தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, May 11, 2012

மீன் சாப்பிட்டால் ஞாபகசக்தி அதிகரிக்கும்; ஆய்வில் தகவல்!


image
மீன்களில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலம் உள்ளது. இந்த அமிலம் மனித உடலுக்கு நல்லது என்று ஏற்கனவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ஒமேகா-3 அமிலம் மனிதனின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுவதாகவும் கண்டு பிடித்து உள்ளனர்.
இது தொடர்பாக நியூசிலாந்தின் மஸ்கே பல்கலைக்கழக குழுவினர் ஆய்வு நடத்தினார்க்ள.
176 பேரை தேர்வு செய்து வஞ்சிரம், இறால் உள்ளிட்ட பல்வேறு வகை மீன்களை 6 மாதங்களாக கொடுத்து ஆய்வு செய்தனர். இதில் அவர்களுக்கு ஞாபக சக்தி 15 சதவீதம் அதிகரித்து இருந்தது தெரிய வந்தது. மேலும் அறிவுக் கூர்மையும் ஏற்பட்டிருந்தது. எனவே மீன்கள் அதிகம் சாப்பிட்டால் அறிவுக்கூர்மை ஏற்படும்.
மூளை சுறுசுறுப்பாக இயங்கும். மனநலம் பாதிக்கப்படுவதை தடுக்கும் என்று ஆய்வாளர்கள் கூறினார்கள். ஒமேகா-3 அமிலம் மனிதனின் உடலில் இயற்கையாகவே சுரப்பது இல்லை. மற்ற உணவுப் பொருட்களிலும் இவை இருப்பதில்லை. மீன்களில் மட்டுமே ஒமேகா-3 இருக்கிறது. எனவே மீன் சாப்பிட்டால் மட்டுமே ஒமேகா-3 கிடைக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment