தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 13 ஜூலை, 2013

நடிகர் சிவகுமார்!

கோயம்புத்தூர் அருகே உள்ளது 1941அக்டோபர் 27ஆம் தேதி பிறந்தவர் நடிகர் சிவகுமார்
சிறு வயதில் தந்தையை இழந்து படிக்க கஷ்டப்பட்ட இவரது படிப்புச் செலவுக்காகப் பட்ட கடனை அடைக்க வேண்டுமே என்பதற்காக இவரது அம்மா 7 வருடங்கள் வெறும் கேழ்வரகு கூழ் மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்தாராம்
சென்னையில் தங்கிப் படித்த காலத்தில் குளிக்க சோப் வாங்கக் கூட எத்தனையோ நாட்கள் தவித்திருக்கிறேன் என்பது இவரே வெளிப்படையாக பல பேட்டிகளில் தெரிவித்துள்ள தகவல்
கஷ்டமான குடும்பத்தில் இருந்து கொண்டு சினிமா படம் பார்க்க முடியுமா? அதனால் சிவகுமார் தனது இளமைக்காலத்தில் பார்த்த சினிமாக்கள் மிக மிகக் குறைவு. தன்னுடைய ஏழாவது வயதில் இவர் பார்த்த முதல் படம் சந்திரலேகா.
எஸ்எஸ்எல்சி முடிக்கும் வரைக்கும் இவர் பார்த்த படங்கள் 14. இளம் வயதில் சினிமா பார்ப்பது என்பது இவரைப் பொறுத்தவரையில் எட்டாத கனியாகவே இருந்தது
வறுமை காரணமாக சினிமா பார்க்கும் வாய்ப்பு ஆண்டுக்கு இரண்டு முறையே கிடைக்கும் என்பதால் திருச்சி ரோட்டில் இரண்டு மரக்கட்டைகளில் தொங்கும் சினிமா தட்டிகளில் சிவாஜியின் பராசக்தி போஸ்டர்களையும், மனோகரா போஸ்டர்களையும், தேவதாஸில் தாடியுடன் காட்சியளிக்கும் நாகேஸ்வரராவ் போஸ்டர்களையும், ஆசை தீரப் பார்த்து பொங்கியெழும் தனது சினிமா ஆசையை அடக்கிக் கொள்வாராம் இவர்
ஒண்ணாங் கிளாசில் அ ,ஆ , எழுதிப் பழகும் போதே பூனை, மாடு, ரயில் என்றெலலாம் வரைந்த இவர் எட்டாம் வகுப்புப் படிக்கும் போது முதுகுத் தண்டை வரைந்த வேகத்தைப் பார்த்து வகுப்பே ஆச்சரியப்பட்டது. ஐந்து நிமிடத்தில் தண்டு வடத்திலுள்ள அத்தனை எலும்புகளையும் வரைந்து முடித்தபோது தான் கொஞ்சம் வித்தியாசமான ஆள்தான் என்ற எண்ணம் இவருக்குள் ஏற்பட்டதாம்

சென்னைக்கு வந்து ஓவியக் கல்லூரியில் சேர்ந்த சிவகுமார் ஆறு ஆண்டுகள் அந்தக் கல்லூரியில் படித்துத் தேர்ந்தார். ஓவியக் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் போது இவரைத் தேடி சினிமா வாய்ப்பு வந்தது வாய்ப்புத் தந்தவர் இவரது மாமா மகனான பொள்ளாச்சி ரத்தினம். அந்தப் படம் முடிவதற்குள் ஏவி.எம் நிறுவனத்தின் காக்கும் கரங்கள் வாய்ப்பு வந்தது. இந்தப் படம் 1965ஆம் ஆண்டு வெளியானது.

1967ல் இவர் நடித்த கந்தன் கருணை படம் வெளியான போது கிராமத்துக்கு சென்று அம்மா, பெரியம்மா, சின்னம்மா ஆகியோரை ஒரு வாடகைக் காரில் கோவைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ராயல் தியேட்டரில் படம் பார்க்கச் செய்தாராம் இவர்
மோட்டர் சுந்தரம் பிள்ளை, சரஸ்வதி சபதம், காவல்காரன், உயர்ந்த மனிதன், அன்னக்கிளி, பத்ரகாளி, புவனா ஒரு கேள்விக்குறி, ஆட்டுக்கார அலமேலு, ஏணிப்படிகள், ரோசாப்பூ ரவிக்கைக்காரி, வண்டிச்சக்கரம், சிந்து பைரவி, பாசப்பறவைகள், பாடாத தேனீக்கள், மறுப்பக்கம், பொறந்த வீடா புகுந்த வீடா, பசும்பொன் உட்பட 190 தமிழ்ப் படங்களில் நடித்துள்ள இவர் மலையாளத்தில் பூஜாபுஷ்பம் என்ற படத்திலும், தெலுங்கில் பால பாரதம் என்ற படத்திலும் நடித்துள்ளார்
ஆரம்பத்தில் எம்.ஜி‌.ஆர்., சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களோடு சேர்ந்து நடித்தது போல ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, அஜீத், விஜய், விக்ரம், போன்ற எல்லா முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்துள்ளார்.
அவன் அவள் அது, அக்னி சாட்சி, ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகராக 1979ஆம் ஆண்டிலும் 1982ஆம் ஆண்டிலும் தேர்வு பெற்ற இவர் 1979ஆம் ஆண்டில் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்திற்காகவும் 1980ல் வண்டிச் சக்கரம் படத்திற்காகவும் பிலிம் ஃபேர் விருதினைப் பெற்றிருக்கிறார்
சித்தி, அண்ணாமலை போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள இவர் ‘இது ராஜபாட்டை அல்ல’ என்கிற நூல் உட்பட பல நூல்களை எழுதி உள்ளார். இதில் இவர் எழுதிய ‘இது ராஜபாட்டை அல்ல’ என்ற நூல் இலயோலா கல்லூரியில் 1991-92களில் துணைப் பாடமாக வைக்கப்பட்டது
ராமாயணம் போன்ற இதிகாசங்களைப் பற்றியும் பல சமூக பிரச்சினகள் குறித்தும் இடைவிடாது இரண்டு மணி நேரத்திற்கு மேல் பேசக் கூடிய மிகச் சிறந்த பேச்சாளராக இவர் எடுத்திருக்கும் புதிய அவதாரத்தால் சமூகத்தில் மிகப் பெரிய அந்தஸ்தைப் பெற்றிருப்பது இவரது இன்னொரு சாதனை.
ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெரும் முதல் மூன்று மாணவச் செல்வங்களுக்கு பரிசு தொகை வழங்கி உற்சாகப் படுத்துகின்ற உன்னதமான பணியினைப் பல வருடங்களாக செய்து வருகிறார்
சிவகுமாரின் மனைவி பெயர் லட்சுமி 1974ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சூர்யா, கார்த்தி என்கிற இரு மகன்களும் பிருந்தா என்கிற மகளும் உள்ளனர். மூவருக்குமே திருமணம் ஆகி பேரப் பிள்ளைகள் பிறந்து தோற்றத்தால் யாரும் இவருக்குத் தர முடியாத தாத்தா பட்டத்தை உறவு முறையால் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள்
இன்று தமிழக ரசிகர்கள் கொண்டாடும் இரண்டு கதாநாயகர்களான சூர்யா, கார்த்தி ஆகிய இரு மகன்களின் மாபெரும் வெற்றிகளை மனதுக்குள் ரசித்தாலும் இந்த வெற்றிகளால் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பதுதான் பழனிச்சாமி என்ற சிவகுமாரின் தனி அடையாளம்
4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக