தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 12 அக்டோபர், 2017

ஒதுக்கிவைத்தவர்கள் ஒப்பாரி எதற்காக!?


எல்லோரும் அறிந்து தெரிந்து கொள்ளவேண்டியது ஒன்றுதான்
அது என்னவென்றால் அன்பு, பாசம், அக்கறை, நல்லெண்ணம் எங்கிருக்கோ அவர்கள்தான் மற்றவர்களின் கஸ்ரத்தைப்பார்த்து கவலைப்படுவார்கள்,அவர்களுக்கு ஆறுதலாய் இருப்பார்கள்,உதவியாய் இருப்பார்கள், யாரிடமும் அவர்களைப் பற்றி நக்கல் கதை கூறமாட்டார்கள் பொறாமைப்படமாட்டார்கள்,
யாரிடமும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள், அவர்களுக்கு நல்லதே நடக்கவேண்டும் என்று நினைப்பார்கள்,கோவப்ப ட் டாலும் அவர்கள் செய்த நல்லவற்றையே பேசுவார்கள்,
அவர்களை எங்கும் கேவலப்படுத்தமாட்டார்கள், அவர்கள் தன்னை கேவலப்படுத்தினாலும் மன்னித்து பொறுமையாய் போவார்கள்.
(இது உண்மையான அன்பு, பாசம்,அக்கறை, நல்லெண்ணம் கொண்ட) அப்பா,அம்மா,அண்ணா,அண்ணி,
அக்கா,அத்தான்,தம்பி,தங்கை,மாமா,மாமி,பெரியப்பா,பெரியம்மா,சித்தப்பா,சித்தி,மச்சான்,மச்சாள்,தாத்தா,பாட்டி, மகன்,
மகள்,பேரன்,பேத்தி,கணவன்,மனைவி,காதலன்,காதலி, நண்பன்,நண்பி,ஆசிரியர்,முதலாளி,தொழிலாளி,மாணவர்,பக்கத்துவீட்டுக்காரர் என்று இன்னும் பலர் இருந்தாலும் இவர்களுக்கும் பொருந்தும்.
மற்றவர்கள் காரியம் முடிந்ததும் விலகிப்போறவர்கள், அனுபவம் கற்றுத்தரும் பாடம் இது.



காரியம் முடிந்ததுமல்ல,கஸ்ரத்துக்கு உதவாமல் இப்படி இருந்து என்ன செய்யப்போகிறீர்கள்,இஸ்ரத்துக்கு நடக்கிறார்,சொல்லுக்கேட்பதில்லை, வைத்துப்பார்க்கின்றோம் வைத்துப்பார்த்தோம் என்று அந்நிய நாடுகளில் அந்த நாடுகளால் அகதிகளாக வைத்துப்பார்க்கப்பட்டவர்கள் சொல்வதாலும் விலகியிருக்கலாம்!ரத்த உறவுகளையே அகதிப்பணத்தில் அரச உதவிப்பணத்தில் பாரமாக நினைப்பவர்களை அந்த அரசுகள் பாரமாக நினைத்திருந்தால்....!உண்மை அன்பு ஊரோடு ஓடிப்போனது,பணம் மட்டுமே இங்கு உறவாகிப்போனது!பணத்துக்காக கலாச்சாரம்,பண்பாடு,உறவுமுறை எல்லாமே விலையாகிப்போனது!இதில் விளக்கி வைத்தவர்கள் யார் என்பது கேள்வியாகி வளைந்து நிற்கின்றது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக