தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

* கடல் கோயில் *

* கடல் கோயில் *

உலகில் எத்தனையோ மர்மங்களும், அதிசயங்களும் ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் இடம்பெற்றுக்கொண்டேதான் இருக்கின்றன. இயற்கை தமக்கு ஏற்றவகையில் அனைவரும் தம்மை ஒவ்வொரு பொழுதும் கவர்ந்திருக்க வேண்டுமென்ற எண்ணத்திலோ என்னவோ பல்வேறு விதமான படைப்புக்களை தம்முள் வைத்திருக்கிறது. ஆனால் அதற்கு மேலதிகமாக அந்த இயற்கையையே வியப்புக்குள்ளாக்கும் வகையில், மனிதனும் தன்னுடைய பங்குக்கு அழகு படைப்புக்களை இவ்வுலகில் நிலைநிறுத்தியிருக்கின்றான். அவற்றில் பல அற்புத விடயங்கள் தொடர்பில் எமது சுழலும் உலகில் வலம் வரும் வசந்தம் கவனம் செலுத்தியிருக்கிறது. எனினும் இயற்கையும், மனிதனது கட்டுமாணமும் இணைந்து உலகை அதிசயப்படு, ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியிருக்கும் ஒரு விடயத்தைப் பற்றியே இன்றைய தொகுப்பு. பல புராதன கட்டுமாணங்களின் பிறப்பிடமாக இருக்கும் இந்தியாவில் குஜராத் மாநிலம் பாவ் நகர் மாவட்டத்தின் பாவ் நகரிலிருந்து 23 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள கோலியாக் எனும் கிராமத்திற்கு அருகில் இருக்கின்ற கடற்பிரதேசம் இன்று பாரம்பரிய சிறப்பையும், இயற்கையின் அதிசயத்தையும் பரிணமித்து நிற்கும் பகுதியாக காணப்படுகிறது. அந்த வகையில் அலைகள் சீறிப்பாயும் கோலியாத் கடற்கரையிலிருந்து சுமார் 1.5 கிலோ மீற்றர் தொலைவில் கொடிககம்பமொன்றும், கட்தூண் ஒன்றும் கடலில் தாழுமளவிற்கு மட்டுமட்டாக நிற்பது, அந்த கடற்பகுதியின் காலைக்காட்சியாகும். ஆனால் , மாலையில் இந்தக்காட்சி மாறுபடுகிறது. குறித்த கடலானது, அந்த கொடிக்கம்பம் இருக்கும் பகுதியை நோக்கி உள்வாங்கி, அங்கிருக்கும் கொடிக்கம்பம் முழுமையாக தெரியுமளவிற்கு கடல்நீர் வற்றுகிறது.........????
www.vasanthamfm.lk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக