தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, May 26, 2012

தேவலோகத்தில் இருந்து வந்தவள் முதல் தெருவில் நிற்பவள் வரை கண்டு மயங்கும் மானிடம் ,,,,,,,,,,,பெண்ணாலே கெட்ட பாரதம் ,,,,,,,,


தேவலோகத்தில் இருந்து வந்தவள் முதல் தெருவில் நிற்பவள் வரை கண்டு மயங்கும் மானிடம் ,,,,,,,,,,,பெண்ணாலே கெட்ட பாரதம் ,,,,,,,,

முற்றும் துறந்த முனிவர்கள் என்பவர்களும் இதிகாச புராண காலத்தில் இருந்தே அழகான பெண்களை கண்டால் பற்றும் பாசமும் வந்து விடுகின்றது .இது துவாரக யுகத்திலே ஆரம்பம் ஆகிவிட்டது .இந்திரனிடம் சாபம் பெற்று பூமிக்கு வந்த மேனகை விஸ்வாமித்திரர் தவத்தை தன் அழகை காட்டி அன்று கலைத்தாள் .காதல்வசப்பட்ட முனிவன் காம லீலை புரிந்து பிறந்தவள் தான் சகுந்தலை .பாவம் அந்த சகுந்தலை தாய் தந்தையரால் நடு காட்டில் அனாதையாக விடப்பட்டாள்..இன்னொரு முனிவன் அந்த பிள்ளையை தன் பிள்ளையாக எடுத்து வளர்த்தான் .அந்த பிள்ளையையும் அந்த நாட்டு அரசன் சும்மாவா விட்டான் .வேட்டை ஆட வந்தவன் இந்த மான் விழியாளை கண்டு மயங்கினான் . வில் இல்லாமலே மன்மத அம்பு தொடுத்து .அவள் உள்ளத்தை துளைத்துவிட்டான் .துளை பட்ட உள்ளமும் அவனுக்காய் துடி துடித்தது .உறவென்று வந்தவன் அவளுக்குள் இன்னொரு உயிரை கொடுத்துவிட்டு தலை மறைவாகிவிட்டான் .அந்த துஷ்யந்தனை தேடி பிடித்து உன்பிள்ளைதான்.பரதன் என்று நிரூபிக்க சகுந்தலை பட்ட பாடு கொஞ்சமல்ல .பரதன் முடிக்கு உரிய அரசன் ஆனான் . இவன் பெயர் வைத்தே இந்தியா பாரதம் என்ற பெயரை பெற்றது .தாய் பட்ட கஸ்ரத்தை நன்றாய் உணர்ந்ததாலோ என்னவோ இவன் மட்டும் நல்லவனாய் வாழ்ந்தான்.உலகில் முதல் ஜனநாயக விழுமியத்தை நிறுவியவன் .அதாவது தனது ஒன்பது பிள்ளைகளும் நாட்டை ஆழ தகுதி அற்றவர்கள் என நிராகரித்து மக்களில் இருந்த ஒருவனை சந்தனுவை நாட்டுக்கு மன்னன் ஆக்கினான்.
.இந்த சந்தனு மன்னனே குரு வம்சம் அல்லது சந்திர வம்சம் ,அல்லது பாரத வம்சம் என்கின்ற மாகா பாரத வம்சத்தினரின் அழிவுக்கு காரணம் ஆனான் .இவனும் கங்கை என்ற பெண்ணுக்கு அடிமையாகி அவளின் ஏற்றுகொள்ளமுடியாத கொள்கைகளை ஏற்று கொண்டு நாட்டை அன்றே அடைவு வைத்து விட்டான் .இவர்களுக்கு பிறந்த முதல் ஏழு குழந்தைகளையும் ஆற்று நீரில் விட்ட கங்கை எட்டாவது குழந்தையை வளர்த்து தருவதாக சத்தியம் கூறி எடுத்து கொண்டு இவனிடம் இருந்து பிரிந்து செல்கின்றாள் .அவள் சென்ற பின்னாவது ஒழுங்காக நாட்டை ஆண்டானா இல்லவே இல்லை சத்திய வதி என்ற இன்னொரு மீனவ குல பெண்ணை கண்டு மீண்டும் பெண் வலையில் தன்னை இழக்கின்றான் .மீண்டும் வேதாளம் முருங்கில் ஏறிக்கொண்டது .இவளும் தன் சார்புக்கு ஒரு கோரிக்கை வைத்தாள் தான் அவனை திருமணம் செய்ய வேண்டுமானால் தன் வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்கு அரசு உரிமை தேவை என்று கேட்கின்றாள் .ஏற்கனவே கங்கை புத்திரன் தேவ விரதன் (பிஷ்மன் )இளவரசனாக இருக்கும் பொழுது மன்னனால் அது முடியவில்லை .மன்னன் வாடி வதங்கி சோகத்தில் அரண்மனையில் முடங்கி கிடந்தான் .தந்தை இவ்வாறு இருப்பதற்கு காரணத்தை கேட்டறிந்த மகன் தேவவிரதன் .சத்திய வதியின் வேண்டுகோளுக்கு தான் இணங்கி தனக்கு உரிய நாட்டை சத்தியம் செய்து அவளுக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு கொடுத்து அவளை அஸ்தினா புரத்துக்கு அழைத்து வந்தான் .தந்தைக்கு மறுமணம் செய்து வைத்தான் ,,,இதே பீஷ்மன் தான் மணம் செய்து கொள்ளமாட்டேன் என்று சபதம் செய்ததால் தன் தம்பிக்காக மூன்று பெண்களை கவர்ந்து வந்து திருமணம் செய்து வைக்க முயற்சித்ததால் அம்பை என்ற பெண்ணின் பழி பாவத்துக்குள் தன்னை இழந்தான் .(இதனாலேயே இறுதி போரில் அம்பையை சிகண்டியாக முன்னிறுத்தி அர்ச்சுனன் கணையால் பிஷ்மன் தாக்கப்பட்டான் ,,)
அம்பை பிஷ்மரை எதிர்த்து சபதம் இட்டு விலகி செல்ல அம்பாலிகை அம்பிகை இருவரையும் அவர்கள் விருப்பம் இன்றியே பிஷ்மரால் உடல் நலிவுற்ற விசித்த வீரியனுக்கு மனைவி ஆக்கபட்டார்கள் .விருப்பம் இல்லாத திருமணத்தால் குருவம்சத்துக்கு வம்சம் இல்லாத நிலை தோன்றியது .இதை சரி செய்ய சத்தியவதியும் வேத வியாசரும் பிஷ்மரும் செய்த சூல்சியாலேயே திருதராட்டினன் பாண்டு விதுரன் எனற பிள்ளைகள் உருவாகினர் இவர்களுக்கும் பரதனுடைய வம்சத்துக்கும் சந்தனுவின் வம்சத்துக்கும் எந்த இரத்த தொடர்பும் இல்லை .இப்படி இருக்க அரசை யார் ஆண்டால் தான் என்ன ஏன் இவர்களுக்கு போர் மூண்டது என ஆராய்ந்து பார்த்தால் அதற்கு காரணமாக வருபவர்கள் பாரத நாட்டின் அன்றைய பெண்கள் .முறைப்படி திருதராட்டினனை காந்தாரி திருமணம் செய்து அவன் இரத்தத்தில் பிறந்த பிள்ளை துரியோதனனை இந்த உலகம் ஏற்க மறுக்கின்றது .குந்தியின் மந்திரங்களில் பிறந்த பிள்ளைகளை இந்த உலகம் ஏற்கின்றது .தப்பு செய்த குந்தியை மதிக்கும் இந்த உலகம் தவம் செய்த காந்தாரியை தூற்றுகின்றது .தப்புக்கு துணை போன மாதுரியால் மாண்டுபோன பாண்டுவை பாராட்டுகின்றது .குருடனாய் இருந்தும் அரசனாய் இருந்த திருதராட்டினனை விமர்சிக்கின்றது .விதுர நீதி பாண்டவர் சுயநலம் சாய்கின்றது .அது ஒரு புறம் இருக்க தீயில் தோன்றிய திரவுபதைக்காக ஐந்து ஆடவர்களின் மானத்தை மகாபாரதம் கப்பல் ஏற்றுகின்றது .ஒருவனுக்கு ஒருத்தி என்ற பாரத பண்பாடு இங்கே பரிகாசம் செய்யப்படுகின்றது அதே திரவுபதைக்கு பாண்டவர்கள் அடிமை ஆகின்றனர் .சூதாடி சகலதையும் தோற்ற தர்மன் பாஞ்சாலியை தோற்கும் பொழுதான் அங்கு பிரட்சனை வெடிக்கின்றது தர்மன் தனக்கு உரிமை இல்லாத பாஞ்சாலியை எவ்வாறு தோற்க முடியும் என்ற கேள்வி எழுகின்றது .சபதங்கள் விதைக்கப்படுகின்றது .விதைக்கப்பட்ட சபதங்களில் அறுவடை நாட்களே பதினெட்டு நாள் குருசேஷ்திர யுத்தம் .சூதாட்ட அரங்கில் அவிழ்த்து விடப்பட்ட பாஞ்சாலி ஒருவரின் கூந்தலை துச்சாதனன் ஒருவன் இரத்தம் தடவி முடிவதற்காய் பல இலட்சம் போர்வீரர்கள் இறந்தார்கள் பதினெட்டு இலட்சம் பெண்கள் தலைவிரி கோலமாக பாரதத்தின் வீதிகளுக்கு வந்தார்கள் ,,இதற்கு காரணாமான திரவுபதைக்கும் இன்று கோவில் இருக்கின்றது ,,இதை நடத்தி முடித்த கிருஷ்ணருக்கும் இன்று கோவில் இருக்கின்றது ,,ஆனால் இந்த பாரத தேசத்தில் இன்னும் ஒருவருக்கும் விடிவு கிடைக்கவில்லை ,,,,,,,,

Sothi Sellathurai 
என்ன இருந்தாலும் சகுந்தலைக்கு மாலையிட்ட மன்னன் துஷ்யந்தன் கெட்டவனாகச் சித்தரிக்கப்படவில்லை. முனிவர்களின் போட்டி பொறாமைகள் பிடிவாதங்கள் இவர்கள் வாழ்விலே பகடை விளையாடியது. சகுந்தலையை வளர்த்த கண்ணுவ முனிவர் கருணையுள்ளம் கொண்டவர். அவர் தான பாசமுடன் வளர்த்த சகுந்தலையை கணவன் வீட்டுக்கு அனுப்பும்போது அவள் செல்லும்வழி எப்படி மாறவேண்டும் என்பதாகவரும் என் ஞாபகத்தில் உள்ள நயம்மிக்க பாடலொன்று:
'மங்கையிவள் செல்லும் வழியில்
நறுந்தருக்கள் நிழல் செய்து
மலிக மற்றும் பொங்கு மணல்
தாமரையின் பொலன் தாது
போற் பொலிகஇ புனித வாவி
எங்கு மலர்ந்திலங்கிடுக
மந்தமாருதம் வீச இனிய
தோகை யுங்குயிலும்
துணையாக அறு தொடர்கண்
ஊகரம் போல் உறுக தூரம்.

No comments:

Post a Comment