தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 6 ஜூலை, 2013

,,குரங்கின் கையில் பூமாலை ,


கம்பராமாயணத்தை பாடிய கம்பரோடு நான் கோபம் காரணம் அவர் ஈழத்தமிழர்களை அரக்கர்கள் என்றும் இந்திய தமிழர்களை குரங்குகள் என்று பாடியதுதான் .இதற்காக நான் பல தர்க்கங்களோடு கம்ப வாருதிகளோடும் சொல்லாடல்களால் பல முறை போர் புரிந்து இருக்கின்றேன் .
இன்று நான் ஒரு பழ மொழி படித்தேன் ,,குரங்கின் கையில் பூமாலை ,,இந்த வாசகத்தை படித்த பின் வேற்று நாட்டவர்கள் யாராவது பூமாலை போடுகின்றார்களா என்று இணையத்தில் தேடக்கூடிய வரைக்கும் தேடிப்பார்த்து விட்டேன் .சில நாடுகளில் மலர்தூவுவதை பார்த்து இருக்கின்றேன் .பல நாடுகளில் மலர் ,மலர்கொத்து கொடுப்பதையும் பார்த்து இருக்கின்றேன் .மலர் மாலை இடுவதை இந்தியாவிலும் இலங்கையிலும் வேறு தமிழர்கள் வாழும் நாடுகளிலும் தமிழர்கள் பாவிப்பதை பல இடங்களில் பார்த்தேன் .இது தமிழர்களின் பண்பாட்டில் ஒருவரை மற்றவர் கௌரவிப்பதற்காக பூர்வீக காலம் தொட்டு நடை முறையில் இருப்பதை பல வரலாறுகள் மூலம் அறிந்தேன் .நாம் எமது குடும்ப விழாக்களிலும் திருமண நிகழ்வுகளிலும் மாலையிட்டு கௌரவிக்கின்றோம் இது மகிழ்வான விடயம் .ஆனால் சில வேளைகளில் நாம் எதிரியையும் மாலையிட்டு வரவேற்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகின்றோம் இது போன்ற சம்பவங்கள் பல இடங்களில் நிகழ்கின்றது .அதாவது எமக்கு யாருக்கு மாலை போடுவது என்று தெரியாமலே போடுகின்றோம் .சர்வதேசமும் போர் குற்றவாளி என்று நிரூபித்து கொண்டு இருப்பவனுக்கு தாயை தாய் உறவுகளை கொன்றவனுக்கு தமிழர்களாகிய நாம் மாலை போட்டு மரியாதை செய்கின்றோம் .இதனால் இந்த பழமொழியை படித்த எனக்கு பல்வேறு விதமான சிந்தனைகள் தோன்றுகின்றது .எனவே குரங்கின் கையில் பூமாலை என்ற கருத்து உணர்த்துவது என்ன ,எமக்கு யாருக்கு மாலை போடுவது என்பது தெரியாது என்பதா ,,,,இல்லை வேறு ஏதாவது காரணங்களா ,,,அல்லது தமிழர்களாகிய நாம் உண்மையில் குரங்குகளா??!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக