பிரித்தானியாவின் One World Media awards எனப்படும் புகழ்பெற்ற ஊடக விருது விழாவில், ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது.
நேற்றிரவு நடைபெற்ற இந்த விழாவில், இந்த ஆண்டின் சிறந்த தொலைக்காட்சிக்கான விருதையும், சிறந்த ஆவணப்படத்துக்கான விருதையும் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் வென்றுள்ளது.
இந்த விருதுகளைத் தெரிவு செய்த இரு நடுவர்களும் சனல் 4 தொலைக்காட்சி துணிச்சல் மிக்கதும் அசாதாரணமானதுமான முயற்சியை பாராட்டியுள்ளனர்.
கண்டிப்பாக பதிலளிக்கப்பட வேண்டிய கொடூரங்களை சனல்4 தொலைக்காட்சி வெளிக்கொண்டு வந்துள்ளதாகவும், இந்த ஆவணப்படம் மூலம் இந்தக் கொடூரங்கள் அனைத்துலக கவனத்தை பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்விழாவில் வழங்கப்பட்ட விருதுகள் தொடர்பான முழு விபரங்கள் வருமாறு,
சிறந்த ஊடகவியலாளர் :- ஜமால் ஒஸ்மான் (சனல் 4)
சிறந்த ரேடியோ :- பீ.பீ.சீ உலகச் சேவை (ஹெய்டி கொலரா தொற்றுநோய் விவகாரம்)
சிறந்த தொலைக்காட்சி :- சனல் 4 (இலங்கையின் கொலைக்களம்)
சிறந்த பத்திரிகை :- ஒப்சேர்வர் சஞ்சிகை (தி ரேப் ஒப் மென்)
சிறந்த புதிய ஊடகம் :- எஸ்.ஓ.எஸ் ஷில்ட்ரன் (எங்கள் ஆபிரிக்கா 'அவர் அஃப்ரிகா')
சிறந்த நாடகம் :- ஷிங்கா ப்ரொடக்ஷன்ஸ் (ஒதெல்லொ பர்னிங்)
சிறந்த கட்டுரை :- பீ.பீ.சீ டூ (தோக்ஸ் பிளேஸ் டு பீ அ பின்மேன்)
சிறந்த அபிவிருத்தி :- ஒன் தி லெவல் ப்ரொடக்ஷன்ஸ் (தெயார் வன்ஸ் வோஸ் அன் ஐலண்ட்)
சிறந்த செய்தி :- தி கார்டியன் மற்றும் ஐரிவி நியூஸ்
சிறந்த ஆவணப்படம் :- செனல் 4 (இலங்கையின் கொலைக்களம்)
சிறந்த மாணவர் :- ஸேனா மர்டன் (லண்டன் தொலைத்தொடர்புக் கல்லூரி)
சிறப்பு விருது :- ஜெம் டிவி
மாணவர் உரிமை விருது :- அல் ஜஸீரா (ஸ்பெல் ஒப் தி அல்பினோ)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக