சீமைச்சரக்கு @ பாண்டிச்சேரி! படத்தில் உள்ள இந்த குடுவைகளெல்லாம் புதுச்சேரியின் ‘அரிக்கமேட்டில் கண்டெடுக்கப்பட்ட்ட 1000 வருடங்களுக்கு முந்தைய‘அம்பூரா’ எனப்படும் ரோமானிய மதுச் சாடிகள் ஆகும்.. அன்று ரோமானியர்கள் மூட்டை மூட்டையாக தங்கத்தைக் கொண்டு வந்து புதுவையில் விற்பனை செய்து, அதற்கு பதில், மிளகுகளை வாங்கிக் சென்றனர்.மிளகு ரோமானிய பகுதியில் முக்கிய மருந்தாக இருந்ததே அதற்கு காரணம்..
சரி மேட்டருக்கு வருவோம்..!
அரிக்கமேட்டில் அன்று பெருவாரியாக இறக்குமதி செய்யப்பட்ட பொருள் என்னவென்று தெரிந்தால் வியப்படைவீர்கள்.
ஆம் மிகப் பெருவாரியாக ரோமானிய மது இறக்குமதி செய்யப்பட்டு, வியாபாரம் செய்யப்பட்டு வந்துள்ளது. அவுரி என்ற சாயமும், துணிவகைகளும், மணிகள், வைரங்கள்,அரிசி முதலியன ஏற்றுமதி செய்து ரோமானிய மதுவையும் (ரொம்ப டேஸ்டா இருக்குமாம்பா ) , தங்கத்தையும் இறக்குமதி செய்துள்ளனர்.
கி.பி. 1600 வரை இந்த மது இறக்குமதி பிரஞ்சு ஆட்சி தொடங்கும் வரை நடந்துள்ளது.அதன் பிறகு பிரஞ்சு ’பிராண்டுகள்’புதுவையில் புழங்கத் தொடங்கிவிட்டன..
பிரான்சு நாட்டு மதுபானத்திற்கு நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு பல மன்னர்கள் அலைந்த காலம் அது..மன்னர்களின் மது’ பலவீனங்களை உணர்ந்து, மதுக் குப்பிகளைக் கொடுத்தே பல ஆட்சிகளின் உரிமையை பிரஞ்சுக்காரர்கள் பெற்றுள்ளனர்.. அப்புறம் என்ன ?... வெள்ளையனை துரத்திட்டோம்... இந்த சாரயக் கலாச்சாரத்தை மட்டும் நம்மால் தொரத்தவே முடியலை.. கெட்டியா புடிச்சிகிட்டோம்.. இப்ப புரியுதா பாண்டிச்சேரின்னாலே ’ தண்ணி தேசம்’ன்னு அடையாளம் ஆனதை.. 1000 வருஷங்களுக்கு முன்னே சீமைச்சாரயம் இறக்குமதி செஞ்ச அப்பா டக்கருங்க நாம..
தொடர்ச்சியா பல நூற்றாண்டுகளாகவே நம்ம மரபணுக்களில் ஊறிப்போன ஒன்ன அவ்வளவு ஈஸியா ஒழிச்சிட முடியுமா என்ன? கஷ்டம்தான்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக