தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 26 மே, 2012

பாரத கால நயவஞ்சகம் ,,,,,,,,,


பாரத கால நயவஞ்சகம் ,,,,,,,,,
தாய்க்கு இனி மகனில்லை தம்பிக்கு அண்ணன் இல்லை என்று குரு சேஷ்திரத்தில் குந்தி புலம்பி அழுததாக வில்லி புத்துரர் மகாபாரத விளக்கத்தில் சொல்லி அழுகின்றார் .""ஈன்ற பொழுதில் பெருதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய் ""பெற்ற உடனே ஆற்றில் விட்டதாய்க்கு எங்கு இருந்து இன்று பாசம் வந்தது .மற்ற மகனுக்கு உயிர்பிச்சை கேட்டதற்கு செய்யும் கைமாறே கர்ணனை தன் மகன் என்று போர்க்களத்தில் உரிமை கொண்டாடிய நிகழ்வு .ஆமாம் குருகுலத்தில் தன் மைந்தர்களாலேயே கர்ணன் அவமானப்படும் பொழுது தன் மகன் என்று உள்ளுர்வுக்கு தெரிந்தும் (பெற்ற பிள்ளைகளை தாயானவர்களுக்கு பிள்ளை எந்த விடிவில் இருந்தாலும் உளுனர்வுக்கு தெரியும் )தன் சுய கௌரவம் கருதி மகன் என்று சொல்லாத குந்தி தேவி .இந்திர பிரஸ்த அரச மாளிகையில் தன் பிள்ளைகளால் அவமானப்படுத்தும் பொழுது வாய் மூடி மௌனித்து இருந்த குந்தி .திரவுபதை சுயவரத்தில் அவமானப்படுத்தப்பட்டதை கேட்டு ரசித்த குந்தி .அர்ச்சுனன் வென்று வந்த திரவுபதையை ஐவீரும் ஒருவீராய் பகிர்ந்து நுகர்மின் .என்று சொன்ன குந்தி .தன் மூத்த பிள்ளை கர்ணனை மறைத்தும் மறந்துமே வாழ்ந்து வந்தாள்.அப்படியானவருக்கு போர்க்களத்தில் தன் பிள்ளை என்று சொல்லி அழ எங்கிருந்து பாசம் வந்தது .இதுவும் இவர் மருமகன் கிருஷ்ணருடன் சேர்ந்து போட்ட வேஷம் தான் .வில்லுக்கு வியஜன் என்று சொல்லுக்கு பலமுறை சொல்லும் இந்த உலகம் அந்த அர்ச்சுனன் ஒரு கோழை என்பதை பல இடங்களில் ஏற்க மறுக்கின்றது .அர்சுனனை கடைசிவரை காப்பாற்றியது கிருஷ்ணர் தன் தங்கை சுபத்திரையின் மங்கலத்தை காப்பாற்ற செய்த சூழ்ச்சிகளே ..கர்ணன் கோடை வள்ளல் என்பதை பயன்படுத்தி இந்திரனை அனுப்பி அவன் கவசங்களையும் குண்டலங்களையும் பெற்றுக்கொண்ட வாசுதேவன் குந்தியை அனுப்பி அர்சுனனுக்கு உயிர் பிச்சையும் பெற்றான் .அதாவது நாகாஸ்திரத்தை இரண்டாவது முறை எய்யவேண்டாம் என்று மன்றாடி வேண்டி வரம் பெற்றாள் குந்தி .அர்ச்சுனன் உண்மையான வீரனாய் இருந்தால் குந்தி மன்றாடி கர்ணனிடம் பெற்ற உயிரில் வாழவேண்டிய அவசியம் இல்லை .

ஏகலைவன் பாவம் அந்த வில்லாளி. பகவான் பரசுராமருக்கு நிகரான மாவீரன் .மானசீக குருவாலேயே ஏமாற்றப்பட்ட ஏழை .இவனும் அர்சுனனை வில்லுக்கு வியஜன் என்று சொல்லவைக்க துரோணர் செய்த சூழ்ச்சியாலேயே .தன் வில்லுக்கு நான் ஏற்றி குறி நகர்த்தும் தன் கட்டை விரலை இழந்தான் .ஆமாம் துரோணரை சிலையாக செய்து வைத்து அவரிடம் இருந்த சகல கலைகளையும் கற்றறிந்த இந்த மாவீரன் .நாய் ஒன்று தன் குருவின் சிலையை அசிங்கம் செய்ததை பொறுக்க முடியாமல் அந்த நாயின் மீது ஆயிரம் துளைவிடும் அம்பை எய்தான் இதை பார்த்து அதிர்சி உற்ற துரோணர் .அர்சுனனை மிஞ்சிய வீரன் சாதாரண குலத்தில் பிறந்து இருக்கின்றான் என்ற சுலநல கோபம் ஏகலைவனிடம் கட்டை விரலை குரு தட்சணையாய் கேட்க வைத்தது .குருவுக்கு தானமாய் தன் கட்டை விரலை உடனே கத்தியால் வெட்டி கொடுத்த ஏகலைவன் அன்றே அர்சுனனை தன் மான போரில் வென்று விட்டான் ,,

அரவன்,, இவன் தான் தந்தையால் கைவிடப்பட்ட தனயன் ,ஆமாம் அர்சுனனுக்கும் உலோப்பிக்கும் நாகர்கள் வாழ்ந்த நாக தீவில் பிறந்த பிள்ளை பப்பரவாகன் ,அபிமன்யுவின் அண்ணன் ..தந்தையால் கைவிட பட்ட தாயின் கண்ணீரை துடைக்க தந்தையை தேடி செல்கின்றான் தந்தை அர்ச்சுனன் இந்திர லோகம் போன செய்தி அறிந்து அங்கெ செல்கின்றான் .இவன் அர்சுனனுக்கு முதலே இந்திரனை அங்கு சென்று சந்தித்து விடுகின்றான் உருவத்தில் அர்ச்சுனன் போலவே இருந்ததால் இந்திரன் சகல போர் கலைகளையும் தெய்வீக அஸ்திர பாவனை விளக்கங்களையும் இவனுக்கு கற்பித்து விடுகின்றான் .ஊர்வசியின் கண்வேட்டையில் இருந்து தப்பி வந்த அர்ச்சுனன் தாமதமாகவே இந்திரனை சந்திக்கின்றான் .அந்த வேளையில் தான் இந்திரன் உண்மையை உணர்கின்றான் .இந்திரன் சபையிலேயே அரவன் தந்தையை சந்திக்கின்றான் அங்கேயே அர்ச்சுனன் பாரத போருக்கு வரும் படி மகனுக்கு கட்டளை இடுகின்றான் .அரவன் தான் கிருஷ்ணர் மகள் பேரழகி திரிசதியை விரும்புவதாகவும் சொல்கின்றான் .கிருஷ்ணருடன் பேசி முடிவெடுப்போம் என்று சொன்ன அர்ச்சுனன் மகனை நாக தீவு வழி அனுப்பி வைத்தான் அரவன் வரும் வழியில் துவாரகை செல்கின்றான் அங்கு கிருஷ்ணருக்கும் தன் விருப்பத்தை சொல்கின்றான் .கிருஷ்ணர் குள்ள மனம் இதை ஏற்று கொள்ளாமல் இவனிடம் இருக்கும் வித்தைகளை பரிசோதனை செய்கின்றார் .அந்த வேளையில் தான் கிருஷ்ணர் இலைகள் நிறைந்த ஒரு மரத்தில் ஒரு இலையில் மறைந்து இருந்துகொண்டு தன்னை தேடி பிடிக்குமாறு சொல்கின்றார் .அரவன் கிருஷ்ணர் மறைந்து இருந்த இலை தவிந்த ஏனைய இலைகளை தன் பாணங்களால் துளைத்து காட்டுகின்றான் .
கிருஷ்ணரிடம் விடை பெற்று சென்ற அரவன் மறுபடியும் இவர்களை போர்க்களத்தில் சந்திக்கின்றான் .போர்க்களத்தில் பாண்டவர்களையும் கிருஷ்ணரையும் சந்தித்த அரவன் சொல்கின்றான் தான் மோகனாச்திரத்தை எய்து எதிரிகளை மயக்கி எந்த வித இழப்பும் இன்று துரியோதனனை கைது செய்து தருகின்றேன் அவனை பணய கைதியாக வைத்து இழந்த நாட்டை அழிவுகள் இன்றி பெற்று கொள்ளலாம் என்றான் .அழிவுகளை மட்டுமே விரும்பும் கிருஷ்ணருக்கு இதில் உடன்பாடு இருக்கவில்லை அரவானுக்கு திரிசதியை மணம் செய்து வைக்க விருப்பமும் இல்லாததால் அவனை கொலை செய்ய திட்டம் இடுகின்றார் .அந்த திட்டத்துக்கு தர்மரை பயன்படுத்தி தான் தப்பித்து கொள்கின்றார் .அதாவது போர் தொடங்கும் முன் போர் வெற்றி வேண்டி ஒரு சுத்த வீரனை நிகும்பலா (காழி) தேவிக்கு நரபலி கொடுப்பது அவர்கள் வழக்கம் அதற்கு தகுதியானவர்கள் பாண்டவர் பக்கத்தில் அர்ச்சுனன் வாசுதேவன் அரவன் அபிமன்யு நால்வருமே இருந்தார்கள் .இவர்களில் அரவன் தானாகவே வந்து யாகத்தில் குதித்து தன்னை தற்கொடை செய்கின்றான் .பாரத போரிலும் தற்கொடை செய்த முதல் போராளி ஈழத்தவன் என்பது வரலாறு சொல்லும் உண்மை ஆகி போனது .

போர்க்களத்தில் பிதா மகன் கங்கை புத்திரர் பிஷ்மரை முறை கேடாக சிகண்டியை (அம்பை )என்ற பெண்ணை முன் நிறுத்தி ஆயுதங்களை கிளே போட வைத்த நிராயுத பாணியை தாக்கிய பேடியை அர்சுனனை இந்த உலகம் ஏன் வீரன் என்று சொல்கின்றது துரோணரை குருவை அஸ்வத்தாமன் இறந்து விட்டான் என்று பொய் சொல்ல வைத்து கொலை செய்யும் அணியின் இருந்த இவர்களை எவ்வாறு வீரர்கள் என்று சொல்வது .சக்கர வியூகத்தை மட்டும் உடைத்து உள்ளே போய் போரிடும் கலை மட்டும் அறிந்த அபிமன்யுவை எதிரியின் சுற்றி வளைப்புக்குள் அகப்பட வைத்து பரிதாபமாக இறக்க வைத்ததிலும் முற்றும் அறிந்த கிருஷ்ணர் சதி இல்லாமல் இல்லை ,, நச்சு குண்டுகளையும் எரிவாயுவையும் பாவித்த கடோர்கஜனை தர்மத்தை காக்க போர் செய்த தர்மன் எவ்வாறு தடை செய்யப்பட்ட ஆயுத பாவனைக்கு ஆதரவு அளித்தார் .தேரில் இருந்து ஒருவன் கிழே விழுந்தால் அம்புகளால் தாக்க கூடாது என்பது விதி என்றால் தர்மயுத்தத்தில் அரிச்சுனன் புதைந்த தேர் சில்லுகளை நிமிர்த்திய கர்ணன் மீது பாசுபத அஸ்திரம் செலுத்தியது வீரமா ,,நயவஞ்சகம் செய்யும் கோழைகள் வென்றதே சரித்திரங்கள் ஆக்கப்பட்டது உண்மையான வீரர்கள் மாவீரர்களாக மாண்டது வரலாற்று உண்மைகளை மெய்பித்து நிற்கின்றது ,,,,,,,,,,,,,,,,,புனைந்து எழுதப்பட்ட கதைகளை வரலாறாக பார்க்கும் நாம் சில நூறு வருடங்களுக்கு பின்னர் தில்லுக்கு மகிந்தா என்ற வாசகத்தையும் படிக்க வேண்டி வரும் ,,,,,,,,,,,
 

ஆக்கம் சிவ மேனகை 




லிங்கம் நாகலிங்கம்:


கர்ணன் பாத்திரம் நமக்கு உணர்த்தும் பாடங்கள் நிறைய ... என்ன தான் நட்பை போற்றும் நல்லவனாக இருந்தாலும் மண்ணாசையும் , மனதில் வளர்க்கும் பகைமையும் ஒருவனை வீழ்த்தி விடும் என்பதற்குதுரியோதனன் ஒரு உதாரணம் , கொடை வள்ளலாக இருந்தாலும் வாய் துடுக்கு ஆகாது என்பதற்கு கர்ணன் ஒரு உதாரணம் , தர்ம சீலன் கூட கேட்பார் பேச்சை கேட்டு புத்தி தடுமாறுவான் என்பதற்கு தர்மன் ஒரு உதாரணம் , தர்மத்தை நிலை நாட்டுவதற்காக எந்த வழியையும் கையாளலாம் என்பதற்கு கிருஷ்ணன் ஒரு உதாரணம் , போர் மூண்டால் அதனால் நாசமாக போவது பல்லாயிரக்கணக்கான உயிர்களே என்பதற்கு கர்ணன் படமே பெரிய உதாரணம் ...










எதோ கிருஷ்ணர் என்ற கதா பாத்திரத்தைக் கடவுளாகவும் ஒரு மகனுக்குத் துரோகம் செய்த குந்தி என்ற பெண்ணை உத்தம தாயாகவும் மாயாஜாலங்கள் காட்டிய பாரதக்கதையை உயர்வைக் கருதி எழுதப்பட்ட பகவத் கீதையை கடவுள் வாக்காகவும் கருதி வாழும் மக்களுக்கு உங்கள் பதிவு சிறிது தெளிவை ஏற்படுத்தும். பாரத யுத்தம் முழுக்க முழுக்க சூழ்ச்சியின் வடிவமே. என்பது உண்மையே .பலருக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காக சிலரைக் கொள்வது குற்றமில்லை என்று எமது மனுதர்மத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது . இதனையும் சிறந்தது என்று மன்னர்கள் ஏற்றுக்கொண்டார்கள் தானே. மொத்தத்தில் எல்லாவற்றிலும் சந்தேகங்களே தொக்கு நிற்கின்றது . தொடருங்கள் மேனகை







சிவ மேனகை உங்கள் பதிவுகளைப் படித்தேன் எனக்குச் சிரிப்புத் தான் வந்தது உங்கள் அவரச அலசலைக்கண்டு. ஒரு புராணத்தை ஆராயும் போது நாம் கருத்தில் கொள்ள வேண்டியவை பல உண்டு. உதாரணமாக..அன்றையா கால பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள், சமுதாய அமைப்பு மற்றும் சூழல்கள் இப்படி பல உண்டு. அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலமாய் உங்கள் பதிவு உள்ளது. ஒரு தெளிவான ஆய்வு அனுகுமுறையோ இல்லை தெளிவான விளக்கங்களை முறையாகத் தொகுக்கவில்லை. இது தெரியாமல் பலர் இங்கு உங்களை ஊக்கப் படுத்தி வேறு விடுகிறார்கள். பதட்டமாக வரும் கருத்துக்களில் உண்மை நிலை மறைந்துவிடும். முடிந்தால் ஒரு இதிகாசத்தை ஆய்வு செய்யும் எண்ணமிருந்தால் முறையாகப் பயிற்சி அவசியம். அதைவிடுத்து தெளிவில்லாத இப்படிப் பட்ட விளக்கங்கள் தவறான பாதைக்கே வழிகாட்டும்.





இணுவில் ஸ்ரீ பாரதக்கதை அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் நடக்கும் கதைதான்,பூமி பாரத்தை குறைக்க பிறந்த கண்ணனால் கீதையில் தெளிவாக சொல்லப்பட்டு குற்றமும் அவனால் ஏற்கப்பட்டுவிட்டது.இன்று இலங்கையில் நடந்ததும் அதுவே,உங்கள் புனிதர்கள் செய்தது சகோதரக்கொலை,அரசு செய்தது இனப்படுகொலை.யுத்ததர்மம் அன்றும் இருந்தது,யுத்தம் குடிசனமற்ற இடத்தில் நடாத்தப்பட்டது.யுத்த மீறல்கள் இன்று போலவே அன்றும் இருபக்கங்களிலும் தெளிவாக உணர்ந்தே செய்யப்பட்டன.அரவன் பலியான காரணம் அவனால் அழிவு தடுக்கப்படும் என்பதே,அதேபோல சகாதேவன் சத்தியத்தால் கட்டப்பட்டான்.குந்தி தாய்ப்பாசத்தால் கட்டப்பட்டாள்.முதலில் யுத்த தர்மம் மீறியவர் பீஷ்மர்.கண்ணனை கொல்ல துரியோதனன் சதி செய்யவில்லையா?எத்தனை தடவைகள் அர்ச்சுனனிடம் கர்ணன் தோற்றான் தெரியாதா?அஞ்ஞாதவாசம் முடிகையில் கர்ணன் மட்டுமல்ல இன்னும் பலர் அர்ச்சுனனிடம் புறமுதுகிட்டோடினர் இல்லையா?கந்தர்வனிடம் கர்ணன் தோற்றானே!!குந்தி கர்ணனை மிகவும் பாதுகாப்பாக சூரியனின் வரத்துடந்தான் கடலில் இட்டாள்.அடையாளம் காணத்தான் தன புடவையை அவனுடன் இட்டாள்.ஆராயாமல் குறை கூறுவது அவசர புத்தி!!அன்று அழிந்த குமரி கண்டம்தான் கண்ணனால் ஆளப்பட்ட பிரதேசம்.பல கதைகள் உண்மையை அடிப்படையாக கொண்டே உருவாகின்றன என்பது வெள்ளிடை மலை!!













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக