தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 1 ஜூலை, 2013

தமிழுக்காக உயிரை கொடுப்போம் என்பவர் மனதில் அந்நியர் உயர்ந்தவர்!


மானுடத்தின் அற்புதம் நபிகள் நாயகம் (ஸல்) - தொல் திருமாவளவன்


" நபிகள் நாயகத்தைக் கொச்சைப்படுத்தக் கூடிய வகையில் அவதூறுகளைப் பரப்புகிறவர்கள் அவரை அவர் வாழ்ந்த காலத்திலேயே வெல்ல முடியாத ஒரு நிலை இருந்தது என்பதை, எதிரிகளே அவரைப் பாராட்டக் கூடிய அளவுக்கு நேர்மையானவர்கள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு அவருடைய வாழ்க்கை முறை இருந்தது என்பதை, அவதூறுகள் தானாகவே தகர்க்கப்பட்டன நொறுக்கப்பட்டன என்பதை அவருடைய வாழ்க்கைச் சுவடுகளிலிருந்து நம்மால் அறிய முடியும்.

அடிமைத்தனத்தை வீழ்த்தியவருக்கு, அடிமைகளை விடுவிப்பதற்கு அவர்களையே தலைமை இடத்தில் அமர வைக்கக்கூடிய அளவுக்கு, அதிகாரத்தை வழங்கக் கூடிய அளவுக்கு அன்றைய காலகட்டத்தில் ஆதிக்கம் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஆதிக்க சக்திகள் மனிதநேயத்தை மிதித்துக்கொண்டிருந்த காலத்தில் பிலால் என்கிற ஓர் அடிமை வம்சத்தைச் சார்ந்த மானிடனை தலைமை அழைப்பாளராக (முஅத்தின்) ஆக்கியது, இன்றைக்கு நாம் காண்கின்ற மானுட புரட்சியைவிட மகத்தான ஒரு புரட்சியாக பாட்டாளி வர்க்க புரட்சியாக அமைந்திருப்பதை உணர முடிகிறது. ஆகவே அவர் இன்றைக்கு நாம் பேசுகிற மார்க்ஸியத்தின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தத்துவத்தை நமக்கு வழங்கி இருக்கிறார் என்பதைக் காண முடிகிறது.

இன்றைக்கு நாம் பேசுகிற அம்பேத்கரியம், பெரியாரியம் என்ற தத்துவத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்னால் அவர் மக்களுக்கு ஒரு கொடையாக வழங்கியிருக்கிறார்; வழிகாட்டியிருக்கிறார் என்பதைக் காண முடிகிறது.

அடிமைத்தனத்திற்கு எதிரானவர், ஆதிக்கத்திற்கு எதிரானவர். அதனால் மக்காவிலிருந்து மதீனாவிற்கு விரட்டப்பட்ட நிலையிலும் பொறுமையோடு சகிப்புத்தன்மையோடு மக்களை அமைப்பாக்கி, அணி திரட்டி அதற்கு எதிராகப் போராடி ஓர் அரசையும் நிறுவி ஆட்சி நிர்வாகத்திலும் தலைசிறந்த ஒரு நிர்வாகத்தை வழங்கி இந்த உலகத்திற்கு அவர் வழிகாட்டியாக இருக்கிறார். உலகில் அமைதி வேண்டும்; அதற்கு மானுடத்தில் ஆதிக்கம் ஆணவம் என்பன வேரறுக்கப்பட வேண்டும். மக்களிடையே நல்லிணக்கம் மலர வேண்டுமானால் சகோதரத்துவம் தழைக்க வேண்டும். சகோதரத்துவம் தழைப்பதற்கு மனிதநேயம்தான் அடிப்படைத் தேவை. மனிதநேயத்திற்கு மிகச் சிறந்த வழிமுறை இஸ்லாம் என்று அவர் வழங்கி அந்தக் கோட்பாடுதான் இன்றைக்கு உலகத்தில் எவராலும் வெல்ல முடியாத ஒரு கோட்பாடாக இருக்கின்றது.
---------------------------------------------------------------------
தோழர் திருமா அவர்களின் 4 பக்க முழுமையான கட்டுரை - சமரசம் மாதமிருமுறை பத்திரிக்கையில் (01-15 ஜனவரி 2013)- வெளிவந்துள்ளது. அனைவரும் படிக்க வேண்டிய பகுதி -http://www.samarasam.net/01-15_Jan_13/index.htm
சந்திப்பு : வி.எஸ். முஹம்மது அமீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக