தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, October 24, 2017

விடை கிடைக்காத மர்மம் “கிருஷ்ணனின் வெண்ணெய் பந்து”


உலகமே வியந்து பார்க்கும் மர்மம் கிருஷ்ணனின் வெண்ணெய் பந்து, சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரத்தின் மகாபலிபுரத்தில் அமைந்துள்ளது, இக்கருங்கல் உருண்டை 6 மீட்டர் உயரமும், 5 மீட்டர் அகலமும் 250 டன் எடையும் கொண்டது. இதன் எடையை ஒப்பிடும்போது இது மலையிலிருந்து உருண்டு விழவேண்டும், ஆனால் தகுந்த பிடிப்பு ஏதும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அப்படியே அமர்ந்துள்ளது.

இந்து தொன்மவியலின் படி, கிருஷ்ணா குழந்தையாக இருந்த போது, ​​அவர் வெண்ணெய் திருடி உண்ணும் பழக்கம் இருந்தது.
அவர் எங்கு வேண்டுமானாலும் வெண்ணெயை திருடிவிடுவார், அவரது தாயார் யசோதையின் பெரும் பாணையிலிருந்த வெண்ணெயை திருடித் தின்ற செயலை நினைவு கூறும் வகையில் இக்கல் உருண்டைக்கு கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து என அழைக்கப்படுகிறது.

வரலாறு
பல்லவ மன்னர் முதலாம் நரசிம்ம பல்லவன் கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து என அழைக்கப்படும், இந்த கருங்கல் உருண்டையை குன்றிலிருந்து கீழே இறக்க செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
1908-இல் சென்னை மாகாணத்தின் ஆளுநாராக இருந்த ஆர்தர் ஹேவ்லாக், எந்நேரத்தில் கீழே விழும் நிலையில் இருக்கும் இப்பெரிய உருண்டையான கல்லை, பாதுகாப்பு காரணம் கருதி ஏழு யாணைகளின் உதவியால் குன்றுலிருந்து கீழே இறக்க முயற்சி எடுத்தார். ஆனால் இவரது முயற்சி வெற்றி பெறவில்லை.http://news.lankasri.com/travel/03/135241

No comments:

Post a Comment