உங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க
Windows க்கான Google உள்ளீட்டு கருவி என்பது ஒரு உள்ளீட்டு முறை திருத்தியாகும். இது லத்தீன் (ஆங்கிலம் / QWERTY) விசைப்பலகையைப் பயன்படுத்தி, ஆதரிக்கப்படும் எந்த மொழிகளிலும் உரையை உள்ளிட பயனர்களை அனுமதிக்கிறது. லத்தீன் எழுத்துகளைப் பயன்படுத்தி, ஒரு சொல்லை அதன் ஒலிப்பு முறையில் பயனர்கள் தட்டச்சு செய்ய முடியும். அந்தச் சொல்லை அந்த மொழிக்கு ஏற்றவாறு Windows க்கான Google உள்ளீட்டு கருவி மாற்றும். ஒலிபெயர்ப்பு, IME மற்றும் ஆன்-ஸ்கிரீன் விசைப்பலகைகள் உள்ளிட்ட உள்ளீட்டு கருவிகள் கிடைக்கின்றன.
Windows க்கான Google உள்ளீட்டு கருவி தற்போது 22 மொழிகளில் கிடைக்கிறது: தமிழ், தெலுங்கு, வங்காளம், குஜராத்தி, ஹீப்ரூ, ஹிந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, நேபாளம், ஒரியா, பஞ்சாபி, ரஷ்யன், சமஸ்கிருதம், செர்பியன், சிங்களம், அம்ஹரிக், அரபிக், பெர்சியன், கிரேக்கம், திக்ரின்யா மற்றும் உருது.
அம்சங்கள்
ஆஃப்லைன் ஆதரவு
இணைய இணைப்பு தேவைப்படாது.சொல் முடிவுகள்
முன்னொட்டுகளுக்கான அகராதி அடிப்படையிலான சொல் முடிவுகள்.தனிப்பயனாக்கப்பட்ட விருப்பத்தேர்வுகள்
மேக்ரோ மற்றும் கட்டளைமுறையிலான ஆதரவுடன் பயனர் திருத்தங்களை நினைவில் கொள்கிறது.எளிய விசைப்பலகை
அரிதான மற்றும் சிக்கலான சொற்களை உள்ளிடுவதற்கான அகராதி அடிப்படையிலான விசைப்பலகை.விரைவுத் தேடல்
சிறப்பித்துக் காண்பிக்கப்பட்ட சொற்களுக்கான ஒற்றை-கிளிக் வலைத் தேடல்.சிறந்த தனிப்பயனாக்குதல்
பயனர் சாளர அளவு, எழுத்துரு காட்சி மற்றும் பலவற்றை தனிப்பயனாக்குதல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக