தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 10 மே, 2012

'ஓம்



'ஓம்' என்பது தனிக்குறியீடு மட்டுமல்ல. பிரபஞ்சத் தோற்றத்தின் ஆதி நாதவிந்தாகவும், அனைத்துப் படைப்புக்களையும் உள்ளடக்கிய கட்டற்ற தத்துவமாகவும் உள்ளது 'ஓம்'. அதை எம்மொழியிலும் எழுதலாம்.

"ஓம்" என்ற ஒலி ஆதியலிருந்தே தமிழோடும், தமிழர் வழக்கிலும் இருந்து வந்துள்ளது. ஈழத்தில் தமிழர்கள் "ஆம்" என்ற சொல்லை, "ஓம்" என்று தான் பேச்சு வழக்கில் கொண்டுள்ளனர்.

கிரேக்க மொழியில் "Ω/Omega/Ωμέγα" என்ற எழுத்துக்கும், மற்றும் "ஆமேன் / ɑːˈmɛn/ ˌeɪˈmɛn/ Hebrew: אָמֵן, Tiberian ʾĀmēn; Greek: ἀμήν ; Arabic: آمين, ʾĀmīn" என்ற சொற்களுக்கும், 'ஓம்'ற்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாகவும் மொழியியல் ஆராயச்சியாளர் தெரிவிக்கின்றனர்.

நன்றி♥
ஓம் என்பது பிரணவ மந்திரமாகும. இது அ + உ + ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே ‘ஓம்’. மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது. மனித வடிவமும் அருள் வடிவந்தான்.

ஓம் என்ற பிரணவன் "அ" என்பது எட்டும் "உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.

உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல் உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு.

அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது. மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். (உள் மூச்சு வெளி மூச்சு)

" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு. " ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும்

அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும். அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96. மனிதவுடலான பிண்டமும், பரவெளியான அண்டமும் இந்தத் 96 தத்துவங்களுக்குள் அடக்கம்.

நன்றி♥


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக