தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 8 மே, 2012

'வைட்டமின் டி' (Vitamin D) :


'வைட்டமின் டி' (Vitamin D) :

இன்று நாம் பார்க்க போகும் தலைப்பு 'வைட்டமின் டி'. ஆம் இதுவும் நம் உடம்புக்கு தேவையான் ஒரு முக்கியமான சத்து. ஆனால், வழக்கம் போல் பழம் சாப்பிட்டால் அல்லது காய்கறி சாப்பிட்டால் அல்லது 'வைட்டமின் டி' மாத்திரை சாப்பிட்டால் சரியென்று யாராவது சொன்னா அது பொய். 'வைட்டமின் டி' கிடைக்கும் ஒரே ஒரு வழி(சோர்ஸ்).. ஆம்..! மாலை வெயில் தான். இது நமக்குக் கிடைக்க இயற்க்கை இவ்வளவு எளிதாகவரம் அளித்தும் இதை நாம் சரியாக பெறுவதில்லை.

"மாலை முழுவதும் விளையாட்டு" என பாரதியார் சொல்லி அரை நூற்றாண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் அதை ஒரு சாதாரண பாட்டாகவே நாம் எடுத்துகொண்டு இருப்பது எவ்வளவு முட்டாள் தனம். ஆம் பாரதி கூறியது போல் தயவு செய்து உங்கள் பிள்ளைகளை மாலை வெயிலில் வாரத்திற்க்கு முன்று நட்களாவது ஒரு அரை மணி நேரம் நிற்கவோ அல்லது நடக்கவோ அல்லது விளையாடவோ அனுமதியுங்கள்.

'வைட்டமின் டி' கிடைக்க பெறாத ஆட்கள் முதன் முதலாக குண்டாக இருப்பார்கள் பின் நாட்பட தூக்கம் மற்றும் துக்கம் அதிகம் வரும். இதனால் டிப்ரஷன் எனப்படும் மன அழுத்தம் கண்டிப்பாக உண்டு. அது போகத் தாய்ப்பால் கொடுக்க முடியாது. 'ஏஜிங்' அதாவது வயதுக்கு மீறிய மூப்பு மற்றும் தோல் கறுத்து ஒரு மாதிரி புத்துணர்ச்சி இல்லாமல் காணப்படும்.

'வைட்டமின் டி டெஸ்ட்' எடுத்து தெரிந்து கொள்ளலாம், 'வைட்டமின் டிபிஷயன்ஷி' ஒரு அமைதியான கொலையாளி(சைலைன்ட் கில்லர்) அதனால், அதை நாம் மனதில் வைத்து நாமும் நம் பிள்ளைகளையும் மாலை வெயில் நம் உடம்பின் மீது படும்படி வாழ்க்கை முறையை அமைத்தல் அவசியம். நான் பார்த்திருக்கிறேன் நிறைய வீடுகளில் கதவை அடைத்து அதன் மேல் 'ஸ்கீரினை' போட்டு 'ஏசி ரூமு'க்குள் நம் மூச்சு காற்றை திரும்பவும் நாமலே சுவாசிக்கும் பழக்கத்திற்க்கு ஆளாகி துன்பப்படுவதை. இதற்கு முற்றுபுள்ளி வைப்போம். அது போக அந்த வகுப்பு(கிளாஸ்) இந்த வகுப்பு(கிளாஸ்) என தொடர் துன்பம் (நான் ஸ்டாப் டார்ச்சராக) இருப்பதைக் கைவிட்டு, குழந்தைகளுக்கு விளையாட அல்லது பார்க்கில் சும்மாவது சுற்றவைத்து அவர்களுக்குச் சுத்தமான காற்றைச் சுவாசிக்க கற்றுக்கொடுங்கள்.

நன்றி: ரேணுகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக