''சும்மா இரு, சொல் அற''
***********************
மந்திர தீட்சை என்று கூறியவுடன் ஏதோவொரு குறிப்பிட்ட மந்திரத்தைத்தான் கூறவேண்டும் என்பது பொருளன்று. ஆன்மாவின் பக்குவத்திற்கு ஏற்ப இந்த உபதேசம் எந்தச் சொல்லாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏனையோரைப் பொறுத்தமட்டில் அச்சொற்கள் வாலாயமாக வழங்கும் பொருளைத் தரலாம். ஆனால் அதே சாதாரணச் சொற்கள் சீடனின்பக்குவத்திற்கேற்ப மந்திரமாக மாறிவிடும். இது ஆன்மீகவாதிகள் அறிந்த ஒன்றாகும்.அருணகிரி நாதரைப் பொறுத்தமட்டில் குருவாக வந்த பெருமான் செய்த உபதேசம்
________________________________________________
''சும்மா இரு, சொல் அற'' என்ற நான்கு வார்த்தைகளே ஆகும்.
************************************************
சாதாரண மக்களைப் பொறுத்தமட்டில் 'ஒன்றும் பேசாதே சும்மா இரு' என்ற பொருளைத் தரும் இந்த நான்கு சொற்கள் அருணகிரியின் ஆன்மீக வளர்ச்சிக்கு ஒரு பாலமாய் அமைந்தது.
________________________________________________
*''சும்மா இரு சொல் அற'' என்பது எப்பொழுது எப்படி மந்திரம் ஆகின்றன?
இச்சொற்களைக் கூறியவர்கள் நம்மைப் போன்ற குறை மொழி மாந்தர்கள் அல்லர். அவர்கள் நிறை மொழி மாந்தர்களாவர்.அவர்கள் ஆணையால் இந்தச் சாதாரணச் சொற்கள் மறைமொழியாக, அதாவது, மாபெரும் சக்தி ஊட்டப் பெற்ற மந்திரங்களாக மாறிவிட்டன.
________________________________________________
*சக்தியூட்டப் பெற்ற மந்திரங்கள் எப்பொழுது அந்தச் சக்தியை வெளிப்படுத்துகின்றன?
இச்சொற்கள் சென்று சேரும் இடம் பக்குவப்பட்ட ஆன்மாக்களாக இருப்பின் இவை மந்திரங்களாக மாறி ஆன்மாக்களை வழி நடத்துகின்றன. ஓர் ஆன்மா நல்முறையில் பக்குவப் பட்டிருப்பின் எந்தச்
சொல்லையும் மந்திரமாக மாற்றி நிறைமொழி மாந்தராகிய குருமார்கள் அம்மந்திரச் சொற்களையே உபதேசமாக மாற்றிவிடுவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக