கள்ளழகர்: சமீபகாலமாக, பல தொல்லைக்காட்சி சேனல்களில் நேரடி ஒளிப்பரப்பு செய்யும் அளவிற்கு மிகவும் விசேஷம், ‘கள்ளழகர் ஆற்றில் இறங்குதல்’... இளைய தலைமுறையினருக்கு ஆச்சர்யம். ’கள்ளழகர் ஏன் ஆற்றில் இறங்குகிறார், ‘ஆற்றில் இறங்கி என்ன செய்வார்?’ எனப் பல கேள்விகள் .
பல சுவாரசியமான கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்கள் கொண்டது நம் தமிழ்நாடு. மதுரை மாநகரம், தமிழகத்தின் 2ம் பெரிய நகரம் மற்றும் மிகப் பழமையான நகரமும்கூட. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அழகைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தால் சொல்லிக் கொண்டே போகலாம். கூடல் மாநகரில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடப்பது வழக்கம். இதில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரபலமானது என்பதை அனைவரும் அறிவிர்கள்.
மதுரையில், சித்திரைத் திருவிழாத் தொடங்கியதும், 2 நாட்கள், கோயில் வளாகத்திலுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வீற்றிருப்பார். பின்னர் கோயிலில் உள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளுவார். அதே நாள் மாலையில் பெயருக்கேற்ற அழகனான கள்ளழகர் அழகர் மலையிலிருந்து மதுரையை நோக்கிப் புறப்படுவார்.
அழகர் என்றழைக்கப்படும் மகாவிஷ்ணு தனது சகோதரி மீனாட்சி யின் திருமணத்தைக் காண அழகர்மலையில் இருந்து மதுரை வருகிறார். ஆனால் வரும் வழியில் பக்தர்கள் அவரை சூழ்ந்துக் கொள்ள அவரால் திருமணத்தில் கலந்துக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது. அவர் வைகை ஆற்றைக் கடந்து மதுரை செல்ல எண்ணி ஆற்றில் இறங்கும் சமயம் சகோதரியின் திருமணம் முடிந்து விட்டது என்ற செய்தி வருகிறது. அதனால் வந்த வழியேத் திரும்பி விடுகிறார். இதுதான் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் என மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
வழியில் பொய்கைக் கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, மறவர்மண்டபம், கடச்சனேந்தல் ஆகிய ஊர்களில் உள்ள திருக்கல்யாண மண்டபங்களில் கள்ளழகர் எழுந்தருளுவார். மறுநாள் அதிகாலையில் மதுரை வந்தடையும் அழகரை அவ்வூர் மக்கள் வாணவேடிக்கை, மங்கள வாத்தியங்களுடன் வரவேற்பர். அன்று இரவு தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயிலில் எழுந்தருள்கிறார். அங்கு திருமஞ்சனம் முடிந்து, ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையைச் சாற்றி, பின் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருள்கிறார். இந்த வைபவத்திற்காக ஸ்ரீவில்லிப்புதூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மலர்மாலை, வஸ்திரம், கிளி ஆகியவை ஸ்ரீவில்லிப்புதூரிலிருந்து
தல்லாக்குளம் பெருமாள் கோயிலிலேயே விடிய விடிய எழுந்தருளி அங்கு நடக்கும் சாமியாட்டம். திரியாட்டம், போன்ற நிகழ்ச்சிகளைக் கண்டுக் களித்தவாறு பக்தர்களுக்கு அருள் புரிந்துவிட்டு மறுநாள் அதிகாலையில் தல்லாகுளத்திலிருந்து புறப்பட்டு கோரிப்பாளையம் வழியாக வந்து பின்னர் காலை 7 மணி முதல் 7.30 மணிக்குள் ஆழ்வார்புரம் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.
இந்த வைபவம் மதுரை மாநகரில் படுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பத்து நாட்கள் நடக்கும் சித்திரைத் திருவிழாவில் கடைசி மூன்று நாட்கள் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் களைக்கட்டும். முன்பு இந்த விழா மாசி மாதத்தில் நடைப்பெற்று வந்தது. பின்பு நாயக்கர் காலத்தில் இது சித்திரை மாதத்திற்கு மாற்றப்பட்டு சித்திரா பவுர்ணமி அன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று கள்ளழகர் வெகு சிறப்பாக ஆற்றில் இறங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக