பாட்டில்களிலும், கேன்களிலும் அடைத்து விற்பனைக்கு வருகிற தண்ணீரின் சுவையானது நாள்பட மாறிக்கொண்டே இருக்கும்.
‘தண்ணீர் கெட்டுப் போவதில்லை’ என்பது எல்லோருக்கும் தெரியும். சரியாக பத்திரப்படுத்தாவிட்டால், அதன் பிளாஸ்டிக் பாட்டிலே, தண்ணீரின் சுவையை மிக மோசமானதாக மாற்றி விடும்.
சூரிய வெளிச்சம் பட்டாலும், பிளாஸ்டிக்கில் மாற்றங்கள் உண்டாகி, அதன் பாதிப்பு, தண்ணீரின் சுவையை மாற்றும்.
எனவேதான் பாட்டில் மற்றும் கேன்களில் தண்ணீர் வாங்கினால், அவற்றை ஈரமோ, சூரிய வெளிச்சமோ படாத இடத்தில் வைக்க வேண்டும் என்றும், அதன் பக்கத்தில் பெயின்ட், எரிபொருள்கள், உலர்சலவைக்கான ரசாயனங்கள் எதுவும் இருக்கக்கூடாது எனவும் சொல்லப்படுகிறது.
பாட்டிலை திறந்து விட்டால், அதை அதிகபட்சம் 1 வாரத்துக்குள் உபயோகித்து விட வேண்டும். இல்லாவிட்டால் அதில் பாசி மற்றும் பாக்டீரியா தொற்றி, வளரத் தொடங்கி, அதைக் குடிப்போரின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அபாயம் உண்டு.
அதற்காக திறக்கப்படாமலே வைத்திருக்கிற வாட்டர் பாட்டில்களை எத்தனை நாள் வேண்டுமானாலும் வைத்து உபயோகிக்கலாம் என அர்த்தமில்லை. அதற்கும் காலக்கெடு உண்டு என்பதால்தான் வாட்டர் பாட்டில்களில் எக்ஸ்பைரி திகதி குறிப்பிடப்படுகிறது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக