த நாள். நான் ஒரு திருமணத்தில் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தேன், மணமக்கள் குடத்துக்குள் மோதிரம் போட்டு விளையாடி கொண்டிருந்தனர். என் நண்பர் சந்தோஷ் அழைத்து "அண்ணா உங்க ஸ்வர்ணலதா இறந்துட்டாங்களாம் ... இப்போதான் டீவீல நியூஸ் போட்டாங்க " என்று சொன்னதும் என் உலகமே கதி கலங்கி போனது.
என் நெஞ்சம சுக்கல் சுக்கலாக உடைந்தது, இடிந்து ஒரு நாற்காலியில் அமர்ந்தவன் ஒன்றுமே பேசாமல் இருந்தபோது போனில் ஏதோ கெட்ட செய்தி வந்துவிட்ட்டது என்று புரிந்து கொண்ட வீடியோக்ராபர் என் கேமிராவை வாங்கி ஸ்டில் எடுக்க ஆர்மபித்தார். அன்று முதல் அந்த மாதம் முழுவதும் நான் யாரோடு அவ்வளவாக பேசவோ, சரியாக உணவருந்தவோ இல்லாமல் அங்கும் இங்கும் திரிந்தேன். காண்பவரிடம் எல்லாம் ஸ்வர்ணலதா இறந்ததை சொல்லி சொல்லி புலம்பினேன். என் வீட்டில் நடந்த துக்கம் போலத்தான் இருந்தேன்.அவர் ஒரு வெறும் சாதாரண பாடகி தானே .. அப்படி என்ன ? என்ற சிலரின் கேள்விக்கு புரியாத பதில் பிறகு புரிந்தது. என்னை போலவே உலகெங்கிலும் இருந்த ஸ்வர்ணலதாவின் ரசிகர்கள் எல்லோரும் அன்று மிக உடைந்து போனார்கள் என்பது பின்னர் நிறைய பேரிடம் அளவளாவும் போதுதான் கண்டு கொண்டேன்,.
அவர் பெரிதும் நம்பிய அவரின் குடும்பத்தினர் அவர் மரணம் குறித்து சொல்லும் சில கூற்றுகள் ஏற்றுக் கொள்ள படக்கூடியவையாக இல்லை . அதற்கு பின்னர் ஸ்வர்ணலதாவின் மரணம் குறித்து இரங்கல் விசாரிக்க சென்ற ரசிகர்களை கூட அவர்கள் சரியாக பேசாமல் திருப்பி அனுப்பிவிட்டனர், அவரின் பொருட்கள் அவார்டுகள் கூட யாருக்கும் காண அனுமதிக்கப் படவில்லை, விஜய் டிவி யில் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் அவர்கள் ஸ்வர்ணல்தாவுக்கு அளித்த "வாழ்நாள் சாதனையாளர்" என்ற விருதை பெற்றுகொள்ளகூட அவர் குடும்பத்தில் இருந்து ஒருவரும் வரவில்லை.

ஸ்வர்ணலதா என்ற தேவதை குறித்த எந்த ஒரு நினைவுகூரலுக்கும் அவர்கள் விரும்பவும் இல்லை. ரசிகர்களை பேசக்கூட அவர்கள் தயாராய் இல்லை என்பது நிறைய ரசிகர்கள் குமுறியபோது ஒரு உண்மை மட்டும் புரிந்தது. மனிதராக பிறந்த தேவதைகளின் வாழ்க்கை அவ்வளவு அழகாக இருப்பதில்லை. ஸ்வர்ணலதா என்ற ஒரு தேவதை. மண்ணோடு மண்ணாகிவிட்டார். ஆனால் அவரின் பாடல்கள் என்றென்றும் ஒலித்து கொண்டே இருக்கும். இந்த சினிமாவில் அவர் இறந்த பிறகும் இன்று வரை அவரை பற்றி ஒரு நாளும் ஒருவர் கூட எந்த தவறாக பேசாதபோது "அவர் எவ்வளவு உண்மையான நல்ல ஆத்மா" என்று புரிய முடிந்தது. ஸ்வர்ணலதா ஒரு சரித்திரம்
- 4தமிழ்மீடியாவிற்காக: Viji Connect
http://4tamilmedia.com/all/tips/23603
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக