இன்றைய நவீன மயமான உலகில் ஆண், பெண் இரு பாலரும் தங்களை அலங்கரிப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதற்காக அவர்கள் கடைகளில் விற்கப்படும் பல பொருட்களை வாங்கி பயன்படுத்துவதுடன், வாரந்தோறும் அழகுநிலையம் சென்று வருகின்றனர்.
இப்படி இருக்க, உலகில் உள்ள மக்கள் தங்களது அழகை அதிகரிப்பதற்கு சில விசித்திரமான பேஷியல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
நத்தை பேஷியல்
இப்படி நத்தையை முகத்தில் விடுவதால், சருமத்தில் உள்ள அழுக்குகளை நத்தை உறிஞ்சிவிடுவதோடு, அது சருமத்திற்கு தேவையான ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகளை கொண்டுள்ளது.
இரத்த பேஷியல்
மனித உடலில் உள்ள இரத்தத்தைப் பயன்படுத்தியும் ஃபேஷியல் செய்கிறார்கள். அதிலும் அப்படி எடுக்கப்படும் இரத்தத்தை, பிளாஸ்மாவுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவுவார்கள். இதுவும் உலகில் செய்யப்படும் விசித்திரமான பேஷியல்களில் ஒன்று.
மீன் முட்டை ஃபேஷியல்
மீன் சாப்பிட்டால் உடலுக்கும், சருமத்திற்கும் மிகவும் நல்லது. ஆனால் உங்களுக்கு மீன் முட்டையை சாப்பிட பிடிக்காதெனில், கவலை வேண்டாம். அதனைப் பயன்படுத்தி பேஷியல் செய்யலாம். மேலும் இது தான் தற்போது ட்ரெண்ட்டில் உள்ளது.
தேனீக்களின் விஷம்
தேனீக்களின் விஷத்தைப் பயன்படுத்தியும் பேஷியல் செய்கிறார்கள். இப்படி செய்வதால், அந்த விஷமானது இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கொலாஜனை சீராக்குகிறது.
ஒயின் பேஷியல்
ஒயினை குடித்தால் மட்டுமின்றி, அதனை சருமத்திற்கும் பயன்படுத்தலாம். அதிலும் உலர்ந்த சருமம் உள்ளவர்கள் வெள்ளை ஒயினையும், எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் ரெட் ஒயினையும் சருமத்திற்கு பயன்படுத்துவது நல்லது.
இது விசித்திரமானதாக இல்லாவிட்டாலும், உலகில் பலரால் செய்யப்பட்டு வருகிறது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக