___________________________________________________________
நம்பாலக்கோட்டை சிவன் கோவிலின் சாவியை நிலம்பூர்(கேரளா கோவில் நிர்வாகத்திடம்) கூடலூர் ஆர்.டி.ஓ. ஜெகஜோதி நேற்று முறைப்படி வழங்கி னார். ஐகோர்ட்டு உத்தரவு:-நம்பாலக் கோட்டை வேட்டைக்கார சிவன் கோவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட் டில் இருந்து வந்தது. இந்த நிலையில் கேரள மாநிலம் நிலம்பூர் கோவிலக நிர்வாக செயல் அலுவலர் அசோக் வர்மன் சென்னை ஐகோர்ட் டில் நம்பாலக்கோட்டைவேட் டைக்கார சிவன் கோவில் நிர்வாகத்தை தங்களுக்கு வழங்க உத்தரவிடவேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் யாரும் ஆஜர் ஆக வில்லை என கூறப்படு கிறது. இதையொட்டிநம்பாலக் கோட்டை வேட்டைக்கார சிவன் கோவில் நிர்வாகத்தை நிலம்பூர் கோவிலகத்திடம் ஒப் படைக்க வேண்டும் என கடந்த 23-10-2013 அன்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நிலம்பூர் கோவிலக நிர்வாகம் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்ற கூட லூர் ஆர்.டி.ஓ.வுக்கு உத்தர விட வேண்டும் என வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வேட்டைக்கார சிவன் கோவில் சாவி ஒப்படைப்பு
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நம்பாலக் கோட்டை கோவில் நிர்வா கத்தை நிலம்பூர் கோவிலக நிர் வாகத்திடம் உடனடியாக ஒப் படைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் கடந்த 29-ந் தேதி கூடலூர் ஆர்.டி.ஓ. ஜெகஜோதி நம் பாலக் கோட்டை கோவில் நிர்வாகத்தை நிலம்பூர்கோவில கத்திடம் ஒப்படைக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டார்.
நேற்று காலை 10 மணிக்கு கூடலூர் ஆர்.டி.ஓ.ஜெகஜோதி யிடம், இந்து சமய நிலையத் துறை அலுவலர் நம்பாலக் கோட்டை வேட்டைக்கார சிவன் கோவிலின் சாவியை வழங்கினார். பின்னர் ஆர். டி.ஓ. ஜெகஜோதி, நிலம்பூர் கோவிலக செயல் அலுவலர் அசோக் வர்மனிடம் சாவியை ஒப்படைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக