தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 13 ஜூன், 2014

நிறங்களுக்குள் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்!

நாம் அன்றாடம் உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை எல்லாவற்றிலும் ஏராளமான நிறங்கள் காணப்படுகின்றன.
இதை பார்க்கும் போது எல்லாருக்குமே ஏதாவது ஒரு விடயம் நிச்சயமா தோன்றும்.
ஏன்னா மனிதர்களின் உணர்வுகள், மூளையின் செயல்திறன் மற்றும் உடல்நலத்துடன் நிறங்கள் தொடர்புடையதா இருக்கு.
குழந்தை பருவத்தில் இருந்தே நிறங்களுக்கான அர்த்தங்களை பள்ளியிலிருந்தோ அல்லது பெற்றோர்கள் வாயிலாகவோ கற்றுக்கொள்கிறோம்.
உதாரணத்திற்கு சிவப்பு என்றால் அபாயம், இரத்தம், பச்சை என்றால் பசுமையான சூழ்நிலை, வெள்ளை என்றால் சமாதானம் என ஒவ்வொரு நிறத்திற்கும் பல்வேறு அர்த்தங்கள் கொடுக்கப்படுகின்றன.
இதை விஞ்ஞானியாக ரீதியாக பார்த்தால், ஒரு பொருளில் கடத்தப்படுகின்ற, தெரிக்கப்படுகின்ற ஒளியினால் கட்புலத்தினால் உருவாகின்ற ஒரு காட்சியின் விளைவுதான் நிறம்.
ஒளி இல்லை என்றால் நிறங்கள் இல்லை, ஒளிகள் தான் நிறங்களை உருவாக்குகின்றன.
ஆனால் மனிதன் நிறங்களை உருவாக்க ஆரம்பித்தது இயற்கையின் வாயிலாகத்தான்.
அந்த காலத்துல குகைகால மனிதர்கள் கற்பனைகளில் தாங்கள் கண்ட காட்சிகளை சித்தரிப்பதற்காக முதலில் செம்மண்ணை பயன்படுத்தி இருக்காங்க.
காலப்போக்கில மரங்கள், பூக்கள் போன்றவற்றில் இருந்து எடுக்கப்பட்ட சாயங்கள் மற்றும் மரத்தின் பிசின்களை பயன்படுத்தி நிறங்களை தயாரிக்க ஆரம்பித்தார்கள்.
பொதுவாக அடிப்படை நிறம் என்பது நீலம், மஞ்சள், சிவப்பு நிறத்தின் கலவை தான்.
வெண்மை மற்றும் கருமை நிறத்தை மட்டும் தான் தனியாகவே குறிப்பிடுகின்றனர்.
மற்ற நிறங்கள் அனைத்தும் இவற்றின் கலப்பினாலேயே உண்டாகின்றன, ஒவ்வொரு நிறத்திற்கும் நம் வாழ்வில் ஒரு பங்கு உள்ளது.
ஆம் ஒருவர் விரும்பும் நிறத்தைக்கொண்டே அவர்கள் குணத்தையும் கணிக்க இயலும் என்பது உளவியலாளர்களின் கருத்து.
என்னதான் மனித இனம் வளர்ந்து வந்தாலும், தற்போது நிறத்தை வைத்தே மனிதர்களை எடைபோடும் நிலை உள்ளது.
ஒன்றுக்கொன்று நேர் எதிராக கருப்பு, வெள்ளை நிறங்களை பார்க்கிறார்கள்.
இனவெறிக்கு எதிரா என்னதான் போராட்டங்கள் நடந்தாலும் இந்த நிலை தொடர்ந்துகிட்டே தான் இருக்கு.
இது ஒருபக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட நிறங்களால் ஆன மோதிரங்கள் அணிந்தால் வாழ்க்கை பிரகாசமாகும், வீட்டுக்கு குறிப்பிட்ட நிறத்துல பெயிண்ட் அடிச்சா நல்லா இருக்கும்னு சொல்லிக்கிட்டு ஜோசியர்களும் சுத்திகிட்டு தான் இருக்காங்க.
இது எல்லா இருந்தாலும் நிறம் என்பதே அற்புதமான விடயம் தான்.
ஒளி, காற்று மண்டலம், நம்முடைய கண்கள் என அனைத்தும் சேர்ந்து உருவாக்கும் ஒரு மாயம் தான் நிறம்.
அதை ரசிக்கிறது விட்டு விட்டு தேவையில்லாத அர்த்தங்களை நிறத்தின் மேல் மனிதன் புகுத்திக் கொண்டிருக்கிறான் என்பதே நிதர்சனமான உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக