தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, October 26, 2017

பிரித்தானியாவில் இலங்கை தமிழ் குடும்பத்துக்கு கிடைத்த சிறந்த சமையல்காரர் அங்கீகாரம் !


பிரித்தானியாவில் இலங்கையர்களால் நடத்தி செல்லப்படும் உணவகம் ஒன்றுக்கு, சிறந்த உணவமாக தெரிவு செய்யப்பட்டு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் நடத்தப்பட்ட ஒரு பொது வாக்கெடுப்புக்குப் பின்னர் இலங்கை குடும்பத்தினால் நடத்தப்படும் உணவகம் ஒன்று ஆண்டின் Harrow பகுதியின் சிறந்த உணவகமாக முடிசூட்டப்பட்டுள்ளது.

Field End வீதி, Pinner பகுதியில் “விருந்து” என்ற பெயரில் நடத்தப்படும் இந்த உணவகமே இவ்வாறு சிறந்த உணவகமாக தெரிவாகியுள்ளது.

லண்டன் என்பதால் உண்மையான இலங்கை உணவின் அனுபவத்தை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது, மற்றும் அதன் வாடிக்கையாளர்களுக்கு சுவையூட்டும் உணவுகளை “விருந்து” உணவகம் வழங்கி வருகின்றது.

குறித்த உணவகம் The Harrow Times வெளியிடப்பட்ட இறுதிப்பட்டியலின் முதல் இடத்தில் உள்ளது.

இலங்கையை சேர்ந்த ரவி மற்றும் நிர்திகா ரவிதாசன் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் விருந்து உணவகம் இயங்கி வருகின்றது. கணவன் மற்றும் மனைவி இருவரும் தமது சொந்த கூட்டு முயற்சிகளினால் மிகவும் ஆர்வத்துடன் உணவகத்தை நடத்தி வருகின்றனர்.

தங்கள் சொந்த திறமைகளையும் பாரம்பரியத்தையும் கொண்டு ஏதோ ஒன்றைத் தயாரிக்க முடியும் என தாம் நம்பியதாக ரவி குறிப்பிட்டுள்ளார்.
நிறைய இலங்கை உணவகங்கள் இருந்தன என்பதை நாங்கள் கவனித்தோம். எனினும் பெரும்பாலான நேரங்களில் பொருட்கள் மற்றும் உணவுகள் நாங்கள் எதிர்பார்த்ததனை போல் காணப்படவில்லை.

நாம் சிறந்ததைச் செய்ய முடியும் என நினைத்தோம், அதனால் எல்லாவற்றையும் புதிதாக உருவாக்கினோம், நம்பகமானதாக மாற்றினோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரவி மற்றும் அவரது மனைவியினால் தயாரிக்கப்படுகின்ற ரோல்ஸ், கறி மற்றும் கொத்து ரொட்டி ஆகியவைகள் சிறப்பானதாக காணப்படும் என அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய இந்த ஆண்டிற்கான சிறந்த உணவகமாக விருந்து உணவகம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

http://news.lankasri.com/uk/03/135354

No comments:

Post a Comment