தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, May 10, 2012

பழனியம்பதி சித்தநாதன்!



பழனி முருகனுக்கு இன்னொரு பெயர் உண்டு தெரியுமா? அது தான் சித்தநாதன். சித்தர்களை அவனுக்குப் பிடிக்கும். சித்தர்களுக்கு அவனைப் பிடிக்கும் பழனிக்கே 'சித்தன் வாழ்வு' என்ற பெயரும் உண்டு.

பல ஆயிரம் ஆண்டுகள் முன்பே அகத்தியரும், போகர், புலிப்பாணி, கொங்கணர், கருவூரார், சுந்தரனாந்தர், மச்சமுனி, கோரக்கர், இடைக்காடர், கமலமுனி, சட்டை முனி போன்றவர் புகழ்ந்து பாடி மகிழ்ந்துலாவிய புண்யத் தலம் திருவாவினன்குடி என்ற பழனியம்பதி.

இறைவனை இடைவிடாது சிந்தித்து சித்தம் அடக்கி அகக் கண்களால் அந்த இறைவனைக் கண்டு தெளிந்தவர்கள் இந்த சித்தர்கள். பழனியாண்டவரின் திருக்கோயிலில் இந்தப் பார் புகழும் பதினெண் சித்தர்களின் திருவுருவச் சிலைகள் உள்ளன.

No comments:

Post a Comment