.தமிழரின் நீர் மேலாண்மை !!
.தமிழரின் நீர் மேலாண்மை :
=======================
i ) கயம், வாவி, தடாகம், பொய்கை, குட்டம், குளம்,ஏரி, மடு என்று பல்வேறு நீர்நிலைகள் அமைத்து நீர் மேலாண்மையில் தேர்ச்சி பெற்றவன் தமிழன் என்று நம் மேனாள் முதல்வர் கலைஞர் ஒரு கருத்தரங்கில் கூறினார். இன்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை ஏரிகள் மாவட்டம் என்றே உலகளவில் அழைக்கப் படுகிறது. செங்கல்பட்டு மாவட்டமும் ஏரிகள் நிரம்பிய மாவட்டம் ஆகும்.
ii) 2100 - ஆண்டுகளே ஆன கல்லணை :
கி .மு .இரண்டாம் நூற்றாண்டிலேயே உலகின் முதல் அணையைக் கட்டியவன் சோழன் கரிகாலன்.திருமாவளவன் மற்றும் கரிகால் பெருவளத்தான் என்று அழைக்கப்பட்ட சோழ மன்னன் உலகிற்கு அளித்த கொடையே கல்லணை ஆகும்.
திருமாவளன் என்னும் கரிகால் பெருவளத்தான்
உயரிய பொறியியல் தொழில் நுட்பத்தின் சொந்தக்காரன் தமிழனே ஆவான். அதிலும் சிறப்பு என்னவென்றால் 2100 - ஆண்டுகளாக நின்று நிலைத்து இன்றும் பயன்பாட் டில் உள்ளதை உலக நாடுகள் வியந்து போற்றுகின்றனர்.
சோழரின் நீர் வலைப் பின்னல் :
கல்லணை
\
iii) சோழரின் நீர் வலைப்பின்னல் :
உலகமுழுதும் பொறியியல் கல்லூரிகளில் கல்லணையின் தொழில் நுட்பத்தைப் பற்றியும் , மேலும் சோழ மன்னர்களின் நீர்ப்பாசன பொறியியல் அறிவின் உச்சத்தின் விளைவாகக் காவிரி ஆற்றினைப் பல ஆறுகளாகப் பிரித்து உருவாக்கிய கிளை நதிகள்: குடமுருட்டி, வெட்டாறு, வெண்ணாறு, வடவாறு பற்றியும் அத்தோடின்றி அந்த ஆறுகளையும் அரசலாறு, வீர சோழனாறு, ஓடம்போக்கி போன்ற கிளை நதிகளாகவும், அவைகளையும் கால்வாய்கள், வாய்க் கால்கள் என சோழமன்னர்கள் பிரித்துப் பிரித்து வலைப் பின்னல்கள் போன்ற உலகத்தின் தொன்மையான காவிரி நதிவலைப் பின்னலை (டெல்டாவை) உருவாக்கியதுபற்றியும் பாடங்களாகப் படிக்கின்றார்கள்.
iv) நீர் மேலாண்மையில் தமிழரின் மாற்று சிந்தனை:
வானிலிருந்து விமான மூலமாக நதியின் போக்கை ஆராய்ந்து மட்டுமே கிளைநதிகளை வெட்ட முடியும் என்ற இன்றைய அறிவியலை எப்படி அன்றே சோழ மன்னர்கள் முறியடித்தார்கள்? வெள்ளம் கரை புரண்டோடும் காலங்களில் கரைகளைத் திட்டமிட்டுஉடைத்து நீர் பாய்ந்தோடும் வெள்ளப் போக்கினை ஒட்டியேஅவர்களால் கிளை நதிகளை வெட்ட முடிந்த உண்மையை அறிந்த இன்றைய பொறியியல் வல்லுனர்கள் அதிர்ந்து வியந்து பராட்டுகிறார்கள்.
v) உலகின் இரு டெல்டாக்கள் :
மனித முயற்சியால் உருவாகிய உலகின் இரண்டு பழைமையான டெல்டாக்களில் நமது காவிரி டெல்டாவும் ஒன்று . பிறிதொன்று தென் அமெரிக்காவில் உள்ளது.
vi) கரிகாலனின் காலமும் ஆங்கிலேயரின் அன்றைய நிலையும் :
சோழ மாமன்னன் கரிகால் பெருவளத்தான் என்றும் திருமாவளன் என்றும் அழைக்கப்பட்ட கரிகாலன் கட்டினான் கல்லணையை அதுவும் கி.மு. 2 - ஆம் நூற்றாண்டிலேயே என பெருமை பொங்கக் கூறினீர்களே !
இன்றைய நாகரிகத் தொட்டில் என அழைக்கப்படும் ஐரோப்பிய நாடுகளில் நம் கல்லணை கட்டப்பட்ட கி .மு. 2-ஆம் நூற்றாண்டில் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் ? கி.பி. 5-ஆம் நூற்றாண்டில்தான் ஆங்கிலேய நாடே உருவானது. "மத்திய ஐரோப்பவிலிருந்து ஆடுகளை ஓட்டிக்கொண்டு இங்கி லாந்து குடிபெயர்ந்த Anglo-Saxons வழியினரே இன்றைய ஆங்கிலேயர் கள் !
· Anglo-Saxons is the term usually used todescribe the invading Germanic tribes in the
south and east of Great Britain from the early 5thcentury AD, and their creation of the English nation, to the Norman conquest of 1066.[1] The Benedictine monk, Bede, identified them as the descendants of three Germanic tribes:[2]
vii) அன்று ஆங்கிலேயர் எங்கே ?
1500 ஆண்டுகளே அவர்களின் வரலாறு. கல்லணை கட்டிய சோழ மன்னன் கரிகால் பெருவளத்தான் காலத்திலேயே அதாவது கி.மு. 2-ஆம் நூற்றா ண்டிலே ஆங்கிலேயர் என்ற ஓர் இனமே இல்லை !
xi) வெள்ளம் கரைபுரண்டோடும் காலத்தேகட்டிய அணை :
ஆர்தர்காட்டன் மற்றும் எல்லிஸ் போன்ற பொறியியல் வல்லுனர்கள் ஆய்வின் முடிவு: கரிகாலன் கல்லணை கட்டிய காலத்தே காவிரி ஆற்றில் பெரும் வெள்ளங்கள் வண்டல் மண்ணுடன் அடித்துக் கொண்டு பொங்கி வரும்போது, கருங்கற்களைப் போட்டதாகவும், குழகுழப்புள்ள வண்டல் படிந்த மணலில் புதையுண்டு ஆழமாக இறங்கி கடைகால் இயற்கையாக அமைந்ததாக சோழர்களின் தொழில்நுட்பமதியை வியந்து பாராட்டிப் பதிவு செய்துள்ளார்கள்.
x) இன்றும் அடையமுடியாத கட்டுமானத்தின்மாட்சி :
ஆனால் இன்றோ மலைகளுக்கு இடையே நீர் வராத கோடை காலத்தே ஆட்களை அல்லது எந்திரங்களைப் பயன்படுத்தி கடைகால் வெட்டி, கருங்கல்லால் அல்லது கான்கிரீட்டால் அணை கட்டுவது உலகம் முழுவதும் நடைமுறை. 2100-ஆண்டுகட்கு முன்னர் சோழன் கடைப்பிடித்தத் தொழில் நுட்பத்தை (சிக்கனமான அதே சமயம் உயரிய முறையில் ) இன்று கூட செய்ய முடியாது !
xi) எப்படிக் கட்டினான் ?
கரிகாலன் ஈழ நாட்டைவென்று அங்கிருந்து காவிரி கரை எழுப்பி அணை கட்ட ஆட்கள் கொண்டு வந்தான் என்று, ஈழ நாட்டு நூல்களான மகாவம்சம், தீப வம்சம்கூறும்.
VI. தமிழரும் சுற்றுச் சூழலும் :
தமிழ் என்றாலே அமிழ்தம் என்று பொருள் என்றும் சங்க இலக்கியக்களில் காணப்படும் செய்திகள் இன்றும் தமிழகத்திலே காணமுடிகிறது என்று வியந்தும் , நானிலமாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என மலர்களின் பெயரிட்டு நிலத்தைப் பிரித்தவன் தமிழனே என்று உலகமே வியக்கிறது, என்று நடுவண் அரசின் வெளியீடான (பக்கம்: p.xxiv) People of India : Tamil Nadu ; Vol ; XL byAnthropological Survey of India என்னும் நூலில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது .
ii) எழுநிலை மாடம் :
சங்க காலப் பாடல்களில் எழுநிலை மாடத்தைப் பற்றி அழகுற சொல்லப் பட்டுள்ளது.
நெடுநல் வாடை கூறுவது :
"நிலவுப்பயன் கொள்ளும் நெடுவெண்முற்றத்து" (95)
பொருள் = எழுநிலை மாடத்தின் உச்சியில் திறந்த வெளி மாடத்திலிருந்து நிலவின் அழகைக் கண்டு மகிழ்வார்கள்.
"வேனிற்பள்ளித் தென்வளி தரூஉம்
நேர்வாய்க் கட்டளை, திரியாது, திண்நிலைப்
போர்வாய்க் கதவம் தாழொடு துறப்ப" (61-63)
பொருள் = வேனிற் காலத்தில் தென்றல் காற்றை விரும்பி, காலதர் (சாளரம்) பக்கம் போய் இருக்காமல், அதன் கதவை நன்கு அடைத்துவைத்திருப்பர் .
முல்லைப்பாட்டில்:
"இடம்சிறந்து உயரிய எழுநிலை மாடத்து
முழங்கு இறைச் சொரிதரும் மாத்திரள் அருவி
இன்பல் இமிழிசை ஓர்ப்பனள் கிடந்தோள்" (86-88)
பொருள் = மழை நீர் குழாய்களின் வழியே கொட்டும் போது பல வகையான இன்னிசை ஒலிகளை எழுப்ப, கேட்டுக் கொண்டே, எழுநிலை மாடத்தில் தலைவி படுத்திருந்தாள் - பருவங்களுக்கேற்றவாறு முதல் நிலை மாடம் தொடங்கி ஏழாவது நிலை மாடம் வரை தலைவனும் தலைவியும் தங்குவதாக அறியப்படுகிறது.
ஆறு பருவங்கள்:
1.இளவேனில் - தை, மாசி;
2. முதுவேனில் - பங்குனி, சித்திரை
3. கார் - வைகாசி, ஆனி
4.கூதிர் - ஆடி, ஆவணி
5. முன்பனி - புரட்டாசி, ஐப்பசி
6. பின்பனி - கார்த்திகை, மார்கழி.
iii) சுற்றுச் சூழலுக் கேற்ற வீடுகள் :
புவி வெப்ப மயமாதல் பற்றி தொடக்கத்தில் கூறியது நம் தமிழர் வாழ் முறையே இயற்கையோடியைந்த வாழ்வாகும். நாம் குடியிருந்த குடில்களும், வீடுகளும் மறு சுழற்சிக்கு ஏற்ற பொருள்களைக் கொண்டே கட்டப்பட்டன. தமிழ்நாட்டு தட்பவெப்ப நிலைக்கேற்ற வகையில் அமைந்தன அந்த குடியிரு ப்புகள். சிந்து வெளி காலத்திலிருந்தே ஹரப்பாவில் ஒரு அளவு உயரம் வரை சுட்ட செங்கற்களாலும், பின் மண்ணாலும் எழுப்பப்பட்ட சுவர்களைக் கொண்ட வீடுகளே. அது நம் தலைமுறை வரை கூட தொடர்ந்தே வந்தது. வெய்யிலின் சூட்டை உள்ளே விடாமலும், குளிர் காலத்தே அவ்வாறே குளிராமலும் தடுத்த கட்டிடங்களே. மேலே ஓடுகள் அல்லது தென்னை ஓலைகள் வேயப்பட்டன.
தமிழரின் ஏற்றமிகு காலம் :
தமிழர் உலகின் தொல்குடி என்பதும், அவர்களின் இயற்கையோடியைந்த வாழ்வும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உயர் தொழில் நுட்பத்தில் முன்னோடிகள்தான் என்பதும் வரலாற்றுக் காரணிகளால், 375 ஆண்டுகள் இருண்ட காலத்தில் ( கி.பி. 200 - ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 575 -ஆம் ஆண்டு வரை) தடை ஏற்பட்டதும் மீண்டும் சோழர் காலத்தில் மீட்சியுற் றதும் அவர்களுக்குப் பின்னர் புறக்காரணிகளால் இன்றுவரை கிடைத்ததைத் தக்க வைத்ததை விட இழந்தது ஏராளம் ! இருப்பினும் இன்றைய காலமே ஏற்ற மிகு காலம் !
ஒருவருக்கொருவர் போரிட்ட காலம் ஒழிந்து சேரநாடு நீங்கி தமிழ் நாடு ஒன்று பட்டு நிற்கிறது ! சேர, சோழ, பாண்டியர் மற்றும் எண்ணற்ற குறுநில மன்னர்கள் போர்க் கோலம் தவிர்த்து தமிழர் ஒன்று பட்ட இக்காலமே ( 64 - ஆண்டுகள்) ஏற்ற மிகு மீட்சிக்கு ஏற்ற பொற்காலம் ! சாட்சியாகக் கணினி மென்பொருள் துறையில் எழுச்சி பெற்ற தமிழர்தம் கொடி உலகளாவிப் பட்டொளி வீசிபறக்கிறது ! தமிழின எழுச்சியும் உறுதி என்ற நம்பிக்கையும் பிறக்கிறது ! விடை பெறுவோம் மீண்டும் சந்திக்கவே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக