தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, July 5, 2017

உன் மனைவியை “வெத்தலை” போடச் சொல்லு.. அவளைப் பற்றி நான் சொல்றேன்.. கதறவிட்ட பாட்டி!!

சீனியம்மா பாட்டி என்றால் அந்த கிராமமே நடுங்கும்..! வாயைத் திறந்தாலே வம்பு, வட்டி இல்லாமல் வரும்.
சீனியம்மாவை பார்த்தாலே முகத்தை திருப்பிக் கொண்டு ஓடியவர்கள் நிறைய உண்டு. வாசல் திண்ணையில் உட்கார்ந்து ஊர்வம்பு பேசுவதுதான் பாட்டிக்கு பொழுது போக்கு.
மாடசாமிக்கு விடிந்தால் கல்யாணம். ஊரே கல்யாண மண்டபத்தில் இருந்தது. சீனியம்மா பாட்டிக்கு மாடசாமி பத்திரிக்கை கொடுக்கவில்லை. காரணம் அந்தப் பாட்டியால் கல்யாணமே நின்று விடக் கூட வாய்ப்பு உண்டு. சில கல்யாணங்கள் நின்றும் போய் இருக்கிறது.
தனக்கு அப்பளம் தர வில்லை என்று ஒரு கல்யாணத்தையே நிறுத்தி இருக்கிறார் சீனியம்மா பாட்டி. திருமண நிகழ்வு ஆரம்பித்தது மாடசாமியும் தாலி கட்டினான்.
திடீரென சீனியம்மா என்ட்ரி ஆனார். “ஏலே கூறு கெட்ட பயலே..மாட சாமி.. இந்தக் கிழவிய ஏம்லே கல்யாணத்துக்கு கூப்பிடலை ” என்றார்.
மாட சாமி ஏதோ கூறி சமாளித்தான். “பொண்ணு என்னலே ஒட்டடைக் குச்சி மாதிரி இருக்கா..நீ ராசாவாட்டம் இருக்க.. இவளை எங்க இருந்து புடிச்சே” என்றார். உடனே அனைவருக்கும் நெஞ்சை அடைத்தது..மூச்சு முட்டியது.
மாடசாமி வாழ்க்கை ‘பணால்’ என்றார்கள் சிலர். பாட்டி விடவில்லை..”ஏலே மாடசாமி உன் பொஞ்சாதிய வெத்தலை போடச்சொல்லு நான் பாக்கோணும்” என்றார் சீனியம்மா. மணப்பெண் கண்களில் நெருப்பு பறக்க அந்தக் கிழவியை முறைத்தாள். எனக்கு வெத்தலை,பாக்கு போட்டு பழக்கம் இல்லை ” என்றாள் வெடுக்கென்று.!
ஏலே அவளை வெத்தலை போடச் சொல்லு ” என்று மிரட்ட ..பரிதாபமாய் மாடசாமி புது பொண்டாட்டி இடம் கெஞ்சினான். வெற்றிலை வந்தது..
கிழவியே சுண்ணாம்பு தடவி வெற்றிலை மடித்து பெண்ணிடம் கொடுத்தார். பெண் வேண்டா வெறுப்பாக வெற்றிலை போட்டாள்.
கிழவி அவளை உற்று பார்த்தார். மாடசாமி கிறுகிறுத்துப் போய் நின்றான். ” நாக்க நீட்டு” என்றார் கிழவி. மணப்பெண் நாக்கை நீட்ட நன்றாக சிவந்து போய் இருந்தது பெண்ணின் நாக்கு.
கிழவிக்கு ஒரே சந்தோசம்..”ஏலே மாட சாமி..உன் பொஞ்சாதிக்கு உன் மேல ரொம்ப ப்ரியம்டா..உன்னை ஆயுசுக்கும் வச்சுக் காப்பாத்துவா..கொடுத்து வச்ச பயடா நீயி..இப்படி ஒரு பொண்ணு கிடைக்க நீ தவம் கெடக்கணும்..மவராசியா இரு தாயி ” வாழ்த்தினார் கிழவி..!
சட்டென்று அங்கிருந்து கிளம்பி விட்டார் சீனியம்மா.. பாட்டி இருந்து சாப்பிட்டு போ ” என்றான் மாடசாமி. “ஏலே நான் என்ன ரோசம் கெட்ட சிருக்கியா.. பத்திரிக்கையே வைக்கல நீயி.. எப்படி கைய நனைப்பேன்..போடா போடா எடுபட்ட பயலே ” என்று மண்டபத்தில் இருந்து போய் விட்டார் சீனியம்மா பாட்டி.
நீங்களும் உங்க மனைவியிடம் வெற்றிலை போட சொல்லி ரிசல்ட் என்னனு பாருங்க.

http://www.manithan.com/news/20170705128158?ref=builderslide

No comments:

Post a Comment