தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, May 10, 2012

உலகம் போற்ற ஆட்சி செய்த இராஜராஜனின் ஆட்சி அமைப்பு..!உலகம் போற்ற ஆட்சி செய்த இராஜராஜனின் ஆட்சி அமைப்பு..!

இதில் ஆட்சி முறை அமைப்பும், இன்று மாவட்டங்கள் இருப்பது போன்று அன்று எப்படி மண்டலங்களாக ஆட்சிப் பிரிவுகள் இருந்தன என்பதும், ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த அலுவலர்களைப் பற்றியும் அறிந்துகொள்வோம்.

1. இராஜராஜன் காலத்து நாட்டுப் பிரிவு - மண்டலங்கள்.

2. அதிராசராச மண்டலம் (சேலம் மாவட்ட்த் தென்பகுதி - கோவை - திருச்சி மாவட்டங்கள்).

3. இராசராசப் பாண்டி மண்டலம் (மதுரை - இராமநாதபுரம் - திருநெல்வேலி மாவட்டங்கள்).

4. செயங்கொண்ட சோழ மண்டலம் (தென்னார்க்காடு - செங்கற்பட்டு - வடவார்க்காடு - சித்னர் மாவட்டங்கள்).

5. சோழ மண்டலம் (தஞ்சாவூர் மாவட்டம் - திருச்சி மாவட்ட கிழக்குப் பகுதி).

6. நிகரிலி சோழ மண்டலம் (மைவரின் தென்பகுதி - பெல்லாரி மாவட்டம்).

7. மலை மண்டலம் (திருவாங்கூர் - கொச்சி உள்ளடங்கிய சேரநாட்டு மேற்கு கடற்கரைப் பகுதி).

8. மும்முடிச் சோழ மண்டலம் (மைவரின் தென்பகுதி - சேலம் மாவட்ட வடபகுதி).

9. வேங்கை மண்டலம் (கிருட்டின - கோதாவரி ஆறுகளுக்கு இடைப்பட்ட கீழைச் சாளுக்கிய நாடு).

பேராட்சி முறையில் மன்னனுக்குத் துணை செய்த அலுவலர்கள்..

1. உத்திர மந்திரி
2. பெருந்தர அதிகாரிகள்
3. திருமந்திர ஓலை
4. திருமந்திர ஓலை நாயகம்
5. ஒப்பிட்டுப் புகுந்த கேழ்வி
6. வரியிலிடு
7. காடுவெட்டி
8. உடன் கூட்டத்து அதிகாரி
9. அனுக்கத் தொண்டன்
10. நடுவிருக்கை
11. விடையில் அதிகாரி
12. உள்வரி திணைக்களத்துக் கண்காணி
13. புரவரித் திணைக்களம்
14. புரவரி திணைக்களத்து நாயகம்
15. வரிப் பொத்தகம்
16. முகவெட்டி
17. வரிப்பொத்தகக் கணக்கு
18. வரியிலிடு புரவரி திணைக்களத்து நாயகம்
19. கடமை எழுதுவோன்
20. பட்டோலை
21. ராகாரிய ஆராய்ச்சி
22. விதிசெய்


பெண் அதிகாரிகள்..

அரசியின் ஆணையை நிரவேற்றிய பெண் அதிகாரி ”அதிகாரிச்சி” என்று அழைக்கப் பட்டாள்.

No comments:

Post a Comment