சீமான் சொல்லும் உடல் ரகசியம் ..!
‘உன் ஆரோக்கியம் மூன்று மைல் கல்லுக்கு அப்பால் இருக்கிறது. அதை நடந்துபோய் வாங்கிக் கொண்டு வா! என்று மகாத்மா காந்தி அடிகள் சொன்னதுதான் என் ஆரோக்கியத்தின் விலாசம். சென்னையில் இருந்தால் தவறாமல் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தைச் சுற்றிச் சுற்றி ஓட்டம். வெளியூர் என்றால், தங்கி இருக்கிற இடத்தின் மொட்டை மாடிதான் என் உடற்பயிற்சிக் கூடம். நான் குக்கிராமத்தில் குறவஞ்சி பழகியவன். சிலம்பத்தின் ஒரு வகைதான் இந்தக் குறவஞ்சி. வீச்சின் வேகமும் வசீகரமும் ஈர்க்கும் கலை. எந்த வேலையையும் ரசித்துச் செயலாற்றும் மனநிலையை இந்தப் பயிற்சி தூண்டும்.
'நாகம்-16' சிலம்பத்தின் இன்னொரு வகை. எதிரியை அருகே நெருங்க விடாமல், 360 டிகிரியில் உடலைத் திருப்பிக் கம்பு வீசும் கலை. நம் கவனத்தைச் சிதறவிடாமல் ஒரு செயலைச் செய்யக் கற்றுக்கொடுக்கும் வித்தை. எதற்கும் அஞ்சாத கம்பீரத்தை, கம்பு சுற்றும் வழக்கமே உடலுக்குக் கற்றுக் கொடுக்கிறது. நேரம் கிடைக்கிறபோது கராத்தே பயிற்சிகளை மேற்கொள்வேன். பயிற்சிகளை முடிக்கிற போது உடல் தொப்பலாக வியர்வையில் நனைந்திருக்கும். தேர்தல், பொதுக் கூட்டம் என முக்கியமான நேரங்களில் தொண்டை நரம்புப் புடைக்க மேடைகளில் முழங்குவேன். எந்த நேரமும் சுற்றிச் சுழலத் தயங்காத உடல், அதற்கு ஒப்புக்கொள்ளும் மனம்... இதுதான் இந்தத் தம்பியின் ஆரோக்கிய ரகசியம்!
நன்றி: விகடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக