சிவ மேனகை மண்ணே பெரிதென்று வாழும் ஒருவன் ,,தர்மன்
தன் மானம் பெரிதென்று வாழும் ஒருவன் ,,துரியோதனன்
வன்மம் பெரிதென்று வாழும் ஒருவன் ,,,சகுனி
பெண் இன்பம் பெரிதென்று அலையும் ஒருவன் ,,அர்ச்சுனன்
பெரும் கொடையே உயர்வென்று வாழும் ஒருவன் ,,கர்ணன்
சபதம் பெரிதென்று வாழும் ஒருவன் ,,,பிஷ்மன்
நானே கடவுள் என்று சுயநலம் பேசும் ஒருவன் ,,கிருஷ்ணன்
மனிதம் மதியாமல் வாழும் பெண்ணும் ஒருத்தி ,,,திரவுபதை ,,,
,,,,,இவர்களை முக்கியமாக புகழ்ந்தும் இகழ்ந்தும் எழுதப்பட்டதே மகா பாரதம் ,,,,,,,இன்றைய எனது இந்த பதிவுக்கான காரணம் ,,,,பல எம் தமிழர்களின் கருத்தாக ஒரு தவறான விடயம் இருக்கிறது அதை சுட்டி காட்டவே ,,,,,,,,அதாவது ,,,,,,
மாவீரன் துரியோதனன் தனக்கு உரிமை இல்லாத நாட்டுக்காக தேவை இல்லாமல் போரிட்டான் என்ற கருத்தும் தனக்கு உரிமை இல்லாத நாட்டின் வளங்களை கர்ணன் மற்றும் பலருக்கும் கொடை புரிந்தான் என்பதும் ,,,,,இது சரியானதா ,,,,அஸ்த்தினா புர அரசு உண்மையில் யாருக்கு உரிமை ,,,,,,,,,,,,விளங்காதவர்கள்
Thamo Suntharamoorthy அரசுரிமை குலமரபு எனில், வம்சஉரிமை எனில், சந்திரவம்ச வழியினருக்கு உரிமையுள்ள அஸ்தினபுர அரசுக்கு திருதராட்டிரனும், பாண்டுவும் எவ்விதத்தில் உரிமையுள்ளவர்கள்? அங்ஙனமாயின் விதுரன்? கௌரவர்கள்? பாண்டவர்கள்? இதிலென்ன கொடுக்கலும், வாங்கலும், கொடையும், தானமும்? அவர்களது உரிமைப்போராட்டத்தில் உயிரைப்பறிகொடுத்தது யார்?
சிவ மேனகை கீதையை பொறுத்தவரையில் ரஸ்ய அரசின் கொள்கையும் எனது கொள்கையும் ஒன்று ,,,,,,அழிவுகளுக்கு வழிகாட்டியாக எழுதப்பட்டது கீதை ,,,,,,,மகாபாரத யுத்தம் தர்ம யுத்தம் அல்ல குடும்ப யுத்தம் ,,,,,,,,வீணாக 40 இலட்சம் வீரர்களை கொன்று 18 இலட்சம் பெண்களை விதவை ஆக்கி ,,,வெறும் 6 பேரை மட்டும் தப்ப வைத்த யுத்தம் ,,,,,,யுத்தத்தில் வென்ற அரசை தர்மனுக்கு பிறகு ஆண்டது ,,,கிருஸ்ணர் தங்கை சுபத்திரையின் பேரன் ,பரீட்சித்து இது முழுமையான சுயநலம் ,,,,,,,அர்ச்சுனன் முதல் மனைவி சித்திராங்கதை மகன் பப்பர வாகன் உயிருடன் இருந்தான் ,,,,,இவன் ஒரு சந்தர்பத்தில் அர்சுனனை /தந்தையை /போரில் வென்றவன் ,,,,,பின்னர் இவர்களுக்கு ஏற்பட்ட போரால் குருவம்சம் நாக வம்சத்தால் முழுமையாக அழிந்தது இவை மறைக்கப்பட்ட வரலாறுகள் ,,,பல்லவர்காலத்தில் தெரு கூத்தாக நடித்து ஆவண படுத்தபட்டு ,உள்ளது
Thamo Suntharamoorthy பெரும் மக்கள் கூட்டத்தை அழிக்க ராஜதந்திரம் என்ற பெயரில் என்னென்ன சூழ்ச்சிகள், உபாயங்கள்? செய்பவனைத் தெய்வத்தன்மைக்கு உயர்த்திவிட்டதால் மட்டும் இவை நியாயமாகிவிடுமா? விதுரன் வில்லை முறிக்கவைத்து, கர்ணனின் கவசகுண்டலங்களைக் கவர்ந்து, நாகபாசத்துக்கு நடைமுறைத்தடைவிதித்து, தன்படையை (சாத்தகி முதலாய்) எதிரிக்குத் தானஞ்செய்து தான்மட்டும் இங்கிருந்து சாகசங்கள் புரிந்து, அரவானைக் களப்பலியிட்டு, அபிமன்யுவைப் பத்மவியூகத்தில் சிக்கவைத்து அழித்து, பாசுபதம் ஏவ, சக்கிராயுதத்தால் சன்னை (சூரியனை) மறைத்து ஜராசந்தனைக் கொன்றொழித்து, நடத்திய போரில் கண்டபலன் என்ன? பின்குறிப்பாக, இராஜசூயயாகமண்டபத்தில் சல்லியனைச் சகக்கராயுதத்தால் அறுத்தெறிந்து .............அப்பப்பா சொல்லி மாளவில்லை. இதில் எதுதான் இலங்கையில் நடக்கவில்லை. முடிந்தவர்கள் கோவில்கட்டிக் கும்பிடலாம். (தேர்ச்சக்கரம் புதையுண்டதும், சல்லியன் பாதியில்கழுத்தறுத்ததும்கூட உண்டு.)
சிவ மேனகை தாமோ ,,சுந்தர மூர்த்தி ,,ஐயா ,,,சிறு திருத்தங்கள் ,,,, சூரியனை மாயமாய் மறைத்து சால்வனை ,,,,,,யாக மண்டபத்தில் சக்கராயுதத்தால் சிசுபாலனை ,,,,,,,ஜராசந்தனை மல்யுத்தத்தில் கொன்றது வீமன் ,,,என்று ,,,,,நினைகின்றேன் .அருமையான கருத்துக்கள் ,,,,நன்றி ..,,,,,
Thamo Suntharamoorthyபாசுபதாஸ்திரத்தால் (கொடுத்தது சிவன்) மாய்த்தது ஜராசந்தனை. யாகமண்டபத்தில் கொன்றது சிசுபாலனை. இந்த சால்வனை நான் அறியவில்லை. சிசுபாலன் கொல்லப்பட்டது ஏன்? விடை பிள்ளையார் புராணத்தில் காணலாம். ''சிசுபாலன்றான் உருக்குமணிப் பேர்மின்னைப் புக்கெடுத்தேகுமெல்லைபுகுந்துயானடுபோர் செய்தவ் மைக்குழல்தனையும் பெற்றேன் மாமுகன்தனை யர்ச்சித்தே...'' இந்த ருக்மணி கிருட்டினன் மனைவி. எனவே பழைய பகையாகவும் இருக்கலாம். (சிசுபாலன் பெயர்க்குழப்பத்தைச் சுட்டிக்காட்டிமைக்கு நன்றி சகோதரி சிவமேனகை.)
பாரதத்தில் சிறப்பாக அனைத்தும் கூறப்பட்டுள்ளன!புதிய கதைகள் இடைச்செருகப்பட்டும் உள்ளன!காலமாற்றத்தால் குழப்பவாதிகள் கருத்தும் புகுந்தன,காரணம் எல்லாமே செவி வழி பேணப்பட்டவை,நேர்மை பிறழ்கையில்கதைகளும் அவரவர் விருப்புக்கிணங்க மாறின!கீதை பற்றி கண்ணதாசன் விளக்கமாக எழுதியுள்ளார்,அவரை விட அறிவாளியாக சிவமேனகை ரஷ்யர்களை துணைக்கு அழைத்துள்ளார்!அவர்களே தங்களுக்குள் ஒற்றுமையின்றி பிரிந்து உலகம் பார்த்து வியந்த அஞ்சிய நிலையை இழந்து பிச்சைகாரர் போலாகியுள்ளவர்கள்!!
சந்தனு மன்னனில் இருந்து பாரதக்கதையின் முக்கியம் தொடங்குகிறது!கங்கையை (இங்கேயே கதை பொய்யாகிவிட்டது,எனினும் கதையின் போக்கை வைத்தே நீதி சொல்கிறேன்)திருமணம் செய்து (அவள் தான் செய்யும் காரியத்துக்கு விளக்கம் கேட்கவோ,தடுக்கவோ கூடாது என்றும் மீறினால் சென்றுவிடுவேன் என்றும் காதல் பித்தனாக நின்ற மன்னனிடம் சத்தியம் பெற்று திருமணம் செய்தாள்)பிறந்த ஏழு பிள்ளைகளை கங்கையில் வீசிக்கொல்வதும் எட்டாவது குழந்தையை வீசும் நேரத்தில் அதை மன்னன தடுத்து வினா எழுப்பியதால் உண்மையை கூறி பிள்ளையுடன் சென்று உரிய வயதில் மன்னனுடன் அவனை ஒப்படைப்பதும் பாரதம் படித்தவர் அறிவர்!சிலகாலத்தில் முனிவருடன் வியாசரைப் பீர்டுத்த மீனவப் பெண்ணான சத்தியவதி மேல் சந்தனு காதல் கொள்வதும் அவள் தனது பிள்ளைகளுக்கு அரசுரிமை வராது என்று மறுப்பதும் அதனால் நான் திருமணம் செய்யேன் என்று சத்தியம் செய்தமையால் பீஷ்மர்
என்று பெயர் சந்தனு மன்னன் மூத்த புதல்வன் பெறுவதும் பின் அன்தனு,சத்தியவது தம்பதியாகி அவர்களுக்கு சத்தியவீரியன்,விசித்திரவீரியன் என்ற இரு பிள்ளைகள் பிறந்து ஒருவன் அவன் பெயர் கொண்ட கந்தர்வனால் கொள்ளப்பட மற்றவன் ஆட்சியை ஏற்பதும் அவனுக்கு திருமணம் செய்ய மூன்று பெண்களை (அம்பை,அம்பிகை,அம்பாலிகை)பீஷ்மர் கவர்ந்து வருவதும் அவர்களில் ஒருத்தி வேறு மன்னனி விரும்புவதாக சொல்ல அங்கு அவளை அனுப்பி,அவன் ஏற்கமறுத்து இவனும் மறுத்து அவள் இறந்து பிறந்து பீச்மரை கொள்ள காத்திருந்து என்று போகும் கதை! மன்னனுக்கு பிள்ளை இல்லாது போக வியாசர் மூலம் அவர்களுக்கு பிள்ளை வரம் அருளப்பட்டு,அப்போது கண்களை மூடியதால் திருதராட்டிரன் குருடாகவும்,அருவருத்ததால் பாண்டு குஸ்ரத்துடனும் வேலைக்காரிக்கு பிறந்த விதுரன் அறிவாளியாக சுகதேகியாக பிறந்ததும் அறிந்தே இருப்பீர்கள்!வியாசர் சத்தியவதி மகன்,வீரியனுக்கு அண்ணன்!இப்போது அரசன் பிள்ளைகளுக்கு சித்தப்பா!அவனுக்கு பிள்ளை இல்லையென்றால் அவர்களே வாரீசு!ஆனால் மன்னனுக்கு அவர்கள் தன் பிள்ளை என்றே தெரிந்திருந்தது!கண்ணில்லாதவனுக்கு அரசுரிமை இல்லை என்பதால் பாண்டு மன்னன் ஆனான்!பாண்டுவின் மனைவி பிள்ளைப்பேற முன்னால் காந்தாரி பிள்ளை பெற்றிருந்தால் அவள் பிள்ளைக்கு அரசுரிமை வந்திருக்கும்!ஆனால் பாண்டுவாலும் பிள்ளை பெற முடியவில்லை,திருதராட்டினனுக்கும் சக்தி இல்லை!வியாசர் மூலம் காந்தாரி கர்ப்பமாகும் சில காலத்துக்கு முன் குந்தியும் மாந்தாரையும் காட்டில் தேவர்கள் மூலம் கர்ப்பமாகி பிள்ளையும் பெற்றுவிடுகின்றனர்!கோபத்தால் வயிர்ரிலடித்து அழிந்த கர்ப்பத்தை வியாசர் தனது தவ வலிமையால் நூறு பிள்ளைகளாக்கினார்.மன்னனின் மனைவி பிள்ளைகள் என்பது நமக்கு தெரியும்,ஆனால் பாண்டு காட்ட்டில் பெற்ற பிள்ளைகள் என்ற அரசுக்கும் மக்களுக்கும் தெரிந்ததால் தர்மன் முடிக்குரிய இளவரசன் ஆனான்!எனவே துரியோதனனுக்கு ஆட்சியில் அதிகாரமோ,பங்கோ இல்லை!சிலர் நியாயப்படி பார்த்தாலும் தர்மன் யமனுக்கும் துரியோதனன் வியாசருக்குமே பிறந்தவர்கள்!மன்னனின் மனைவிகள் பிள்ளைகள் என்ற அடிப்படையில் ஆட்சி உரிமை தர்மனையே சாரும்!!கர்ணன் குந்தி பிள்ளை என்றாலும் பாண்டுவின் திருமணத்துக்கு முன்னாள் பிறந்தவன்!ஆட்சி உரிமை கேட்க முடியாது!தர்மன் மற்றும் நால்வரும் பாண்டு மகன் என்றே அன்றைய மக்கள் அறிவர்!தனது உரிமை அற்ற ஆட்சியில் ஒரு நாட்டை துரியோதனன் கர்ணனுக்கு எப்படி வழங்க முடியும்!!அப்போது முடிக்குரிய இளவரசன் தர்மன் மறுத்திருந்தால் அப்போது பாண்டு இல்லாமையால் இலவரசுக்கு உரிய வயது வரும்வரை பொறுப்பிலிருந்த திருதராட்டிநானோ,விதுரனோ,ஏன் பீஸ்மாரோ ஒன்றும் செய்திருக்க முடியாது!!இது நீதி!இதை அறியாத அறிவிலிகள் கதையைத்தாண்டி புதுக்கதை புனைவதும் அதற்கு ராசா போன்ற பலமிழந்த நாடுகளை உதவிக்கு காட்டுவதும் சிரிப்பே!!
அடுத்தவன் கொடுத்த சொத்தை கொடுப்பதா தானம்??சொந்தமாக கஸ்ரப்பட்டு உழைத்ததில் கொடுப்பதே தானம்!ஆனால் இன்று இலவசமாக கிடைப்பதையே அடுத்தவருக்கு கொடுக்காத தமிழன் அதை பாராட்டுவது???அறிவு சொல்ல கதைகள் வடித்தால் அதை அறிவிலிகள் என்ன செய்கிறார்கள்??!!எப்படியோ போங்கள் அழி குடி சொல் கேட்குமா??!
சிவ மேனகை :பாரதம் ,,,, ,துஸ்யந்தன் சகுந்தலை மகன் பரதன் ,,,,,,,பரதனுக்கு 9 பிள்ளை ஒருவருக்கு கூட அரசு நாட்டை சிறப்பாக ஆளும் தகுதி இல்லை என்று ,,,,,மக்களில் இருந்து சந்தனுவை மன்னன் ஆக்கினான் ,,இது தான் இந்தியாவில் மக்கள் ஆட்சியை நிறுவியவன் பரதன் என்ற கருத்து ,,,,,,அடுத்து சந்தனு கங்கையை மணந்தான் ,கங்கைக்கு 8 பிள்ளைகள் அவள் முதல் 7 பேரையும் கங்கையில் விட்டாள் 8 வது மகனை கொண்டு போய் வளர்ந்து கொண்டுவந்து கொடுத்துவிட்டு போனாள் அவன் தான் தேவ விரதன் பிஷ்மன் ,,,,சந்தனுவின் இரண்டாம் தாரம் சத்தியவதி இவள் ஏற்கனவே முனிவர் பராசரர் மூலம் வியாசரை பெற்றவள் ,,,,,,பின்னர் சந்தனுவை தன் பிள்ளை அரசு ஆளவேண்டும் என்ற கோரிக்கையுடன் மணந்து இவர்களுக்கு சித்திராங்கதன் விசித்திர வீரியன் என இரண்டு பிள்ளை இதில் சித்திராங்கதன் இறந்து விடுகின்றான் ,,அடுத்தவனுக்கு பிஷ்மன் பலத்தை வைத்து காசி இளவரசிகளை கடத்தி வந்து மணம் செய்து வைக்கின்றான் ,,அவர்களுக்கும் பிள்ளை இல்லாமல் விசித்த வீரியன் இறந்து விடுகின்றான் ,,,சத்தியவதி வம்சம் வேண்டும் என்று வியாசன் உதவியை நாடுகின்றாள் ,,,வியாசன் மூலம் அம்பிகை ,அம்பாலிகை ,அவர்கள் தோழி மூலம் முறையே ,,திருதராட்டினன் ,பாண்டு ,விதுரன் ,பிறக்கின்றனர் ,,,,திருத ராட்டிணன் முறைப்படி விவாகம் செய்து துரியோதனனும் சகோதரர்களும் பிறக்கின்றனர் ,,,பாண்டு சுயம்வரத்தில் குந்தியை மணந்து பின்னர் மாதுரியையும் மணந்து மந்திரங்கள் மூலம் பாண்டவர்கள் பிறக்கின்றனர் ,,,,,அரச உரிமை வம்சத்தில் வந்த மூத்த பிள்ளை வழி என்றால் யாருக்கு அரச உரிமை ,,,,,,
14-8-13
Thulanch Viveganand //அழிவுகளுக்கு வழிகாட்டியாக எழுதப்பட்டது கீதை. தந்தையை கொல்வதையும் அண்ணன் தம்பியை கொல்வதையும் நியாய படுத்தி அழிவுகளுக்கு வழிவகுக்கும் ஒரு நூல் ,இலக்கிய சுவைக்காக படிக்கலாம்.//
தெரியாமல் தான் கேட்கிறேன்… கீதையை உண்மையிலேயே படித்திருக்கிறீர்களா சோதரி? முன்பே சொன்னதுபோல், திரைப்படமே பார்க்காமல் விமர்சனம் எழுதுவதும், நூலைப் படிக்காமலே அதற்கு நயவுரை எழுதுவதும் இன்றைய முகநூல் அறிவுய்திகளின் இலக்கணமாக விளங்கும் இக்காலத்தில், அவர் அப்படிச் சொன்னார், இவர் இப்படிச் சொன்னார், சுவர் இப்படிச் சொன்னது என்பதற்காக, ஆராயமலே அதே கருத்தை நாமும் வழிமொழிய முற்பட்டுவிடுகிறோமே தவிர, தீர விசாரிப்பதில்லை.
நீங்கள் உண்மையிலேயே கீதையைப் படித்திருந்தால், ஆரியநூல், யுத்த நூல் என்ற முன்முடிவுகள் இன்றி நடுநிலையோடு அதைப் படித்திருக்கிறீர்களா? யுத்தத்துக்கு சம்பந்தமே இல்லாமல் அதில் விரிவாக ஆராயப்படும் கன்மயோகம், பக்தியோகம் முதலான பல ஆன்மிகப் பதங்களூக்கு உங்களால் சிறு விளக்கமேனும் தரமுடியுமா?
நிச்சயமாக கீதையை ஆழப் படித்த எவருமே இப்படிக் கூறமாட்டார்கள். பகுத்தறிவுவாதம் என்ற பெயரில், “சக”வை “சய” என்று காட்டு, “சய”வை “சக” என்று காட்டு என்று கங்கணம் கட்டித் திரியும் கேள்விச் செவியர்கள்தாம் இப்படிக் கூக்குரல் இட்டுத் திரிகிறார்கள்.
புராணாதிகாசங்கள் பெரும்பாலும் கற்பனையே! சில நடந்த சம்பவங்களை வைத்துப்பின்னி புதிதாக புனையப்பட்டவையாகவும் இருக்கலாம். கதையின் நோக்கத்தை சரியாகப் புரிந்துகொண்டோமானால், ஏன், எப்படி என்ற சிறுபிள்ளைத் தனமான கேள்விகள் எழாது.
Thulanch Viveganand “குஞ்சுக்கிட்ட அஞ்சு சொக்கா இருக்கு.. அப்பாக்கு ரண்டு தந்துட்டியள், இப்ப குஞ்சுக்கிட்ட எத்தின சொக்கா இருக்கு?”
இன்றைக்கும் சிறுகுழந்தைகட்கு கணக்கு சொல்லித்தர பயன்படுவது சொக்லேட் முதலான குழந்தைகளுக்குப் பிடித்த பொருட்கள் தான்!
சொல்லிக்கொடுக்கும் தந்தையின் நோக்கம் குழந்தை கணிதத்தைக் கற்கவேண்டுமென்பது தான்! இப்படிக் கற்பிக்கும்போது குழந்தை இலகுவாக கணக்கைப் பிடித்துவிடுகிறது. ஆர்வமுள்ள குழந்தை கற்கும்! விருப்பமில்லாதவை, கணக்கை விட்டுவிட்டு உண்மையிலேயே சொக்லேற் வேண்டும் என்று அடம்பிடித்து அழும்.
நம்மைப் பொறுத்தவரையும் இதே சொக்லேற் கதைதான். புராணாதிகாசங்கள், பஞ்சதந்திரக் கதைகள் எல்லாம், ஏதோ ஒரு நல்லவிடயத்தை சொல்வதற்காக கற்பனையும் மீமாந்தமும் சேர்த்து சுவையூட்டப்பட்ட அழகான படிப்பினைக் கதைகள் தான்!
சின்ன வயதில் பாட்டி வடைசுட்ட கதையை வாய்பிளந்து கேட்டாலும் அப்போதைக்கு நமக்கு அது ஒரு கதை மட்டுமே! ஆனால், பின்னாளில், நம்மை யாராவது அளவுக்கதிகமாக புகழும்போது, நரியும் காகமும் ஞாபகத்திற்கு வந்து “புகழ்ச்சிக்கு மயங்காதே” என்று எச்சரித்துவிட்டு மறைகின்றன!
கெட்டித்தனம நிறைய இருந்தும், சாதாரணதர, உயர்தர பரீட்சைகளில் கோட்டைவிட்டுவிட்டு, “முயல் - ஆமை” கதையை நினைவுகூராத மாணவர்களும் இங்கு இல்லாமலில்லை!
கதை கேட்பதற்கு சுவாரசியமானதுதான்! அது தரும் நீதியும் வாழ்க்கைப் பாடமும் மிக ஆழமானது! பாரதத்தை வெறும் படிப்பினைக் கதையாக்க் கொண்டால் எந்தவித குழப்பமும் இல்லை! அதில் பிழை கண்டறிவது என்பது, பாட்டி வடை சுட்ட கதையை முதன்முதலாக கேட்ட குழந்தை, “பாட்டி நிண்டுகொண்டு சுட்டவவே? இருந்துகொண்டு சுட்டவவே?”, “நரி உண்மைலயே கதைக்குமா?”, என்று கேள்விகேட்பதுபோலத் தான் இருக்கிறது.
உலகிலேயே மிக நீளமான காவியமான மகாபாரதத்தை வம்பிற்கு இழுக்கிறீர்கள். இதில் விவாதம் வைத்தால், ஆயிரமாயிரம் பாரதங்கள் எழுதவேண்டி வரும். தவிர, இதில் தங்களுடன் வாதிடும் அளவுக்கு நேரமும், வயதும் தகுதியும் தமியேனுக்கு இல்லை என்றே கருதுகிறேன்
Thulanch Viveganand ஒரு சின்ன உதாரணம் சொல்லிவிட்டு டாட்டா காட்டலாமா?
நம் பார்வையிலும் சந்தனு பார்வையிலும், கங்கை ஈவிரக்கமற்ற பெண், பெற்ற குழந்தைகளையே நதியில் எறிந்துகொன்ற அரக்கி. ஆனால், பாரதம் சொல்வதென்னை? இறந்த எழுவரும் உடனே ஏழு வசுக்களாக முக்திபெற்று விடுகின்றார்கள். உயிர்தப்பும் எட்டாவது வசுவான பிரதியுசன் மட்டும் வீட்டுமனாக புகழடைகிறான். அதேநேரம் நீதிமானாக இருந்தும், தன் வாழ்நாளில் எத்தனையோ தவறுகளை தானே செய்தும், செய்ய உடன்பாடாக இருந்தும், இறுதியில் அம்புப்படுக்கையில் நாட்கணக்கில் வாடி உயிர்துறக்கிறான். எட்டுவசுக்களின் நிலையில் நின்று பார்த்தால் கங்கை செய்தது சரியா? தவறா?
// பெண் இன்பம் பெரிதென்று அலையும் ஒருவன் ,,அர்ச்சுனன்//
தயவுசெய்து நூலை முழுதாகப் படித்துவிட்டு கருத்துரையுங்கள் சோதரி… அஞ்ஞாதவாசத்தில் அருச்சுனன் திருநங்கையாகக் காரணம் தெரியுமா? இந்திர சபையில் தன்னைக் கூடமுயன்ற ஊர்வசி(அல்லது திலோத்தமை?), தன் தந்தை இந்திரனின் போகப்பொருள் என்பதால், அவளை “அம்மா!” என்றழைத்து அவள் ஆசைக்கு இணங்காததால் தான், அவனை ஆண்மையற்றவனாக மாறச் சாபமிடுகிறாள் ஊர்வசி. இந்திரன் பரிந்து அந்தச் சாபத்தை ஓராண்டுக்கு மட்டும் வரையறுத்துவிட, அச்சாபம் அஞ்ஞாதவாசத்தின் போது அருச்சுனனை பீடித்துவிடுகிறது.
அதே அஞ்ஞாதவாசத்தில் திருநங்கையாக இருந்தபோது, தன்னிடம் கலைகள் பயின்ற உத்தரையை, அஞ்ஞாதவாச முடிவில் மணக்குமாறு விராடன் வேண்ட, தன்னிடம் கலை பயின்றவள் தன் மகளுக்குச் சமன் என்று கூறி, அவளை மணக்கமறுத்து, மருமகளாக ஏற்றுக் கொண்டவனும் தங்களால் காமுகன் என இழித்துரைக்கப்படும் அதே அருச்சுனன் தான்.
தமிழ்நாட்டு நாட்டார் வழக்குகளான பப்பிரவாகன் கதை, அல்லி அரசாணி கதை என்பன பாரதம் புகழ்பெற்று விளங்கிய பிற்காலத்தில் அதைத் தழுவி எழுந்த வழக்குகள்! முன்பே சொன்னதுபோல், ஆரோக்கியமான இடைச்செருகல்களாக்க் கருதி அவற்றை சுவாரசியத்திற்காகப் படித்துவிட்டுச் செல்லலாம். கரி பொட்டர் என்ற உலகப்புகழ் நாவலுக்கு ஆயிரக்கணக்கான வாசகர் தழுவல்கள் உருவாகியிருக்கின்றன. அதனால் அவற்றை மூல நூலில் சேர்க்கப்படவேண்டுமா?
இதிகாசங்களின் வில்லன்களை நாயகனாக்கும் முயற்சியும், நாயகனை வில்லனாக்கும் முயற்சியும் அண்மைக்காலத்தில் பெரும் முயற்சியில் மேற்கொள்ளப்படுபவைதான். இராவணன், நரகாசுரன் வரிசையில் இப்போது துரியோதனனா?!
நம் பழைய நூல்களில் எத்தனையோ அற்புதமான தத்துவச் சிந்தனைகள் கொட்டிக் கிடக்கின்றன. இப்படி அர்த்தமேயில்லாத – எவ்வித பயனுமற்ற அழுக்குகளையும் அருவருப்புகளையும் பூதக்கண்ணாடி வைத்துத் தேடி முன்வைப்பதால் யாருக்கு என்ன பயன் கிட்டிவிடப்போகிறது?
முகநூலில் ஓரளவு பிரபலமாயிருக்கிறீர்கள்… நல்ல விடயங்களை எடுத்துக் கூறுங்களேன் சோதரி? பகுத்தறிவு என்ற பெயரில் சிறுபிள்ளைத்தனமக்க் கேள்விகேட்டுத் திரியும் சிலர் போல், ஏன் எதிர்மறைகளையே முன்னிலைப்படுத்துகிறீர்கள்? தங்களைக் குறிப்பிடவில்லை… இப்படி முகநூலை தவறான வழியில் பயன்படுத்தும் சிலரைக் காணும்போது ஏனோ ஒரு பழமொழி ஞாபகம் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை!
“மஞ்சட்காமாலைக் கண்ணனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாம்!”
ஒரு நண்பர் தங்கள் படத்தில் குறியிட்டதால்த் தான் தங்கள் கணக்கைக் காண நேர்ந்தது. வெட்டியாக வேறு இருந்தேனா… ஏதோ சொல்லவேண்டும் போலிருந்தது சொன்னேன்.. என் வார்த்தைகள் தங்களைக் காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்! பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
சிவ மேனகை கிருஷ்ணர் தேர்சில்லை பதித்து கொடுத்தார் அர்ச்சுனன் தலை தப்பியது ,,,அதே கிருஷ்னர் . போர் தொடங்கும் பொழுது தர்மர் பக்கம் சேர்ந்து போரிட வந்த சல்லியனை ,வஞ்சகமாய் எதிர்பக்கம் அனுப்பி எதோ ஒருவழியில் கர்ணனுக்கு தேர் சாரதி ஆக்கி கூட இருந்தே குழி பறிக்கவைத்து தேரை குழியில் இறக்கி அதை உண்மையான சாரதியாய் இருந்து சரி செய்ய மறுத்து கர்ணன் நிலத்தில் இறங்கி தேர் சில்லை சரி செய்யும் பொழுது பாஸ்பத அஸ்திரம் எய்து கொன்ற அர்ச்சுனன் வீரன் செய்வித்தவர் கடவுள் ,,,,,,,,,இதை தர்ம யுத்தம் என்று சொல்லும் சிறிபாலன் சொல்லம்புகள் என்னை தாக்குமா ,,,,,,சுயநலமும் அதர்மமும் வஞ்சகமும் கொண்டவன் பக்கமே பாரத போரில் வென்றது ,,அதில் வென்றவர்கள் சொல்வது வேதம் ,கீதை ஆனது ,,,,,,/எழுதியதே வியாசர் தானே
ஸ்ரீபாலன் பஞ்சலிங்கம் அழிகுடி சொறகேளாது,சாகுடி மருந்து குடியாது!படித்தல் மட்டும் போதுமா?கருத்து விளங்கிப்படித்தலேஅறிவு தரும்!அறிவுரைக்கதைகளையே அசிங்கப்படுத்தும் சிலர் அவர்களால் கொண்டாடப்படும் தலைவன் அப்பாவைபிள்ளையை கொண்டு கொல்லவைத்ததையும் அண்ணன் மாற்று இயக்கம் என்று அவன் தம்பியை விட்டு போட்டுத்தள்ளியதையும் நியாயப்படுத்தியவர்களே!ஆனால் ஆயிரமாண்டுகளுக்கு முன்னால் மன்னனின் நீதி,யுத்தவீரனின் நீதி,மக்களின் நீதி சொன்ன கீதையில் கொலைவெறி காண்கிறார்கள்!அருமையான கருத்துச்சொல்லியுள்ளீர்கள் Thulanch Viveganand !கரும்கல்லில் நீர் உள்ளிறங்குமா?மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா என்பது இங்கு சரிதான்!பழசுகள் சொன்னா அதில் அர்த்தம் இருக்கும்!!
சிவ மேனகை தலை தெறிக்க புராண இதிகாச புரட்டுக்கு புகழ் சேர்க்கும் உங்களிடம் நேரடியாக ஒரு கேள்வி ,,,,,,,,,,இறந்து பிறந்த பரீட்சித்தை தன் தங்கை பேரனை ,,,கிருஷ்ணரால் காப்பாற்ற முடியும் என்றால் குந்தியின் ஏற்றுகொள்ளப்பட்ட தலைமகன் தர்மன் பிள்ளையை ஏன் காப்பாற்ற முடியவில்லை ,,,,,,,,இங்குள்ள சுயநலம் விளங்கின்றதா ,,,மோட்டு கொள்கையில் இன்னும் மோதிக்கொள்ள வேண்டுமா ,,,,,,,மீண்டும் சொல்லுகின்றேன் இலக்கிய சுவை வேறு இருகின்ற உண்மைகள் வேறு
ஸ்ரீபாலன் பஞ்சலிங்கம் முதலில் பிறந்த ஆட்சியிலிருந்த பாண்டுவின் மகனுக்கே அரசுரிமை என்பது குரான் பைபிள்,திருக்குறள்,புராணம்,இதிகாசம் படிக்காவிட்டால்க்கூட மகாபாரதத்தில் சொல்லப்பட்ட சட்டங்கள் விளக்கும்!மந்திரிகளுடன் திருதராட்டினன் அது பற்றி ஆராய்ந்தான்!அவனிடம் இன்றும் அறிவாளிக்கு உதாரணமாக சொல்லப்படும் மந்திரியான சாணக்கியர் உடனிருந்த ஆலோசனை வழங்கினார்!!குருடனான பாண்டுவின் அண்ணன் ஆட்சிக்கு ஒவ்வாதவன் என்பதால்த்தான் பாண்டுவிடம் ஆட்சி போனது,பிள்ளை யில்லாத கவலையால் காடேகிய பாண்டு விதுரன் பொறுப்பில் நாட்டை விட்டு செல்கிறான்!ஆனால் அண்ணன் திருதராட்ட்டினன் ஆட்சியில் பீஷ்மர் போனர் பெரியோரிடம் ஆலோசித்து முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தில் உள்ளார்!மன்னன பாண்டு மகனே ஆட்சிக்குரியவன்!அதற்கு முன்னால் காந்தாரி பிள்ளை பெற்றிருப்பின் அந்நாட்டு சட்டப்படி அவனுக்கு ஆட்சி உரிமை!!குந்தி பெற்ற பிள்ளைகள் பாண்டுவினது என்றே உலகுக்கு அன்று தெரிந்திருந்தது!படம் பார்க்கையில் நாம் தீர்ப்பு வழங்குவது போல இங்கும் கதை படித்தவர் தீர்ப்பு கூறுவது சரியல்ல!படத்தில் அந்தக்காட்சியில் நடிப்பவருக்கு வில்லன்,பெற்றோர்,காதலி எடுக்கும் முடிவுகள் அந்நேரம் தெரியாது,பார்க்கும் நமக்கு இரு காட்சிகளையும் பார்த்துக்கொண்டிருப்பதால் சதிகள் தெரிந்திருக்கும்!அதற்காக நடிப்பவனை மக்கன் போல எண்ணத்தோன்றும்!இங்கும் பாண்டுவின் பிள்ளைகள் எப்படி பிறந்தனர் என்பது கதை படிக்கும் எமக்கு தெரியும்,ஆனால் அஸ்தினாபுர அரசுக்கோ,மக்களுக்கோ ஏன் உலகுக்கோ தெரியாது என்பதை வைத்துப்பார்த்தால் விபரம் புரியும்! வீரர்கள் இழப்புகள் பற்றி அஞ்சுவதில்லை என்பது மூன்று மடங்கு இனத்தொகையில் கூடிய சிங்களத்துடன் யுத்தமுனையில் மோதிய வீரர் நிச்சயம் கேட்கமாட்டார்!அடங்கி வாய்ஹவும் விரும்பார்!வெற்றி அல்லது வீரமரணம் இதுதான் வீரர் மூச்சில் உள்ளது!அது நமக்கு விளங்க நியாயமில்லை!இயக்கத்தில் இருந்தவர் கூட சேவை காலம் முடிந்ததும் நாட்டை மறந்து அகதியாக தஞ்சமடைந்து கட்டாயப்பயிற்சி என்றெல்லாம் கதை சொல்லி புலிகளை பயங்கரவாதி என்று உலகே தடை செய்யுமளவுக்கு நம்பவைத்தவர்கள்தானே!முடிந்ததை பேசி என்ன கறந்தபால் முலைக்கு ஏறுமா?மீண்டும் தமிழரில் அறிவாளிகள் நிச்சயம் தோன்றுவர் என்ற நம்பிக்கை உண்டு!நன்றி!!
Thulanch Viveganand நன்றிகள் சோதரி சிவ மேனகைக்கும் சகோ ஸ்ரீபாலன் அவர்கட்கும்..
உண்மையிலேயே விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறேன் சோதரி… இதென்ன? மகாபாரதத்தையே படிக்காதவர் போலல்லவா கேள்விகேட்கிறீர்கள்? நீங்கள் படித்த பாரதத்தைத் தான் நானும் படித்தேன். நீங்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் மகாபாரதமே அக்குவேறு ஆணிவேராகப் பிரித்து, தனக்குள்ளேயே பதில் சொல்லி வைத்திருக்கிறதே? விடை தரப்பட்ட கேள்விகளை ஏன் வினவுகிறீர்கள்? அப்படிப் பார்த்தால், நீங்கள் கண்டறிந்த உண்மையை நிரூபிக்க இங்கு நீங்கள் கேள்வியெழுப்புவது போல் தென்படவில்லை. உங்கள் சந்தேகங்களைத் தெளிவிக்கத் தான் இந்த வினாக்களை முன்வைக்கிறீர்கள், இல்லையா?
வழக்கமாக முகநூலில் இப்படி நடக்கும் விவாதங்களை தள்ளிநின்று வேடிக்கை பார்ப்பவன் தான் நான்… விவாதம் என்ற பெயரில் ஒருவர் கேள்வி கேட்பார். (பெரும்பாலும் அது இந்து சமயம் சம்பந்தமானதாகவே இருக்கும்) முதலில் அதற்கு நாம் பதில்சொல்வோம். அந்தப் பதிலுக்குள்ளிருந்து இன்னொரு கேள்வி எழும். அந்தக் கேள்விக்கு விரிவான பதில்.. இப்படிக் கருத்துரைகள் நீண்டு இன்னும் ஒரு ஐம்பது கூடுமே தவிர, முதலில் கேள்வியெழுப்பியவரோ அவருக்கு லைக் போட்டு உற்சாகப்படுத்தும் ஆதரவாளர்களோ, அந்த உண்மைகளைப் புரிந்துகொள்ள முயலமாட்டார்கள். மேலும் அந்த ஐம்பது கருத்துரைகளின் இண்டு இடுக்கில் ஏதாவது சர்ச்சைக்குரிய விடயத்தைக் கையிலெடுத்து இன்னும் கேள்விகள் அடுக்கப்படும். அதற்கு மீண்டும் ஒரு நூறு கருத்துரையில் எங்கள் தலையைப் பிய்த்து பதில் கொடுக்கவேண்டும்.. பின் மீண்டும் அவரது கேள்வி, மீண்டும் எமது பதில்…..
இது சங்கிலி போல் தொடரும். இதில் முரண்நகை என்னவென்றால், அவர்கள் கேள்வி மட்டுமே கேட்டுக்கொண்டிருப்பார்கள், நாம் பதில் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அங்கு நமது கேள்விகளுக்கு பதில் கிடைக்காமற் போவது மட்டுமல்ல… நம் கருத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டனரா என்றுகூடத் தெரியாது நாம் திண்டாட வேண்டும். இத்தகையவர்களது முகநூல் விவாதங்களின் விதிமுறையும் நீதியும் இதுதான்!
தாங்களும் இந்த வகையறாவில் அடங்குபவர் தான் என்று புரிந்துகொண்டேன்… உதாரணத்துக்கு இறுதியாக நீங்கள் வழங்கியுள்ள கருத்துரையையே பாருங்கள்.. அருச்சுனனுக்கு ஆதரவாக நான் கூறிய வாதங்களுக்கு நீங்கள் எவ்வித எதிர்வாதமும் வைக்கவில்லை. ஆகக் குறைந்தது, அதை ஏற்றுக்கொண்டு உங்கள் வாதம் பிழையென்று உணர்ந்து கொண்டீர்களா என்றுகூடத் தெரியவில்லை. ஆனால், பாருங்கள்… உடனே அடுத்த வினாக்களை அடுக்குகிறீர்கள்.. பாரதம் தர்மயுத்தமா, துரியோதனன் கெட்டவனா… இத்யாதி, இத்யாதி…
இன்று வெட்டியாக இருந்ததால் ஏதோ சமாளிக்கும்படி ஆயிற்று… ஆனால், நாளையோ நாளை மறுதினமோ இதைப் பார்த்தாலே எனக்கு மண்டை வெடித்திருக்கும்..விடை தெரிந்த வினாக்களையே கேட்கிறாரே இவர் என்று ஆத்திரமடைந்து…. உங்கள் ஒவ்வொரு வினாவுக்கும் விடையளிப்பதற்காக எனக்கு இரத்த அழுத்தம் கூடி….. அப்பப்பா.. நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது
Thulanch Viveganand ஒருநாள் அமைதியாக உட்கார்ந்து, பக்கச்சார்பு, முன்முடிபு எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு முழு நடுநிலைமையோடு மகாபாரதம் நூலை எடுத்து வாசியுங்கள்… வாசித்துமுடித்துவிட்டு அது கற்பனை நூலா அல்லவா என்று தீர்மானியுங்கள். கற்பனை நூலென்றால் அதில் நீங்கள் கேள்வியெழுப்பி குழம்பிக்கொள்வது சரிதானா என்று சிந்தித்துப் பாருங்கள்… உண்மைநூல் தானென்றால், அதை தாராளமாக பலருக்கும் எடுத்துக் கூறுங்கள்… எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக..கற்பனையும் உண்மையும் கலந்தது என்று முடிவெடுத்தீர்கள் என்றால், இப்படி நீங்கள் ஆதாரத்திற்கு இழுக்கும் விடயங்கள் மட்டும் உண்மை என்று எப்படி கண்டறிந்தீர்கள் என்பதை ஆதாரத்துடன் நிரூபியுங்கள்….பிறகு இந்த வாதத்தைத் தொடரலாம். அதுவரை, என் பொன்னான நேரத்தை கருத்துரை கருத்துரையாக தட்டச்சுவதில் விரயமாக்க நான் விரும்பவில்லை…
என்றாலும் சும்மா விடைபெற முடியவில்லை.. ஒன்றுக்கும் விடை சொல்லத் தெரியாமல் மழுப்பிவிட்டு ஓடுகிறான் என்று நீங்கள் நினைக்கக் கூடாது பாருங்கள்.. மாதிரிக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில்..
// இறந்து பிறந்த பரீட்சித்தை தன் தங்கை பேரனை ,,,கிருஷ்ணரால் காப்பாற்ற முடியும் என்றால் குந்தியின் ஏற்றுகொள்ளப்பட்ட தலைமகன் தர்மன் பிள்ளையை ஏன் காப்பாற்ற முடியவில்லை ,,,,,,,,//
திருப்புங்கள்… மகாபாரத நூலின் பத்தாவது சௌப்திக பர்வம்!
தான் பாண்டவர் மீது பிரயோகித்த பிரம்மாத்திரத்தை மீள அழைக்கத் தெரியாமல் கண்ணனின் கோபத்துக்காளாகி, இலக்கை மட்டும் மாற்றிவிடுகிறான் அசுவத்தாமன். மாற்றப்பட்ட இலக்கு, எஞ்சியிருக்கும் பாண்டவரின் வம்சம்!
பாஞ்சாலி மக்கள் உபபாண்டவர் ஐவரும், கடோத்கசன், அரவான் முதலாம் ஏனைய பாண்டவர் பரம்பரையினரும் யுத்தத்திலேயே மரித்துவிட்டதால், பிரம்மாத்திரம் உயிரோடு எஞ்சியிருக்கும் மீதி பாண்டவர் பரம்பரையை கொன்றொழிக்கிறது. இப்படி இறந்தவர்கள் பற்றிய தெளிவான குறிப்பு நான் படித்த பாரதத்தில் இல்லையாயினும், தருமனின் மகன் யௌதேயன், வீமனின் மகன் சார்வாகன் இதில் இறந்திருக்கலாம். சரியாகத் தெரியாது.. இதை நான் .முடிந்த முடிவாகச் சொல்லவில்லை.
இதில் ஒன்றுமேயறியாமல் இறந்துபோகும் அப்பாவி உயிர் தான், உத்தரையின் கருவிலிருந்த பரீட்சித்து. ஏனைய பாண்டவ வமிசத்தினர், யுத்தத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்க, தாயின் வயிற்றிலிருக்கும் ஒரு ஒன்றுமறியாக் குழந்தை சாகவேண்டிய நியாயம் என்ன? முழுப் பாண்டவ வமிசமுமே பிரமாத்திரத்தில் அழிந்துவிடுவதால், பாண்டவர்க்குப் பின் அரசாள ஒரு வாரிசாவது உயிர்பிழைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் கண்ணனால் காப்பாற்றப்படுவது தான் ஒருபாவமும் அறியாத கருவிலே மரித்த குழந்தை… இதில் தன் தங்கையின் பேரன் என்ற தனிநலம் ஒன்றும் இல்லை.. அப்படி சுயநலத்துடன் காப்பாற்றியதாகவும் பாரதம் சொல்லவில்லை.. அது கண்ணனின் சுயநலம் என்பது உங்கள் தனிப்பட்ட தீர்ப்பு!
சகோ ஸ்ரீபாலன்… சோதரியால் கேள்விகள் தொடர்ந்து அடுக்கப்படும்.. உங்கள் கேள்விகளுக்கு விடை தரப்படாமல், குறைந்தது உங்கள் வாதத்தை அவர் ஏற்றுக்கொண்டாரா என்றுகூட அறிவிக்கப்படாமல், அவரது தொடர்கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்கமுடியுமென்றால், நின்று சமாளியுங்கள்…
சோதரி சிவமேனகை… கொஞ்சம் உக்கிரமாக வாதிட்டுவிட்டோம்… இந்த அழகான பாரதக் கிளைக் கதையைப் படித்துவிட்டு கொஞ்சம் இளைப்பாறுவோமா? நன்றி.
https://www.facebook.com/photo.php?fbid=413260822080199&set=pb.209237112482572.-2207520000.1376496179.&type=3&src=https%3A%2F%2Ffbcdn-sphotos-h-a.akamaihd.net%2Fhphotos-ak-prn1%2F44671_413260822080199_171997352_n.jpg&size=596%2C585
நன்றி நண்பர்களே!நாகேஷ் திருவிளையாடலில் சொன்னதை அம்மையாரும் சொல்கிறார்!வீர விளையாட்டுக்கள் பற்றி கரப்பான் பூச்சிக்கழுபவர்களுக்கு விளங்க காலமாகும்!!கண்ணன் தனது படைகளை துரியோதனனுக்கு கொடுத்தது மட்டுமல்லாமல் தான் ஆயுதம் ஏந்தமாட்டேன் என்றும் சத்தியம் செய்து முதலில் வந்து காலடியில் காத்திருந்த அர்சுனனுக்கும் பாண்டவருக்கும் சோதனை வைத்தானே!அதைக்கூட சதி என்பார் சிவமேனகை,வீரர்கள் அதை சவாலாக கொள்வர்!பக்தர் சோதனை என்பர்!மகாபாரதம் ஒரு குடும்பம் சார்ந்த பல அரசுகளின் யுத்தம்!கண்ணன் என்றோ குந்திக்கு மருமகன்!கர்ணனுக்கு மைத்துனன்!துரியோதனன் கண்ணனை அழைத்து குழிக்குள் வீழ்த்தும் சதி செய்கையிலும் அனைத்து சதிகளிலும் அவாணி ஊக்குவித்தது உறவு என்று தெரியாத உறவு கர்ணன்!!ஆபத்துக்களில் மட்டுமே கண்ணன் வந்துள்ளான்!நாகாஸ்த்திரத்தை அழிக்க கண்ணனால் முடியும்,எனினும் குந்திக்கு பரீட்சை வைத்து அதன் மூலம் செஞ்சோற்றுக்கடன் தீர்க்கும் கர்ணன் நன்றியறிதலை மக்களுக்கு விளக்கினான்,விளங்கா மக்களோ அது கர்ணனுக்கு மட்டும் என்று எண்ணி தமக்கென சொத்துக்களை சேமித்துக்கொண்டுள்ளனர்!நன்றி மறந்தனர்!கொடுப்பதை மறந்தனர்,இரப்பதில் மகிழ்ந்தனர்!சல்லியனை கர்ணன் அவமதித்துப்பேசியதும்,அவன் ஒரு பேரரசன்,கண்ணனுக்கு இணையான தேரோட்டி என்பதும் மறந்துபோனார்கள் படித்த சிவமேனகை!!மறதி அதிகமோ!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக