உலகெங்கும் தீபாவளி பண்டிகை நாளை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
இதற்காக மக்கள் படுஜோராக தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், தீபாவளி அன்று செய்யும் கடமைகளில் ஒன்று தான் எண்ணெய் குளியல்.
இதனால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?
- ஞாயிற்றுக்கிழமை- மனவருத்தம்,
- திங்கட்கிழமை- உடலுக்கு புத்துணர்ச்சி,
- செவ்வாய்க்கிழமை- உடல் நலக்குறைவு,
- புதன்கிழமை- செல்வம்,
- வியாழக்கிழமை- உடல் நலம்,
- வெள்ளிக்கிழமை- அதிக செலவு,
- சனிக்கிழமை- விரும்பியவற்றை பெறலாம்.
காலை 5 மணிமுதல் 7 மணிவரை எண்ணெய் தேய்த்து குளிக்க நல்ல நேரமாகும், மதியம் 12 மணிக்கு பின்னர் குளித்தால் பலனிருக்காது, இரவு வரையிலும் தூங்காமல் இருக்க வேண்டும்.
இதேபோன்று தீபாவளியன்று பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் ஒவ்வொரு தெய்வத்தின் கடாட்சம் இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது.
- எண்ணெய்- லட்சுமி
- சிகைக்காய்- சரஸ்வதி
- சந்தனம்- பூமாதேவி
- குங்குமம்- கௌரி
- தண்ணீர்- கங்கை
- இனிப்புப் பலகாரம்- அமிர்தம்
- நெருப்புப் பொறி- ஜீவாத்மா
- புத்தாடை- மகாவிஷ்ணு
மேலும் காலை 08-00 மணி முதல் 09-00 மணிக்குள் புத்தாடைகள் அணிந்து கிருஷ்ணரையும் லட்சுமியையும் வழிபட வேண்டுமாம்.
http://news.lankasri.com/religion/03/134748
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக